என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • அதானியிடம் லஞ்சம் பற்றி நேரடியாக பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
    • லஞ்சம் வாங்குவதற்காகத்தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அதானி நிறுவனத்தில் இருந்து போடப்பட்ட சூரிய சக்தி மின் ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கோரி கவர்னர் அப்துல் நசீரிடம் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சர்மிளா மனு அளித்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜெகன் மோகன் ரெட்டி நன்கொடை வாங்கியதற்கும் அதானியிடம் லஞ்சம் பற்றி நேரடியாக பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளன. லஞ்சம் வாங்குவதற்காகத்தான் ஜெகன் மோகன் ரெட்டி இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

    அவர் ஊழல் செய்யவில்லை என்றால் தனது பிள்ளைகள் மீது சத்தியம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அதானிக்கும் மோடிக்கும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பயப்படுவதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினர்.

    • ஒரு ஆண்டாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
    • நடிகையிடம் நகை பணங்களை வாங்கியதாக கூறப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கு சினிமா நடிகர் ஸ்ரீதேஜ் (வயது 38). இவர் பல்வேறு படங்களில் துணை நடிகர் மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் தன்னுடன் நடித்து வந்த 37 வயதுடைய துணை நடிகையுடன் ஸ்ரீதேஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஒரு ஆண்டாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    அப்போது துணை நடிகையிடம் நகை பணங்களை வாங்கியதாக கூறப்படுகிறது.


    கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடிகையுடன் பேசுவது, பழகுவதை ஸ்ரீ தேஜ் தவிர்த்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி புறக்கணிப்பதை அறிந்த அவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தனர். மீண்டும் நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேஜ் மீது கற்பழிப்பு மற்றும் மோசடி குறித்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ஸ்ரீதேஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆந்திராவில் அடிக்கல் நாட்டும் விழா 29-ந்தேதி நடைபெற இருந்தது.
    • பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை நைட்ரஜன் பூங்கா, அனகா பள்ளி மாவட்டத்தில் ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வருகிற 29-ந்தேதி நடைபெற இருந்தது.

    இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருந்தார்.

    இதற்காக ஆந்திர பல்கலைக்கழக மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விசாகபட்டினத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக பிரதமர் மோடி ஆந்திரா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை வேறு தேதியில் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.

    • ஐதராபாத்தில் வீட்டு செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி.
    • 150-க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு இனங்கள் உள்ளன.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் மெகா பெட் ஷோ என்ற பெயரில் வீட்டு செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி நடந்தது. இதில் நாய் மற்றும் பூனைகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஏராளமானோர் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை அலங்கரித்து அழைத்து வந்திருந்தனர்.

    500-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 100 பூனைகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன. ஒவ்வொரு விலங்குகளும் தங்களுக்கு ஏற்ற திறமைகளை காட்டி பார்வையாளர்களை கவர்ந்தன.

    மேலும் நாய், பூனைகள் வரிசையாக ஒய்யார நடை போட்டு அசத்தின. இந்த கண்காட்சியை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டு ரசித்தனர்.

    150-க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு இனங்கள் உள்ளன. அவற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.

    நாய்களுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாயை எப்படி பாதுகாப்பாக வளர்ப்பது. அது உங்களை தாக்க வந்தால் எப்படி எதிர் வினையாற்றுவது என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    • ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
    • போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்லூர் அடுத்த எலுட்லாவை சேர்ந்த 13 தொழிலாளர்கள் திம்மம்பேட்டையில் உள்ள வாழைத்தோட்டத்தில் வேலைக்கு சென்றனர்.

    நேற்று மாலை வேலை முடிந்து அனைவரும் ஒரே ஆட்டோவில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    தலைகாரி பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ வந்தபோது எதிரே வந்த ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது.

    ஆட்டோவில் இருந்த நாகம்மா, ராமாஞ்சினம்மா, பாலபெத்தைய்யா மற்றொரு நாகம்மா உட்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரை சேர்ந்த 7 கூலி தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

    • அதானிக்கு அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
    • ஜெகன் மோகன் ரெட்டியை அதானி 3 முறை ரகசியமாக சந்தித்துள்ளார்.

    திருப்பதி:

    சூரிய ஒளி மின்சார ஒப்பந்தம் பெற ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதானி அதிகபட்சமாக ரூ.1,750 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க குற்றப் பத்திரிகையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் அதானி (வயது 62). இவர் இந்தியாவின் 2-வது பணக்காரராகவும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 17-வது இடத்திலும் உள்ளார்.

    துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் கவுதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சார வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர் சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


    இதன் தொடர்ச்சியாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி முன்னாள் சி.இ.ஓ. வினித் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானிக்கு அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

    இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1,750 கோடி வரை அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தபோது தன்னுடைய மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கினால் ரூ.1,750 கோடி தருவோம் என அதானி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநில அரசுக்கு ரூ.1.10 லட்சம் கோடி சுமை ஏற்படும். இது நஷ்டம் என்பது தெரிந்தும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு பல கோடி ரூபாய் வரும் என்று நோக்கத்தில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தபோது தொழில் அதிபர்களை சந்திப்பது வெளிப்படையாக இருந்தது. இது பற்றி பேட்டியும் அளித்தனர்.

    ஆனால் அதானிக்கும், ஜெகன்மோகன் ரெட்டிக்கும் சூரிய ஒளி மின்சாரம் ஒப்பந்தம் செய்வது தொடர்பாக கடுமையான நெருக்கம் இருந்துள்ளது. இதற்காக தாடேப்பள்ளியில் உள்ள அரண்மனையில் ஜெகன் மோகன் ரெட்டியை அதானி 3 முறை ரகசியமாக சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பின்போது அவர்கள் நன்கொடை மற்றும் லஞ்ச பணம் குறித்து மறைமுக வார்த்தைகளால் பேசியுள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் வேக வேகமாக நிறைவேறி உள்ளது.

    மத்திய சூரிய சக்தி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான முன் மொழிவு, அமைச்சர்களின் ஒப்புதல் மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியவை அனைத்தும் சில நாட்களிலேயே நடந்து முடிந்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெகன்மோகன் ரெட்டியை அதானி சந்தித்து ரூ.1,750 கோடி வழங்குவது குறித்து விவாதித்துள்ளார். பின்னர் ஆந்திர அரசாங்கத்துடன் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இதன் மூலம் அதானி குழுமத்திற்கு 20 ஆண்டுகளில் 200 கோடி டாலர் நிகர லாபம் கிடைக்கும் என்று அமெரிக்க அறிக்கை கூறுகிறது.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதானியும் ஜெகன் மோகன் ரெட்டியும், அதிகளவில் ஆதாயம் அடைகிறார்கள். இந்தியாவில் மொத்தமாக அதானி நிறுவனம் ரூ. 2200 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது என்றால் அதில் அதிகபட்சமாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு தான் ரூ.1,750 கோடியை வழங்கி உள்ளது.

    இந்த பணம் பரிமாற்றத்திற்கு பிறகு கிருஷ்ணா பட்டினம் துறைமுகத்தில் மாநில அரசின் பங்கை விற்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

    அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் இந்த மோசடியின் நுட்பமான அம்சங்களை கூட அம்பலப்படுத்தி உள்ளன.

    லஞ்சம் கொடுப்பதற்காக யார் எப்போது எங்கே? எப்படி சந்தித்தார்கள் அவர்களுக்கு இடையே என்ன மாதிரியான கடித பரிமாற்றம் நடந்தது என்பதை வெளிப்படுத்தி உள்ளனர்.

    அமெரிக்காவில் அமர்ந்து கொண்டு ஆந்திராவில் உள்ள தாடே பள்ளி அரண்மனையில் நடந்த கூட்டங்களின் சுருக்கத்தை அவர்கள் தங்கள் குற்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    இது போன்ற விசாரணை நடத்துவது எப்படி நிதி திட்ட முறைகேடுளை எப்படி அம்பலப்படுத்துவது என்பதற்கு இந்த விசாரணை ஒரு சிறந்த உதாரணம்.

    ஆந்திராவில் ஆட்சியை இழந்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட கிடைக்காமல் திண்டாடி வருகிறார். அவர் மீது மணல் மோசடி, மதுபான ஊழல் வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் ஆஜராகாமல் இழுத்தடித்து வருகிறார்.

    அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.1,750 கோடியை லஞ்சம் மற்றும் நன்கொடையாக பெறுவது மிகப்பெரிய குற்றத்தின் கீழ் கணக்கிடப்படுகிறது.

