என் மலர்
டெல்லி
- தங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக வீராங்கனைகளும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
- இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து டெல்லி துணை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
குறிப்பாக பஜ்ரங் புனியா தனது பத்ம ஸ்ரீ விருதை மோடியின் இல்லத்தின் முன் இருந்த சாலையில் வைத்துவிட்டுச் சென்றது பரபரப்பைக் கிளப்பியது. போராட்டத்தை ஒடுக்க அரசு கடுமையான முறைகளைப் பிரயோகித்தது. ஆனாலும் வீராங்கனைகள் விடாப்பிடியாக போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.
பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பிரிஜ் பூஷன் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க இருந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பை டெல்லி போலீஸ் வாபஸ் பெற்றுள்ளதாக வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக வீராங்கனைகளும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து இருந்து வாபஸ் பெற்ற பாதுகாப்பை உடனடியாக மீண்டும் வீராங்கனைகளுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து டெல்லி துணை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பை வாபஸ் பெறவில்லை என்று டெல்லி போலீஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உணவகத்தில் ஆர்டர் செய்த உணவை வாங்க 5 நிமடங்கள் ஆனது.
- வீடியோ பதிவு இணையத்தில் வைராவதுடன், நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
உணவகத்தில் ஆர்டர் செய்த உணவை வாங்க 5 நிமடங்கள் ஆனது- It took 5 minutes to get the food ordered from the restaurantபுதுடெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர், முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் தான் 20 ரூபாய் சாம்பாதிக்க எவ்வளவு உழைக்க வேண்டி இருக்கிறது என இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோப் பதிவு வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக அந்த வீடியோவில்," ரூ 20 சம்பாதிக்க ஒரு சொமாட்டோ டெலிவரி ஏஜென்ட் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறனே்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறகு, அந்த நபர் ஆர்டர் ஒன்றை ஏற்றுக்கொண்டார். அதற்காக அவர் உணவகத்திற்குச் செல்ல 1.5 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆர்டர் செய்த உணவை வாங்க 5 நிமடங்கள் ஆனது.
பிறகு, அவர் ஆர்டரை வழங்க வேண்டிய இடம் உணவகத்திலிருந்து 650 மீட்டர் தொலைவில் இருந்தது. ஆர்டரை டெலிவரி செய்த பிறகு, அவர் அதை ஆப்பில் அப்டேட் செய்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.20 சம்பாதித்துள்ளதாக அறிவிப்பு வந்தது. இதனை அந்த நபர் அந்த வீடியோவில் காண்பித்தார்.
இந்நிலையில், இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைராவதுடன், நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில், சிலர் ரூ.20 சம்பாதிக்க இவ்வளவு உழைக்க வேண்டுமா என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஒரு சிலர், "மக்கள் டெலிவரி ஏஜெண்டுகளை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களிடம் கனிவான நடத்தையை வெளிப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
- பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்தது. இன்றைய விசாறணையின் போது வழக்கு தொடர்பாக கொல்கட்டா காவல் துறை மற்றும் சிபிஐ சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை துவங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை."
"பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்," என்று தெரிவித்தார்.
- கொல்கத்தா காவல் துறை சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை.
- சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் சிபிஐ விசாரணை ஐந்தாம் நாளில் தான் துவங்கியது. சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது."
"கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாக காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இது மிகவும் கவலை அடையச் செய்துள்ளது."
இதை கேட்ட சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், இந்த வழக்கில் எப்போது உடற்கூராய்வு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த கபில் சிபல், மாலை 6.10 முதல் இரவு 7.10 வரையிலான காலக்கட்டத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார்.
இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்பதால், உடற்கூராய்வு செய்ய்பட்டது. இந்த வகையில், பஞ்சநாமா எப்போது தயாரிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் கொல்கத்தா காவல் துறையினர் சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை. இந்த சம்பவத்திற்கு பொருப்பேற்க வேண்டிய காவல் துறை அதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைத்துவர கபில் சிபலுக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணை அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதியான ஜெ.பி. பர்திவாலா, "எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் உங்கள் மாநிலம் பின்பற்றியதை போன்ற வழிமுறைகளை இதுவரை நான் பார்த்ததே இல்லை," என்றார்.
