என் மலர்tooltip icon

    பீகார்

    • பூர்னியா மாவட்டத்தில் புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார்.
    • தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர்.

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.

    செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார். ராகுல்காந்தி இன்றயை யாத்திரையின் போது பூர்னியா மாவட்டத்தில் புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார்.

    பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர்.

    இந்நிலையில் பைக்கில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியை நெருங்கிய இளைஞர் ஒருவர் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

    உடனே அங்கிருந்து ஓடிய அவரை துரத்திய ராகுலின் பாதுகாப்பு அதிகாரி அவரது கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • கதிகாரில் உள்ள மக்கானா (அல்லி விதை) விவசாயிகளுடன் வயலில் இறங்கி உற்சாகமாக வேலை செய்தார்.
    • 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை  வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.

    செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார்.

    ராகுல்காந்தி நேற்று, யாத்திரையின் போது கதிகாரில் உள்ள மக்கானா (அல்லி விதை) விவசாயிகளுடன் வயலில் இறங்கி உற்சாகமாக வேலை செய்தார். அவர்களுடன் கலந்துரையாடினார். விவசாயிகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். 

    இந்நிலையில்  ராகுல்காந்தி இன்றயை யாத்திரையின் போது புல்லெட்  பைக்கில் பேரணியாக சென்றார். பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

    இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல் மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சுகு (இமாசலப் பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்

    • பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை.
    • மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.

    பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் பீகாரில் ஆகஸ்ட் 17 முதல் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.

    இதன் ஒரு பகுதியாக இன்று கதிஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    அவர்களின் பிரச்சனைகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார்.

    அதில், இந்தியாவின் 90 சதவீத மக்கானா உற்பத்தி பீகாரில் நடைபெறுகிறது. ஆனால், பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் ஒரு கிலோ மக்கானா ரூ.1000-2000க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு சொற்ப பணமே கிடைக்கிறது.

     இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்-பகுஜன் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.

    "வாக்குத் திருட்டு" அரசாங்கம் இவர்களை மதிக்கவும் இல்லை, கவனித்துக் கொள்ளவும் இல்லை." என்று தெரிவித்தார்.

    • மோடி திறந்து வைத்த பாலம் மறுநாளே இடிந்து விழும்.
    • பாலம் இடிந்து விழுவதில் என்டிஏ அரசு உலக சாதனை படைத்துள்ளதாகவும் தேஜஸ்வி கேலி செய்தார்.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (என்டிஏ கூட்டணி) மற்றும் ஆர்ஜேடி (இந்தியா கூட்டணி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீகார் வந்தார்.

    இந்நிலையில் தேஜஸ்வி வெளிட்ட எக்ஸ் பதிவில், "இன்று, கயாவில் பொய்கள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளின் கடை திறக்கப்படும். எலும்பு இல்லாத நாக்கைக் கொண்ட பிரதமர் பொய்களின் இமயமலையை உருவாக்குவார். ஆனால் பீகார் மக்கள் அவரது பொய் மலைகளை அழிப்பார்கள்" என்று பதிவிட்டார்.

    இதை எதிர்த்து மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ மிலிந்த் நரோட்டி, தேஜஸ்வி மீது புகார் அளித்தார். இதையடுத்து பிரதமரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவைப் பகிர்ந்ததாகக் கூறி, மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்ட காவல்துறை தேஜஸ்வி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது.

    உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரிலும் தேஜஸ்வி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், தேஜஸ்வி மற்றொரு பதிவில் மோடியை மீண்டும் கேலி செய்தார். அதில் நேற்று மோடி திறந்து வைத்த பாலம் மறுநாளே இடிந்து விழும் என்றும், ரிப்பன் வெட்டுவதோடு, பொது நலன் கருதி, பாலம் இடிந்துவிலும் என்று பாலத்தின் இருபுறமும் மற்றொரு எச்சரிக்கை பலகையை நிறுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    பாலம் இடிந்து விழுவதில் என்டிஏ அரசு உலக சாதனை படைத்துள்ளதாகவும் தேஜஸ்வி கேலி செய்தார்.

    தன் மீதான வழக்கு குறித்து பேசிய தேஜஸ்வி, பாஜக உண்மையைப் பற்றி பயப்படுவதாகவும், ஒரு வார்த்தை கூட அவர்களுக்கு குற்றமாகிவிடும் என்றும் கூறினார்.

