என் மலர்
இந்தியா

20 ரூபாய் சம்பாதிக்க சாகணும்.. வைரலாகும் சொமாட்டோ ஊழியர் வீடியோ

- உணவகத்தில் ஆர்டர் செய்த உணவை வாங்க 5 நிமடங்கள் ஆனது.
- வீடியோ பதிவு இணையத்தில் வைராவதுடன், நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
உணவகத்தில் ஆர்டர் செய்த உணவை வாங்க 5 நிமடங்கள் ஆனது- It took 5 minutes to get the food ordered from the restaurantபுதுடெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர், முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் தான் 20 ரூபாய் சாம்பாதிக்க எவ்வளவு உழைக்க வேண்டி இருக்கிறது என இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோப் பதிவு வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக அந்த வீடியோவில்," ரூ 20 சம்பாதிக்க ஒரு சொமாட்டோ டெலிவரி ஏஜென்ட் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறனே்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறகு, அந்த நபர் ஆர்டர் ஒன்றை ஏற்றுக்கொண்டார். அதற்காக அவர் உணவகத்திற்குச் செல்ல 1.5 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆர்டர் செய்த உணவை வாங்க 5 நிமடங்கள் ஆனது.
பிறகு, அவர் ஆர்டரை வழங்க வேண்டிய இடம் உணவகத்திலிருந்து 650 மீட்டர் தொலைவில் இருந்தது. ஆர்டரை டெலிவரி செய்த பிறகு, அவர் அதை ஆப்பில் அப்டேட் செய்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.20 சம்பாதித்துள்ளதாக அறிவிப்பு வந்தது. இதனை அந்த நபர் அந்த வீடியோவில் காண்பித்தார்.
இந்நிலையில், இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைராவதுடன், நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில், சிலர் ரூ.20 சம்பாதிக்க இவ்வளவு உழைக்க வேண்டுமா என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஒரு சிலர், "மக்கள் டெலிவரி ஏஜெண்டுகளை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களிடம் கனிவான நடத்தையை வெளிப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.