குற்ற சம்பவம் இரவு நேரத்தில் அரங்கேறி இருக்கிறது, எனினும் காவல் துறையினர் 18 மணி நேரங்கள் கழித்து தான் சம்பவ இடத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். காவல் துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்தை கைப்பற்றும் முன்பே உடற்கூராய்வு நிறைவுபெற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கிருந்து மீண்டும் காவல் நிலையம் சென்ற பிறகு நள்ளிரவு 11.30 மணிக்கு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும் போது, "உடற்கூராய்வு முடிந்த நிலையில் நள்ளிரவு 11.45 மணிக்கு தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. மேலும் மூத்த மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் உடன் பணியாற்றியவர்கள் இந்த சம்பவத்தில் ஏதோ குளறுபடி நடப்பதை உணர்ந்து தான், வீடியோ பதிவு செய்ய வலியுறுத்தினர்," என்றார்.
"பெண் டாக்டர் கொலை வழக்கில் கற்பழிப்பு-கொலை சம்பவம் குறித்து முதலில் பதிவு செய்த கொல்கத்தா காவல் துறை அதிகாரி அடுத்தக்கட்ட விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்," என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 33வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.
ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
- உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும்
கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் நாள் விசாரணையில் மேற்கு வங்காள அரசையும், போலீசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தாமதமாக வழக்குப் பதிந்தது ஏன்? மருத்துவமனைக்குள் கலவரக்காரர்கள் எப்படி நுழைந்தனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களிடம் அரசு தங்களின் பலத்தைக் காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் நடத்திய ரெசிடெண்ட் மருத்துவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி டி,ஒய்.சந்திரசூட் வாக்குறுதி அளித்தார். மேலும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார்.

- 10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை.
- 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.
புதுடெல்லி:
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடு முழுவதும் 56 மாநில கல்வி வாரியங்கள் மற்றும் 3 தேசிய கல்வி வாரியங்கள் உட்பட 59 பள்ளி கல்வி வாரியங்கள் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில், பிளஸ்-2 தேர்வை அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவிகள் எழுதியுள்ளனர், ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவிகளே தேர்வு எழுதியுள்ளனர்.
10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை. காரணம் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை, 28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதேபோல், சுமார் 32.4 லட்சம் மாணவர்கள், 12-ம் வகுப்பை தாண்டவில்லை. இவர்களில் 5.2 லட்சம் பேர் தேர்வே எழுதவில்லை. 27.2 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மத்திய கல்வி வாரியத்தில் மாணவர்கள் தோல்வி 6 சதவீதம். மாநில வாரியங்களின் தோல்வி 16 சதவீதம். பிளஸ்-2 தேர்வில், மத்திய வாரியத்தில் தேர்ச்சி பெறாதோர் 12 சதவீதமாகவும், மாநில வாரியங்களின் தேர்ச்சி பெறாதவர்கள் 18 சதவீதமாகவும் உள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.
மத்தியபிரதேச மாநில வாரியத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதில் மாணவிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இன்று முதல் 26ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- வடமேற்கு இந்தியா மிகவும் பரவலான லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 26ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மழையால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய விரிவான முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கூறப்பட்டுள்ளதாவது:-
வடக்கு வங்கதேசத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வங்கம் முழுவதும் மேற்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது, மற்ற வளிமண்டல சீர்குலைவுகளுடன் இணைந்து, இந்தியாவின் பல பகுதிகளில் பரவலான மழையை கொண்டு வர வாய்ப்புள்ளது.
வடமேற்கு இந்தியா மிகவும் பரவலான லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த வாரத்தில் உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட மிகக் கனமழை பெய்யக்கூடும்.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழையுடன், மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் ஓரளவு பரவலாக மழை பெய்யும்.
கொங்கன் மற்றும் கோவாவில் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்ட மிகக் கனமழை பெய்யக்கூடும். மத்திய மகாராஷ்டிராவிலும் இதேபோன்ற முன்னறிவிப்பு இருக்கும்.
தெற்கு தீபகற்பத்தில், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகளில் பரவலாக மழை பெய்யும். இன்று கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு இந்தியாவில் வரும் நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பதவியில் உள்ள 16 எம்.பிக்கள் மீதும் 135 எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் உள்ளன.
- 151 பேரில் அதிகப்படியாக பாஜகவை சேர்ந்த 54 எம்.பி-எம்.எல்.ஏக்கள் மீது இந்த வகை வழக்குகள் உள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் சக பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 86 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகின்றன. ஒரு மணி நேரத்துக்கு 4 வழக்குகள். அதேசமயம் வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கும் பாலியல் குற்றங்கள் பதிவாகும் குற்றங்களை விட பலமடங்கு அதிகம் ஆகும்.
