என் மலர்tooltip icon

    டெல்லி

    • தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
    • இந்தியா கூட்டணி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியது.

    இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

    அதாவது, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியமைப்பை அவமானப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தலின் போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சட்டடுவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாரை தகுதி நீக்கம் செய்ய இம்பீச்மண்ட் மோஷன் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று காலையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
    • இதுபோன்ற சம்பவங்களுக்கு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

    இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

    சுதந்திர தின விடுமுறையை அடுத்து இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியது.

    இதனால் மக்களவை மத்திய 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை எச்சரித்த சபாய்நகர் ஓம் பிர்லா, "நீங்கள் கோஷமிடும் அதே சக்தியுடன் கேள்விகளைக் கேட்டால், நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும். மக்கள் உங்களை அரசாங்க சொத்துக்களை அழிக்க இங்கு அனுப்பவில்லை, மேலும் அரசாங்க சொத்துக்களை அழிக்க எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.

    நீங்கள் அரசாங்க சொத்துக்களை அழிக்க முயற்சித்தால், நான் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நாட்டு மக்கள் உங்களைப் பார்த்து வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்கு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் உங்களை மீண்டும் எச்சரிக்கிறேன். அரசாங்க சொத்துக்களை அழிக்க முயற்சிக்காதீர்கள். இது உங்களுக்கு எனது வேண்டுகோள்" என்று தெரிவித்தார்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் துவாராகாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று காலையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடயவியல் நிபுணர்களுடன் மிரட்டல் வந்த பள்ளி கல்லூரிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். மின்னஞ்சல் அனுப்பியவர் யார், எங்கிருந்து மின்னஞ்சல் அனுப்புப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதமும் இதேபோல் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்.
    • தே.ஜ.கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    1957 அக்டோபர் 20-ல் திருப்பூரில் பிறந்தார்.

    இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ. முடித்துள்ளார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 5 முறை போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

    கோவையில் பா.ஜ.க. வலுவாகக் காலூன்றியபோது முக்கிய முகமாக இருந்தார்.

    2004 முதல் 2006 வரை தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தார்.

    அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

    2014-ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    பா.ஜ.க. தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

    எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ள மூன்றாவது தமிழர்.

    தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த உலகக் கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

    இந்நிலையில்,ரோகித் சர்மா இந்திய அணிக்கு அவசியம் என முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் கூறியதாவது:

    ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான கடினமான இறுதிப்போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

    ஒரு பக்கம் ரோகித் சர்மாவின் பேட்டிங், மறுபக்கம் மற்ற வீரர்களின் பேட்டிங். அந்த ஆட்டம் அவரால் 45 வயது வரை விளையாட முடியும் என்பதை நிரூபித்தது.

    தேவைப்பட்டால் தினமும் 10 கிலோமீட்டர் அவரை ஓட வையுங்கள். அப்படி அவரை பயிற்சி செய்ய சொன்னால் நிச்சயம் 45 வயது வரை அவரால் விளையாட முடியும். அடுத்த 5 வருடங்களுக்கு ரோகித் சர்மா நிச்சயமாக நமக்கு தேவை.

    ரோகித் சர்மா போன்ற வீரர்களை அணியிலிருந்து தூக்கி எறியக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்தால், இதே வீரர்களை வைத்து யாராலும் வெல்ல முடியாத ஒரு அணியை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

    யோகராஜ் சிங் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச விண்வெளி மையம் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது.
    • சுபான்ஷு சுக்லா தனது குடும்பத்தினருடன் நேற்று காலை இந்தியா வந்தடைந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, 3 பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடந்த ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த ஜூலை 15-ல் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இந்தப் பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. நேற்று காலை இந்தியா வந்தடைந்த அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்

    இந்நிலையில், வளர்ச்சியடைந்த இந்தியாவில் விண்வெளி திட்டங்களில் முக்கியமான ஒன்றான சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல் முறையாக இந்தியர் சென்றது தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.

