என் மலர்
டெல்லி
- பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர்.
- சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது
ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் தன்கர் பெற்றதை விட இப்போது பாஜக தலைமை தற்போது சற்று பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வாழ்த்தினார்.
- சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது
- மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் தன்கர் பெற்றதை விட இப்போது பாஜக தலைமை தற்போது சற்று பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார்.
- 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டது.
- 1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை.
புதுடெல்லி:
ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி. பர்துருஹரி மெஹ்தாப், மக்களவையில் ரூ.2,000 நோட்டுகள் தொடர்பாக சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கியின் தகவல்படி, 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதியன்று ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கடந்த ஜூலை 31-ந்தேதியன்று ரூ.6,017 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது 1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
- ஆகஸ்ட் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும்.
ஜெகதீப் தன்கர் உடனலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்.பி. கனிமொழி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
நாளை மறுநாள் ஆகஸ்ட் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பதால், இன்று வேட்பாளரின் பெயரை வெளியிட இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இன்று மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடுகிறார்.
- மக்களவையை கலைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் SIR சர்ச்சை தொடர்பாக 'இந்தியா' கூட்டணி தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளது.
நேற்று இந்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் நேற்று மாலை காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ, சமாஜ்வாடி கட்சி, திமுக, டிஎம்சி மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.
அதில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவின் ஊதுகுழலாக (mouthpiece) பேசுவதாகவும், SIR பட்டியல் மற்றும் முறைகேடுகள் குறித்த தங்கள் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கத் தவறிவிட்டதாகவும் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் பேசுகையில், " தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடுகிறார். வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. ஜனநாயகம் அதைச் சார்ந்ததுதான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் அதைப் பாதுகாக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளை கேள்வி எழுப்பி தாக்குகிறது. தேர்தலுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் ஏன் இவ்வளவு அவசரமாக SIR மேற்கொள்ளப்பட்டது என்பதை விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். அவர்களின் விவகாரங்களை மறைப்பது ஜனநாயகத்தின் உணர்வை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த காலங்களில் போலி வாக்காளர் அட்டைகள் பிரச்சினையை எழுப்பியதாகவும், அது இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மைத்ரா கூறினார்.
மோசடி வாக்காளர் பட்டியல்களுக்கு துணைபோன தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல்கள் மோசடி வாக்காளர் பட்டியலுடன் நடத்தப்பட்டன என்பது உண்மையாக இருந்தால், தேர்தல் ஆணையம் மீது வழக்குத் தொடர வேண்டும், மக்களவையை கலைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சமாஜ்வாடி காட்சியை சேர்ந்த தலைவர் ராம்கோபால் யாதவ் பேசுகையில், "ராகுல் காந்தி புகார் அளித்த பிறகு தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கோருகிறது. 2022 ஆம் ஆண்டில் 18,000 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக சமாஜ்வாதி கட்சி புகாருடன் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தது. ஆனால் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் அவசரமாக திருத்தம் செய்வது குறித்து ஆளும் கட்சி ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்தார்.
- தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட லோகேஷ் டகர் என்ற தீயணைப்பு வீரரும் காயமடைந்தார்.
- உயிரிழந்த நான்கு பேரும் கடைக்குள் சிக்கியிருந்தனர்.
டெல்லியில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்டதீ விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு டெல்லியில் உள்ள ராஜா கார்டன் பகுதியில், மகாஜன் எலெக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த நான்கு பேரும் கடைக்குள் சிக்கியிருந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டெடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஐந்து தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட லோகேஷ் டகர் என்ற தீயணைப்பு வீரரும் காயமடைந்தார்.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
- சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
- செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி தனது இல்லத்தில் இன்று மாலை பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில், இந்தியாவின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்து துறைகளிலும் விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரததிற்காக வழிவகை, வாழ்க்கை முறை வணிகம், தொழில் செய்வதை எளிமைப்படுத்துவதற்கும் செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்களுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
- விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பினார் சுபான்ஷு சுக்லா.
- பயணத்தின்போது 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி பிளோரிடாவில் இருந்து புறப்பட்டார். அவர் சென்ற விண்கலம் ஜூன் 25ஆம் தேதி விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. ஜூலை 15ஆம் தேதி பூமிக்கு திரும்பினார்.
இதன்மூலம் விண்வெளிக்கு சென்ற 2ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போதைய இந்த விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனைப் படைத்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, சுபான்ஷு சுக்லாவை தன்னுடைய பிரதம மந்திரி இல்லத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
விண்வெளி ஆய்வு மையத்தில் 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.
- தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு.
- தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றால், மாநிலங்களில் ஆளும் எதிர்க்கட்சிகளை சட்டசபையை கலைக்க வேண்டும்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றம்சாட்டிய நிலையில், எதிர்க்கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில் பாஜக செய்தி தொடர்பாளரான சம்பித் பத்ரா, தேர்தல் ஆணையம் நியாயமற்றது என்றால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சட்டசபையை கலையுங்கள் என எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பித் பத்ரா கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் குழப்பமான சூழ்நிலை மூலம் அரசியல் ஆதாயம் அடைய விரும்புகிறார்கள். அது அவர்களுடைய முயற்சி. ஒவ்வொரு தேர்தலில் தோல்விமேல் தோல்வி அடைந்து வருவதின் வெளிப்பாடுதான். இந்த தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டு. எந்தவொரு விலை கொடுத்தாவது, காந்தி குடும்பம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே எண்ணம்.
தவறான வாக்காளர் பட்டியல் என்று குற்றம்சாட்டி மக்களவையை கலைக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார்கள். ஆனால், மேற்கு வங்காளம், தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டசபையை கலைக்க வேண்டும். தேர்தல் நடைமுறை நியாயமற்றது என நினைத்தால், சட்டசபையை கலையுங்கள்.
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.
- ஷிபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் குறித்து விவாதம் நடைபெற்றது.
- எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் விண்வெளி வீரர் ஷிபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் குறித்து இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி பீகார் மாநில SIR விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலையில், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாட்டின் பெருமைய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி அரசியலை தாண்டி இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி, அவை நடைபெறாமல் தடுங்கல் ஏற்படுத்தியது மிகவும் துரதிருஷ்டவசமானது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விக்ஷித் பாரத் விண்வெளி திட்டத்திற்கு முக்கியமான, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது தொடர்பாக விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- கேரள மாநிலத்தில் ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவை கடக்க 12 மணி நேரம் ஆவதால் பயணிகள் அவதி.
- அப்படி இருக்கும்போது ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி.
கேரள மாநிலம் எடப்பள்ளி- மன்னுத்தி இடையிலான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை கடப்பதற்கு பதிலாக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கட்டணம் வசூலிக்க கேரள மாநிலம் உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு மனு இன்று நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்ஜாரியா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் "நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்தில் இந்த முனையில் இருந்து அந்த முனைக்கு சென்று விடலாம். ஆனால் கூடுதலாக 11 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அத்துடன் பயணிகள் சுங்கச் கட்டணம் செலுத்துகின்றனர். 12 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்றால், சுங்கக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.
நாங்கள் எல்லாக் காரணிகளையும் பரிசீலனை செய்வோம். இது தொடர்பாக உத்தரவை ஒத்திவைக்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- வருகிற 21ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மதியம் பிரதமர் மோடி சந்தித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வருகிற 21ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.