இந்த நிலையில் இதுபோன்ற குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் 151 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் Association for Democratic Reforms (ADR) மற்றும் National Election Watch (NEW) ஆகிய அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையின்மூலம் இது தெரியவந்துள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் 2019 முதல் 2024 வரை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது பதவியில் உள்ள 16 எம்.பிக்கள் மீதும் 135 எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. இந்த 151 பேரில் 2 எம்.பிக்கள் மற்றும் 14 எம்.எல்.ஏக்கள் என 16 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களே மீண்டும் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.
151 பேரில் அதிகப்படியாக பாரதிய ஜனதா காட்சியை [பாஜகவை] சேர்ந்த 54 எம்.பி-எம்.எல்.ஏக்கள் மீது இந்த வகை வழக்குகள் உள்ளன. அதைத்தொடர்ந்து காங்கிரசில் 23 பேர் மீதும், தெலுங்கு தேசம் கட்சியில் 17 பேர் மீதும் இந்த வகை வழக்குகள் உள்ளன.மாநில வாரியாக அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் மொத்தமாக 25 எம்.பி-எம்எல்.ஏக்கள் மீது இவ்வகை வழக்குகள் உள்ளன. அதற்கடுத்ததாக ஆந்திராவில் 21 பேர் மீதும், ஒடிசாவில் 17 பேர் மீதும் இவ்வகை வழக்குகள் உள்ளன.
- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- ஆகஸ்ட் 23 முதல் 26ம் தேதி வரை அமெரிக்காவில் தங்குகிறார்.
புதுடெல்லி:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 23ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் அங்கு ஆகஸ்ட் 23 முதல் 26ம் தேதி வரை அரசுமுறைப் பயணம் செய்கிறார்.
இந்தப் பயணத்தின்போது ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டினை சந்திக்க உள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார்.
ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
- வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார்.
- புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக போலந்து செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்பிடி இரண்டு நாள் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்து புறப்பட்டார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.
போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்ல இருக்கிறார்.
அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமரின் இந்த பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- மேற்குவங்கத்தில் பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
- தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்
புதுடெல்லி:
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சந்திரசூட், சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க சார்புநிலை காரணமாக பெண் டாக்டர்கள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். நாட்டில் நிலைமை மாறுவதற்கு தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது என குறிப்பிட்டார். மேலும், மருத்துவத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு அருணா சான்பாக் வழக்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் மருத்துவத் துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு வழக்கு அருணா சான்பாக் வழக்கு ஆகும்.
கடந்த 1967-ம் ஆண்டு 25 வயதான செவிலியர் அருணா சான்பாக், மும்பை கே.இ.எம். மருத்துவமனையில் உள்ள அறுவைசிகிச்சைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாய் என்பவருக்கும், அருணாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 1974-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.
1973, நவம்பர் 27-ம் தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் சோகன்லால் பார்த்தா வால்மிகி என்பவர் அருணாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை நெரித்தார். இந்த தாக்குதலால் அருணாவுக்கு மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தன.
சுமார் 40 ஆண்டுக்கு மேலாக அருணா சான்பாக் அதே நிலையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் அருணா சான்பாக்கை கே.இ.எம். மருத்துவமனையின் ஊழியர்களே கவனித்து வந்தனர்.
இதற்கிடையே 2011-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் பிங்கி விரானி என்பவர், அருணா சான்பாக்கை கருணை கொலை செய்ய வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நாடுமுழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், 2011, மார்ச் 7-ம் தேதி இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
அருணா சான்பாக் மூளைச்சாவு அடையவில்லை என்பதால் அவரை கருணை கொலை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
அதேசமயம், அருணாவின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது பாதுகாவலர்களோ கோரிக்கை விடுத்தால் கோர்ட் அனுமதியுடன் அருணாவிற்கான உயிர்காக்கும் கருவிகளை துண்டிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. இதையடுத்து, 2015, மே 18-ம் தேதி நிமோனியா பாதிப்பால் அருணா சான்பாக் உயிரிழந்தார்.
இதில் அருணா சான்பாக்கை தாக்கிய சோகன்லால் பார்த்தா வால்மிகி மீது திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் 7 ஆண்டு சிறை தண்டனைக்குப் பின் சோகன்லால் பார்த்தா வால்மிகி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






