என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தீபாவளி ஸ்பெஷல் சேலைகள்...
Byமாலை மலர்23 Oct 2019 6:34 AM GMT (Updated: 23 Oct 2019 6:34 AM GMT)
ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுமையான, ட்ரெண்டியான டிசைன் சேலைகளானது அறிமுகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. இந்த தீபாவளிக்குப் புதுவரவாக வந்திருப்பது எது? பார்க்கலாம் வாங்க.

சாஃப்ட் பனாரஸ் சில்க் சேலைகளில் வண்ண வண்ண கட்டங்களுடன் கலக்கலாக வந்திருக்கும் சேலைகள் தீபாவளி புதுவரவு எனலாம். செக்டு வீவிங்கில் அட்டகாசமான ஜரி பார்டர் மற்றும் கோடுகளுடன் வரும் பல்லுவானது பார்க்கப் பிரமாதமாக உள்ளது. கையகல சிகப்பு, மெரூன், இள மஞ்சள், இளம் பச்சை, நீலம் போன்ற கட்டங்களில் இடையிடையே ஜரி புட்டாக்கள் பார்ப்பதற்கு நேர்த்தியாக உள்ளன.
இதுபோன்ற பலவிதமான கலர் செக்டுகளுடன் எண்ணற்ற கலெக்ஷன்களுடன் வந்திருக்கின்றன பனாரஸ் சேலைகள். இது போன்ற வண்ண கட்டங்களில் ஏதாவது ஒரு வண்ணத்தை ஹைலைட் செய்திருப்பது இச்சேலையின் அழகிற்கு அழகு சேர்க்கின்றது.
பிளெயின் பனாரஸ் சேலைகளில் ஜரிகைக் கட்டங்களுடன் பல வித கலர் கட்டங்களும் இணைந்து பார்டரில் ஜரிகையானது எளிமையாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது. இடையிடையே ஜரிகை புட்டாக்களை விரும்பாதவர்களுக்கு இது போன்ற பனாரஸ் சேலைகள் சரியான தேர்வாக இருக்கும்.
மென்மையான பனாரஸில் லைட் கலர் கட்டங்களுடன் மூன்று விரல் அகலத்திற்கு ஜரிகை பார்டர், கான்டராஸ்ட் வண்ணங்களில் கட்டங்களுடன் அகலமான ஜரிகை பார்டர், மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் மிரர் காயில் ஒர்க் செய்யப்பட்ட அருமையான சேலைகளுடன் அதற்கு ஏற்ற ஜாக்கெட் துணிகளும் இணைந்து வருவது பார்க்க அழகாக உள்ளது.
அதே போல் மென்மையான பனாரஸ் சில்க் புடவைகளில் அழகிய வண்ணக் கட்டங்கள், ஒவ்வொரு கட்டங்களின் உள்ளேயும் பானை, அன்னம், மயில், யானை தாமரை என ஜரிகையால் ஆன புட்டாக்கள், பல்லுவானது மிகவும் கவர்ச்சிகரமாக ஜரிகை வேலைப்பாட்டுடன் இருக்க அதிலிருக்கும் ஜாக்கெட்டானது முழுவதும் ப்ரோகேட், ஜகார்ட் என்று அழகே உருவாய் நெய்யப்பட்டுள்ளது.
முழுவதும் ஜரி கட்டங்களுடன் வந்திருக்கும் சேலையின் வசீகரமானது ஒரிஜினல் பட்டுச்சேலைகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளது என்று சொல்லலாம்.
ஹேண்ட் லூம் காட்டன் சில்க் சேலைகளில் சிறிய கட்டங்கள் மற்றும் அகலமாக இருக்கும் ஃப்ளோரல் பார்டர்கள், சனா சில்க்கில் அழகிய வட்ட வடிவ வீவிங் டிசைன் மற்றும் அதற்கு கான்ட்ஸ்ராஸ்ட் ப்ளவுஸ் மற்றும் நேர்த்தியான பார்டர்களுடன் வந்திருப்பவையும் புது வரவாகும்.