    • பிசிசிஐ சார்பில் கோலிக்கு முறையான பிரியாவிடை கூட அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
    • இவ்வளவு சேவை செய்த ஒரு மகத்தான வீரருக்கு சிறப்பான பிரியாவிடை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தனர். அவர்களது இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலியின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கார்சன் காவ்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக கார்சன் காவ்ரி வி.கே.லால்வானி ஷோவில் பேசியதாவது:

    விராட் கோலி மேலும் இரண்டு ஆண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கலாம்.

    பிசிசிஐ சார்பில் கோலிக்கு முறையான பிரியாவிடை கூட அளிக்கப்படவில்லை.

    விராட் கோலியின் திடீர் ஓய்வு ஒரு மர்மம். அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து விளையாடியிருக்கலாம். ஆனால், ஏதோ ஒன்று அவரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெறச் செய்துள்ளது.

    துரதிர்ஷ்டவசமாக, அவர் ஓய்வு பெற்றபோது பிசிசிஐ அவருக்கு முறையான பிரியாவிடை அளிக்கவில்லை. பிசிசிஐ-க்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் இவ்வளவு சேவை செய்த ஒரு மகத்தான வீரருக்கு சிறப்பான பிரியாவிடை வழங்கியிருக்க வேண்டும்.

    விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இந்திய அணி நிர்வாகத்தின் உள்நாட்டு அரசியலுக்கு பலியாகிவிட்டனர்.

    பிசிசிஐ-க்குள் நடக்கும் உள்நாட்டு அரசியல் புரிந்து கொள்ள முடியாதது. இதுவே விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு காரணமாக இருக்கலாம். ரோகித் சர்மாவும் முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.

    அவர்கள் வெளியேறும்படி கேட்கப்பட்டனர். அவர்கள் தானாக வெளியேற விரும்பவில்லை. தொடர்ந்து விளையாடவே விரும்பினார்கள். ஆனால், தேர்வுக் குழுவுக்கும், பிசிசிஐ-க்கும் வெவ்வேறு திட்டங்கள் இருந்தன. இது ஒருவித அற்ப அரசியல் என தெரிவித்தார்.

    • சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
    • இறுதி மூச்சு உள்ளவரை தேசத்துக்காக உழைப்பேன் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர கவர்னராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், துணை ஜனாதிபதி வேட்பாளராக என்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீதான நம்பிக்கைக்கும் தேசத்திற்கு சேவையாற்ற வாய்ப்பளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது இறுதி மூச்சு உள்ளவரை தேசத்துக்காக உழைப்பேன் என உறுதி அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.
    • தேர்தல் ஆணையம் முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியது.

    இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

    அதாவது, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியமைப்பை அவமானப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தலின் போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சட்டடுவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் ஞானேஷ் குமார் கொடுத்த விளக்கத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், பீகார் SIR இன் போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    தேர்தல் ஆணையத்தின் கடுமையான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், இந்த 65 லட்சம் வாக்காளர்களின் அனைத்து விவரங்களுடனும் தேடக்கூடிய வடிவத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வாக்காளர் அடையாளச் சான்றாக ஆதார் ஐடிகளைப் பயன்படுத்துவதையும் அது அனுமதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல்கள் ஒவ்வொன்றையும் தேர்தல் ஆணையம் எதிர்த்தது.

    தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை என்று கூறுகின்றனர்.

    மலையளவு ஆதாரங்கள் இருந்தபோதிலும், மிகவும் லேசாக அவர்கள் இதை சொல்வது நகைப்புக்குரியது. குறிப்பாகராகுல் காந்தி எழுப்பிய கூர்மையான கேள்விகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை.