    பாட்னா மற்றும் பெகுசராய் ஆகியவற்றை இணைக்கும் 1.86 கி.மீ நீள சிமாரியா பாலத்தை மோடி நேற்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.  

    • எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பீகாரில் யாத்திரை தொடங்கியுள்ளார்.
    • இந்த யாத்திரையில் வரும் 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    பாட்னா:

    வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியுள்ளார்.

    இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல் மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சுகு (இமாசலப் பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    • பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன்.
    • முதல்வர், அமைச்சர் அல்லது ஒரு பிரதமர் கூட சிறையில் இருந்தும் அரசாங்கத்தை இயக்க முடியும்.

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    கயா-டெல்லி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், வைஷாலி-கோடெர்மா இடையேயான ரெயில் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பீகார் எல்லா நேரங்களிலும் நாட்டின் முதுகெலும்பாக நின்றுள்ளது. இந்த புனித பூமியில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் நாட்டின் பலமாகும். அது வீண் போகாது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன். அந்த உறுதி நிறைவேற்றுப்பட்டுள்ளது.

    பீகார் மக்களை ராஷ்டிரிய ஜனதா தளம் தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே கருதுகிறது. அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எதுவும் அவர்கள் செய்யவில்லை.

    ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி காலத்தில் கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தன. கல்வி, வேலைவாய்ப்பு தரப்படவில்லை. பல தலைமுறைகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சியின் போது பீகாரில் எந்த பெரிய திட்டமும் முடிக்கப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. தங்கள் பைகளை நிரப்புவதில் மட்டுமே மும்முரமாக இருந்தனர்.

    பீகார் மக்களை தனது மாநிலத்திற்குள் நுழைய விடமாட்டேன் என்று காங்கிரஸ் முதல்வர் ஒருவர் கூறியிருந்தார். பீகார் மக்கள் மீது காங்கிரஸ் கொண்ட வெறுப்பை யாராலும் மறக்க முடியாது. இதை ராஷ்டிரிய ஜனதா தளம் கண்டு கொள்ளவில்லை.

    பீகார் இளைஞர்கள் தங்கள் மாநிலத்தில் வேலை பெறவும், அவர்களுக்கு மரியாதை கிடைக்கவும், அவர்கள் பெற்றோருடன் தங்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடுமையாக உழைத்து வருகிறது.

    பீகாரில் இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டங்கள் ஆகும். சுகாதார உள்கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப்படும்.

    ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் தானாகவே தனது வேலையை இழப்பார். ஆனால் ஒரு முதல்வர், அமைச்சர் அல்லது ஒரு பிரதமர் கூட சிறையில் இருந்தும் அரசாங்கத்தை இயக்க முடியும்.

    சில நாட்களுக்கு முன்பு, சிறையில் இருந்து கோப்புகளில் கையெழுத்திட்டது, அரசாங்க உத்தரவுகள் வழங்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடந்தன.

    தலைவர்களுக்கு அத்தகைய அணுகுமுறை இருந்தால் ஊழலை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும். எனவே ஊழலுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அந்த வரம்பிற்குள் பிரதமரும் வருகிறார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பதவியில் இருந்து நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடுமையான குற்றச்சாட்டில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும்.

    இதன்மூலம் யாராலும் சிறையில் இருந்து கொண்டே ஆட்சி செய்ய முடியாது. யாரும் சிறையில் இருந்த படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் தங்களது பதவிகளை இழக்க வேண்டும்.

    எனவே இந்த மசோதாவுக்கு ஊழல் அரசியல்வாதிகள்தான் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிடுகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , இடதுசாரிகள் எதிர்க்கின்றனர்.  

    • பீகார் எல்லா நேரங்களிலும் நாட்டின் முதுகெலும்பாக நின்றுள்ளது.
    • எனவே ஊழலுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதன்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் ஆரிப் கான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கங்கை நதியின் மேல் தேசிய நெடுஞ்சாலையில் 1.86 கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழிச்சாலையாக, ரூ.1,870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 8.15 கிலோ மீட்டர் நீளமுள்ள அவுண்டா-சிமாரியா மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

    கயா-டெல்லி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், வைஷாலி-கோடெர்மா இடையேயான ரெயில் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    பீகாரில் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

     

    • மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்தனர்.