    இந்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது உண்மை. இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகளை சந்தித்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி அமெரிக்காவிலும் விசாரணையை சந்திக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு வாய்ப்பு உள்ளது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீதான இந்த குற்றச்சாட்டு ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நண்பர்களிடம் ஏதோ சொல்ல வந்த வம்சி திடீரென மயங்கி விழுந்தார்.
    • வம்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய வம்சி என்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    ஆந்திர மாநிலம் கர்னூலின் பெனுமடா கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வம்சி என்ற வாலிபர் வந்தார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மணமக்களுக்கு பரிசை வழங்கிய வம்சி பதற்றமான நிலையில் இருந்தார். பின்னர் நண்பர்களிடம் ஏதோ சொல்ல வந்த வம்சி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு வம்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்த வாலிபர் வம்சி பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    சமீப காலமாக உடற் பயிற்சி கூடங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மாரடைப்பால் வாலிபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி மற்றும் ஸ்டெராய்டுகள் ஆகியவை இளம் மாரடைப்புக்கு வழிவகுக்கும் காரணிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



    • மாணவியுடன் இருந்த அந்தரங்க வீடியோவை வம்சி தனது நண்பர்கள் 3 பேரிடம் காட்டினார்.
    • அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வம்சி. இவருக்கும் 20 வயது சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

    இந்த நெருக்கத்தை பயன்படுத்தி மாணவியை அடிக்கடி வம்சி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று வந்தார். அப்படி ஒருமுறை தனிமையான சூழலில் இருந்தபோது மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த வம்சி, அதனை தனது செல்போனில் ரகசியமாக பதிவு செய்து கொண்டார்.

    மாணவியுடன் இருந்த அந்தரங்க வீடியோவை வம்சி தனது நண்பர்கள் 3 பேரிடம் காட்டினார். இதையடுத்து அந்த மாணவியை தங்களுக்கும் விருந்தாக்கும்படி வம்சியிடம் அவர்கள் கேட்டனர்.

    இதற்கு சம்மதம் தெரிவித்த அவர், தனது காதலியான சட்டக்கல்லூரி மாணவியை விசாகப்பட்டினம் அருகே கிருஷ்ணா நகரில் உள்ள நண்பனின் அறைக்கு அழைத்து வந்தார். அங்கு அவர் மாணவியை வற்புறுத்தி பலாத்காரம் செய்தார். இதை மறைந்து இருந்து வீடியோ எடுத்த நண்பர்கள் 3 பேரும், அறைக்கதவை திறந்து உள்ளே வந்தனர்.

    பின்னர் அந்த மாணவியை மிரட்டி அவர்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகும் வம்சியும், அவனுடைய நண்பர்களும் மாணவியை அவ்வப்போது மிரட்டி தங்களது ஆசைக்கு உடன்பட வற்புறுத்தி வந்தனர். அவர்களது தொல்லை தாங்கமுடியாத அந்த மாணவி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டில் இருந்த மாணவியின் தந்தை, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தந்தையிடம் மாணவி கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வம்சி மற்றும் அவருடைய 3 நண்பர்களையும் கைது செய்தனர்

    • திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறியதாவது:-

    திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனம் செய்ய 20 முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப உதவியுடன் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாங்கள் ஒரு சிறப்பு ஆலோசனையை ஏற்பாடு செய்வோம்.

    திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை விடுவிப்போம். அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பது பற்றி விவாதிப்போம்.

    அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நகராட்சி அல்லது பிற துறைகளுக்கு மாற்ற பரிந்துரை செய்வோம். திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது. விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்துவோம்.

    லட்டு பிரசாதத்திற்கு தரமான நெய் கொள்முதல் செய்ய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைப்போம்.

    பல மாநிலங்களுக்கு சுற்றுலாத் துறையால் தினசரி ஒதுக்கப்பட்ட 4,000 தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.

    இந்த டிக்கெட்டுகளை சிலர் முறைகேடாக பயன்படுத்தியது விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 62,085 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21,335 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியலில் ரூ.3.78 கோடி காணிக்கை வசூல் ஆனது. சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • பள்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டியுள்ளார்.
    • இது குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியுள்ளார்.

    பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டி தண்டனை கொடுத்த ஆசிரியரின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு காலையில் தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

    மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மாணவிகளிடம் ஒழுக்கத்தை வளர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக ஆசிரியர் சாய் பிரசன்னா தனது செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

    • 1994 சட்டப்பேரவை தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் வெற்றி பெற்றார்
    • தனது சகோதரரின் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிர்ந்தார்.

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு [வயது 72] காலமானார். இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 1994 சட்டப்பேரவை தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பணியாற்றியவர் ஆவார்.

