என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலையில் நடனமாடி ரீல்ஸ் எடுத்த தேஜஸ்வி யாதவ்.. பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவரை பாருங்கள்! என பாஜக விமர்சனம்
    X

    சாலையில் நடனமாடி ரீல்ஸ் எடுத்த தேஜஸ்வி யாதவ்.. பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவரை பாருங்கள்! என பாஜக விமர்சனம்

    • பீகார் பாட்னாவின் புதிதாக மரைன் டிரைவ் திறக்கப்பட்டது.
    • ஒரு 'பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரால்' மட்டுமே முடியும்.

    பீகார் பாட்னாவின் புதிதாக திறக்கப்பட்ட மரைன் டிரைவ் சாலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜஸ்வி யாதவ், சில இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    16 நாள் நடைபெற்ற 'வாக்காளர் அதிகார யாத்திரை' முடிந்த பிறகு, நள்ளிரவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், தேஜஸ்வி யாதவ் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி இளைஞர்களுடன் ரீல்ஸ் எடுப்பதை காணலாம்.

    இந்த வீடியோவுக்கு பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

    பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நள்ளிரவில் சாலையில் நடனமாடி ரீல்கள் உருவாக்குவது ஒரு 'பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரால்' மட்டுமே முடியும் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    மேலும், " ரீல்கள் உருவாக்கும்போது சாலை விபத்துகளில் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இது அராஜகத்தை ஊக்குவிக்கும் செயல். ஜே.பி.பாதை ஒரு சுற்றுலாத் தலம் அல்ல. பீகார் காவல்துறை இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் மாநிலம் முழுவதும் சாலைகள் ரீல்களால் நிரம்பிவிடும்" எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×