    பாட்னா:

    பாராளுமன்ற மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அமித்ஷா.

    அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களைக் கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால் மக்களவை அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதை உருவாக்கியவர்களும், நாட்டின் நிறுவனர்களும், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல்வாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக்குப் பிறகும் அவர்கள் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

    ஒரு தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அவர்களால் சிறையில் இருந்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் இந்த மசோதா நல்லதென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • 16 நாட்கள் நடக்கும் இந்த பயணம் வரும் செப்டம்பர் 1 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் முடிவடையும்.
    • அந்த கான்ஸ்டபிள் அதை மறுத்துவிட்டு வலியுடன் நடத்த வீடியோ வைரலாகி வருகிறது.

    வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை எதிர்த்து பீகாரில் கடந்த 17 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கினார். 16 நாட்கள் நடக்கும் இந்த பயணம் வரும் செப்டம்பர் 1 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் முடிவடையும்.

    இந்நிலையில் நேற்று ராகுல் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தவறி ஜீப் முன் விழுந்தார். அவர் மீது ஜீப் ஏறி இறங்கியது.

    உடனடியாக, போலீஸ் அதிகாரிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் வாகனத்தை பின்னுக்குத் தள்ளி காயமடைந்த கான்ஸ்டபிளைக் காப்பாற்றினர்.

    ராகுல் காந்தி தண்ணீர் வழங்கி காயமடைந்த கான்ஸ்டபிளை ஆசுவாசப் படுத்தினார். தனது ஜீப்பில் வந்து அமருமாறு அவரை கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கான்ஸ்டபிள் அதை மறுத்துவிட்டு வலியுடன் நடத்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்து பாஜக ராகுலை விமர்சித்துள்ளது.

    • பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் உரிமை என்ற பெயரில் ராகுல் காந்தி பேரணி.
    • ராகுல் காந்தி பேரணியில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.

    பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகாளர்கள் பெயரை நீக்கிவிட்டது.

    இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி "வாக்காளர்கள் உரிமை" என்ற பெயரில் பேரணி நடத்தி வருகிறார். இந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் கலந்து கொண்டார்.

    அப்போது தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "அடுத்த முறை, நாம் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். எதிர்க்கட்சிகள் இதற்காக பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார். இது, 2029 தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் (இந்தியா கூட்டணி) பிரதமர் வேட்பாளராக பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறிய நிலையில், மற்ற தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

    நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான மோடியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லியார்ஜூன கார்கே செயல்பட்டார். இந்த கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமல் தேர்தல் சந்தித்தது.

    திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விரும்பவில்லை. கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என பரிந்துரை செய்தன. இதற்கு முக்கிய காரணம் 2019 தேர்தலில் காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பிடித்தது.

    மம்தா, கெஜ்ரிவால் பரிந்துரையை கார்கே ஏற்கவில்லை. இதனால் வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்தித்தது.

    இந்த நிலையில்தான் தேஜஸ்வி யாதவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை 2029 தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்
    • தேர்தல் ஆணையத்திடம் முழு நாடும் பிரமாணப் பத்திரம் கேட்கும்

    நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

    அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதனிடையே, பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.

    நேற்று பீகாரின் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காந்தி, "தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பீகார் மாநிலம் கயாவில் மூன்றாவது நாள் 'வாக்காளர் உரிமை' யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். ஜீப்பில் சென்ற ராகுல் காந்திக்கு இருபுறமும் நின்ற பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • வாக்கு திருட்டு என்பது 'பாரத மாதாவின்' ஆன்மா மீதான தாக்குதல்.
    • தேர்தல் ஆணையத்திடம் முழு நாடும் பிரமாணப் பத்திரம் கேட்கும்.

    நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

    அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதனிடையே, பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், பீகாரின் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காந்தி, "வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிடிபட்ட பிறகும் என்னிடம் பிராமண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கேட்கிறார்கள். வாக்கு திருட்டு என்பது 'பாரத மாதாவின்' ஆன்மா மீதான தாக்குதல்.

    தேர்தல் ஆணையத்திடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், முழு நாடும் உங்களிடம் ஒரு பிரமாணப் பத்திரம் கேட்கும். நாங்கள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதியிலும் உங்கள் வாக்கு திருட்டை நாங்கள் கண்டுபிடித்து, மக்கள் முன் வைப்போம்.

    தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்

    ×