    கடந்த 3 நாட்கள் முன்னாள் மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.16) மதியம் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனது சகோதரரின் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'எனது சகோதரரும், சந்திரகிரி முன்னாள் எம்எல்ஏவுமான நாரா ராமமூர்த்தி நாயுடு நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • விண்ணப்பித்தவர்களுக்கு தனியாக இந்த கும்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி அரங்கேறியது.

    இதே போல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் கழுதை வளர்ப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கும்பல் என்று அசால்டாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது சந்தையில் கழுதை பாலுக்கு அதிக தேவை உள்ளது.

    ஒரு லிட்டர் கழுதைப்பால் 1600 ரூபாயில் இருந்து 1800 ரூபாய்க்கு வாங்குவதாக விளம்பரம் செய்தனர். யூடியூப் சேனல் வீடியோக்களில் தனக்கு அதிக ஆர்டர்கள் வருகின்றன, ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை.

    கழுதை பால் வியாபாரம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். எங்களிடம் உயர் ரக கழுதைகள் உள்ளன.

    இந்த கழுதைகளுக்கான பணத்தை நீங்கள் செலுத்தினால் மட்டும் போதும். நாங்கள் உங்களுக்கு கழுதை பராமரிப்பதற்கான கொட்டகை அமைக்க உதவி செய்கிறோம்.

    மேலும் ஒரு லிட்டர் கழுதை பாலை நாங்களே ரூ. 1500 கொடுத்து வாங்கிக் கொள்வோம் கழுதைக்கு நோய் வாய்ப்பட்டால் மருத்துவ செலவையும் நாங்களே ஏற்போம் என தெரிவித்தனர்.

    இதனை நம்பி ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்த கும்பல் தெரிவித்த ஆன்லைன் முகவரியை தேடி விண்ணப்பித்தனர்.

    இதில் விண்ணப்பித்தவர்களுக்கு தனியாக இந்த கும்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். அதில் கழுதை வளர்ப்பு முறைகள் மற்றும் எப்படியெல்லாம் பால் தேவைப்படுகிறது.

    அவற்றை நாங்கள் எப்படி சேகரித்து வருகிறோம் என்பது பற்றி விளக்கமாக பல மணி நேரம் பேசி நம்ப வைத்தனர். இதனை நம்பி ஏராளமானோர் கழுதைகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஒரு கழுதை ரூ.20 ஆயிரம் முதல் 1.50 லட்சம் வரை விற்பனைக்கு உள்ளன என அறிவிப்பு செய்தனர்.

    இதனை நம்பிய விவசாயிகள் பலர் கழுதைகளை வாங்க லட்சக்கணக்கில் பணம் அனுப்பினர்.

    சதுரங்க வேட்டை சினிமா பாணியில் கழுதை கருத்தரங்குகள் நடத்தி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மாநிலங்களைச் சேர்ந்த பலரையும் சிக்க வைத்தனர்.

    இது ஒரு புறம் இருக்க கழுதைப் பாலை வீட்டிலேயே சேமித்து வைக்க தங்களிடம் பிரத்யேகமான எந்திரம் உள்ளது.

    இந்த எந்திரம் ரூ.75,000 முதல் விற்பனைக்கு உள்ளது எனவும் தெரிவித்தனர். அதற்கும் பலர் பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர்.

    கழுதைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டரைக் காட்டி உறுப்பினர் கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ.25 லட்சம் வசூலித்தனர்.

    விவசாயிகளுக்கு கழுதை பராமரிப்புக்கான கொட்டகை அமைக்க ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையிலான வங்கி காசோலைகளை கொடுத்தனர். அவற்றை எழுதி வங்கியில் போட்டபோது அவை பணம் இல்லாமல் திரும்பி வந்தன.

    மேலும் கடந்த 18 மாதங்களாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பால் பணம், பராமரிப்பு செலவு கொட்டகை கட்டுதல், பணியாளர் சம்பளம், கால்நடை சிகிச்சை செலவுகள் வழங்கப்படவில்லை.

    அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பணம் கட்டியவர்கள் தெரிந்து கொண்டனர். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இந்த கும்பல் ரூ. 100 கோடி வரை அசால்டாக கொள்ளையடித்துள்ளனர்.

    இது ஒரு பெரிய மோசடி என்னை தெரிந்து கொண்ட விவசாயிகள் இது குறித்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள போலீஸ்களில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பெயரையும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அந்த பெயர்கள் உண்மையானதா? அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×