    இப்போது முக்கியமானது இதுதான். பீகார் SIR செயல்முறை குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆணையம் நிறைவேற்றுமா? அது அரசியலமைப்பு ரீதியாக அவ்வாறு செய்யக் கடமைப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையத்தின் சொந்த தரவுகளால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளை வெறுமனே கூறியதுதான் தேர்தல் ஆணையருக்கு அச்சுறுத்தலாக தெரிகிறது. தேர்தல் ஆணையம் திறமையின்மையோடு மட்டும் இல்லாமல் அப்பட்டமான பாகுபாட்டுடன் செயல்படுவதும் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், தேர்தலின்போது ஏன் சுட்டிக்காட்டவில்லை என்ற ஆணையத்தின் கருத்தை குறிப்பிட்டு ராகுலின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

    • அவரது கடந்த கால உறவுக்கான தண்டனை என்று தெரிவித்துள்ளார்.
    • இளைய மகளிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஹவுஸ் காசி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.

    டெல்லியில் 39 வயது மகன், தனது 65 வயது தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    புகாரின்படி, தயார் தனது இளம் வயதில் தகாத உறவில் இருந்ததாக கூறி, ஆகஸ்ட் 11 அன்று இரவு 9:30 மணியளவில், தனது தாயை தனிஅறையில் பூட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை அவரது கடந்த கால உறவுக்கான தண்டனை என்று தெரிவித்துள்ளார்.

    மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14 அன்று இரண்டாவது முறையாகவும் அவரை தாயை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

    மறுநாள், தாய் தனது இளைய மகளிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஹவுஸ் காசி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மகன் கைதுசெய்யப்பட்டார்.  

    • ஆறு முக்கிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
    • வாக்காளர் பட்டியலில் பலரது முகவரி '0' என இருப்பதை ராகுல் சுட்டிக்காட்டியிருந்தார்.

    தேர்தல் ஆணையம் முறைகேடு செய்து பாஜகவுக்கு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

    ஒரே வாக்காளர் பல இடங்களில் இருப்பது, பல மாநிலங்களில் ஒரே நபர் வாக்காளராக இருப்பது, போலி முகவரிகள், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், மங்கலான புகைப்படங்கள், மற்றும் படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்துவது போன்ற ஆறு முக்கிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார்.

    அப்போது வாக்காளர் பட்டியலில் பலரது முகவரி '0' என இருப்பதை ராகுல் சுட்டிக்காட்டியதற்கு பதிலளித்த அவர், "நாட்டில் பலருக்கும் தங்குவதற்கு வீடு இல்லை. இரவில் சாலையோரம், மேம்பாலத்துக்கு கீழே உறங்குவார்கள். ஆனால், அவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

    அதனால்தான், முகவரியில் '0' என குறிப்பிட்டிருக்கும். ஏழைகளை போலி வாக்காளர்கள் என எப்படிச் சொல்ல முடியும்?" என தெரிவித்தார்.

    தொடர்ந்து, "வாக்காளர்களை குறிவைத்து, தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். பொய் குற்றச்சாட்டுகளைக் கண்டு மக்களும் அஞ்மாட்டார்கள். தேர்தல் ஆணையமும் பயப்படாது" என்று தெரிவித்தார். 

    • ஆறு முக்கிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
    • 16 நாட்கள் வாக்காளர் உரிமை யாத்திரையை ராகுல் காந்தி இன்று தொடங்கினார்.

    தேர்தல் ஆணையம் முறைகேடு செய்து பாஜகவுக்கு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

    ஒரே வாக்காளர் பல இடங்களில் இருப்பது, பல மாநிலங்களில் ஒரே நபர் வாக்காளராக இருப்பது, போலி முகவரிகள், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், மங்கலான புகைப்படங்கள், மற்றும் படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்துவது போன்ற ஆறு முக்கிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது.

    இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த இரண்டு தவிர வேறு வழியில்லை என்றும், ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் வரவில்லை என்றால், குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். 

    இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பீகாரில் 1,300 கி.மீ. தொலைவுக்கு 16 நாட்கள் வாக்காளர் உரிமை யாத்திரையை ராகுல் காந்தி இன்று தொடங்கினார். 

    ×