என் மலர்tooltip icon

    இந்தியா

    EC நியாயமற்றதாக இருந்தால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டசபைகளை கலைத்து விடுங்கள்: பாஜக சாடல்
    X

    EC நியாயமற்றதாக இருந்தால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டசபைகளை கலைத்து விடுங்கள்: பாஜக சாடல்

    • தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு.
    • தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றால், மாநிலங்களில் ஆளும் எதிர்க்கட்சிகளை சட்டசபையை கலைக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றம்சாட்டிய நிலையில், எதிர்க்கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

    இந்த நிலையில் பாஜக செய்தி தொடர்பாளரான சம்பித் பத்ரா, தேர்தல் ஆணையம் நியாயமற்றது என்றால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சட்டசபையை கலையுங்கள் என எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக சம்பித் பத்ரா கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகள் குழப்பமான சூழ்நிலை மூலம் அரசியல் ஆதாயம் அடைய விரும்புகிறார்கள். அது அவர்களுடைய முயற்சி. ஒவ்வொரு தேர்தலில் தோல்விமேல் தோல்வி அடைந்து வருவதின் வெளிப்பாடுதான். இந்த தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டு. எந்தவொரு விலை கொடுத்தாவது, காந்தி குடும்பம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே எண்ணம்.

    தவறான வாக்காளர் பட்டியல் என்று குற்றம்சாட்டி மக்களவையை கலைக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார்கள். ஆனால், மேற்கு வங்காளம், தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டசபையை கலைக்க வேண்டும். தேர்தல் நடைமுறை நியாயமற்றது என நினைத்தால், சட்டசபையை கலையுங்கள்.

    இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

    Next Story
    ×