என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அரசியல் விளையாட்டுக்கு பலியான ரோகித் சர்மா, விராட் கோலி: முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்
    X

    அரசியல் விளையாட்டுக்கு பலியான ரோகித் சர்மா, விராட் கோலி: முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்

    • பிசிசிஐ சார்பில் கோலிக்கு முறையான பிரியாவிடை கூட அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
    • இவ்வளவு சேவை செய்த ஒரு மகத்தான வீரருக்கு சிறப்பான பிரியாவிடை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தனர். அவர்களது இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலியின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கார்சன் காவ்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக கார்சன் காவ்ரி வி.கே.லால்வானி ஷோவில் பேசியதாவது:

    விராட் கோலி மேலும் இரண்டு ஆண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கலாம்.

    பிசிசிஐ சார்பில் கோலிக்கு முறையான பிரியாவிடை கூட அளிக்கப்படவில்லை.

    விராட் கோலியின் திடீர் ஓய்வு ஒரு மர்மம். அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து விளையாடியிருக்கலாம். ஆனால், ஏதோ ஒன்று அவரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெறச் செய்துள்ளது.

    துரதிர்ஷ்டவசமாக, அவர் ஓய்வு பெற்றபோது பிசிசிஐ அவருக்கு முறையான பிரியாவிடை அளிக்கவில்லை. பிசிசிஐ-க்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் இவ்வளவு சேவை செய்த ஒரு மகத்தான வீரருக்கு சிறப்பான பிரியாவிடை வழங்கியிருக்க வேண்டும்.

    விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இந்திய அணி நிர்வாகத்தின் உள்நாட்டு அரசியலுக்கு பலியாகிவிட்டனர்.

    பிசிசிஐ-க்குள் நடக்கும் உள்நாட்டு அரசியல் புரிந்து கொள்ள முடியாதது. இதுவே விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு காரணமாக இருக்கலாம். ரோகித் சர்மாவும் முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.

    அவர்கள் வெளியேறும்படி கேட்கப்பட்டனர். அவர்கள் தானாக வெளியேற விரும்பவில்லை. தொடர்ந்து விளையாடவே விரும்பினார்கள். ஆனால், தேர்வுக் குழுவுக்கும், பிசிசிஐ-க்கும் வெவ்வேறு திட்டங்கள் இருந்தன. இது ஒருவித அற்ப அரசியல் என தெரிவித்தார்.

    Next Story
    ×