என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் ஆணையத்தின் விளக்கம் நகைப்புக்குரியது - வாக்கு திருட்டு குற்றச்சாட்டில் காங்கிரஸ் உறுதி
    X

    தேர்தல் ஆணையத்தின் விளக்கம் நகைப்புக்குரியது - வாக்கு திருட்டு குற்றச்சாட்டில் காங்கிரஸ் உறுதி

    • தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.
    • தேர்தல் ஆணையம் முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியது.

    இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

    அதாவது, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியமைப்பை அவமானப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தலின் போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சட்டடுவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் ஞானேஷ் குமார் கொடுத்த விளக்கத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், பீகார் SIR இன் போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    தேர்தல் ஆணையத்தின் கடுமையான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், இந்த 65 லட்சம் வாக்காளர்களின் அனைத்து விவரங்களுடனும் தேடக்கூடிய வடிவத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வாக்காளர் அடையாளச் சான்றாக ஆதார் ஐடிகளைப் பயன்படுத்துவதையும் அது அனுமதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல்கள் ஒவ்வொன்றையும் தேர்தல் ஆணையம் எதிர்த்தது.

    தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை என்று கூறுகின்றனர்.

    மலையளவு ஆதாரங்கள் இருந்தபோதிலும், மிகவும் லேசாக அவர்கள் இதை சொல்வது நகைப்புக்குரியது. குறிப்பாகராகுல் காந்தி எழுப்பிய கூர்மையான கேள்விகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை.

    இப்போது முக்கியமானது இதுதான். பீகார் SIR செயல்முறை குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆணையம் நிறைவேற்றுமா? அது அரசியலமைப்பு ரீதியாக அவ்வாறு செய்யக் கடமைப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையத்தின் சொந்த தரவுகளால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளை வெறுமனே கூறியதுதான் தேர்தல் ஆணையருக்கு அச்சுறுத்தலாக தெரிகிறது. தேர்தல் ஆணையம் திறமையின்மையோடு மட்டும் இல்லாமல் அப்பட்டமான பாகுபாட்டுடன் செயல்படுவதும் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், தேர்தலின்போது ஏன் சுட்டிக்காட்டவில்லை என்ற ஆணையத்தின் கருத்தை குறிப்பிட்டு ராகுலின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×