அதேபோல் ஸ்லாப் காதி காட்டன் சேலைகள் மற்றும் ஆர்ட் சில்க் சேலைகளில் மினாகாரி வேலைப்பாடு, டெஸ்டட் ஜரி மற்றும் அழகிய ஜாக்கெட்டுகள் பார்த்தாலே பரவசப்படுத்தும் விதமாக உள்ளன. அழகிய மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணங்களில் அசத்தலாக வந்துள்ளன. மினாகாரி வேலைப்பாட்டுடன் ஆர்ப்பாட்டமில்லாத ஜரிபார்டர் அழகோ அழகு என்று பாடத் தூண்டுகிறது.
ஹேண்ட் லூம் காட்டன் சில்க் சேலைகளில் டெஸ்டட் ஜரியானது இடையே சிறிய கோடுகளாக வர அத்துடன் ப்ளவுஸ் மற்றும் சேலைகளின் ஓரங்களில் பாம் பாம் வைத்து வந்திருக்கும் சேலைகள் கான்ட்ராஸ்ட் கலர் ப்ளவுஸ்களுடன் அனைவரையும் கவரும் விதமாக வந்துள்ளன.
காதி காட்டன் சேலைகளில் வொர்லி டிசைன்களைக் கைகளால் தீட்டி வந்திருக்கும் சேலைகளைப் பார்க்கும் பொழுது விண்ணிலிருக்கும் வானவில் பூமிக்கு வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பெயிண்ட் செய்யப்பட்டிருப்பதால் இவற்றை முதலில் துவைக்கும் பொழுது ட்ரை வாஷ் கொடுத்து விடுவது நல்லது. இதிலிருக்கும் ஓவியங்கள் கிராம மக்களின் வீடுகள், மரங்கள், வாழ்க்கை முறை, விவசாயம், வீட்டு வளர்ப்புப் பிராணிகள் என அனைத்தையும் தத்ரூபமாகக் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
டிஜிட்டல் பிரிண்ட் சேலைகளின் வண்ணமும் டிசைன்களும் பார்க்கும் பொழுது இதை உருவாக்குவதற்கு உதவிய அனைவரின் திறமையையும், கற்பனைப் படைப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. லினன் சேலைககளில் ஜாம்தானி வேலைப்பாடு, செல்ஃப் டிசைன்களுடன் சில்வர் கலர் ஜரிகைகளுடன் வரும் லினன் சேலைகளும், பாட்டிக் லினன் சேலைகளில் சில்வர் ஜரி பார்டர்களும், டெம்பில் பார்டர் லினன் சேலைகள், ஷிபோரி பிரிண்ட் சேலைகள், காப்பர் ஜரிகைகளுடன் வரும் பிளெயின் லினன் சேலைகளைப் புகழ வார்த்தகளே இல்லை எனலாம்.
கைநெசவு சேலைகள் இப்பொழுது புத்துயிர் பெற்றுள்ளன என்று சொல்லுமளவுக்கு ஹேண்ட்லூம் சேலைகளில் எண்ணற்ற டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் அசத்தலாக வந்துள்ளன. இவையெல்லாம் புதுவராக வந்திருக்க பட்டுச் சேலைகளிலும் பல வகைகள் வந்து நம் கண்களைச் சொக்க வைக்கின்றன.
ட்யூயல் டோன் வண்ணங்களில், கான்ட்ராஸ்ட் பார்டர் மற்றும் பல்லு, பனாரஸ் ஜரி டிசைன்களுடன் வந்திருக்கும் மென்பட்டின் அழகை என்னவென்று சொல்வது. மென்பட்டு என்பதால் மிகவும் லேசாக அணிந்து கொள்ள வசதியாக உள்ளது. ஹாஃப் அண்டு ஹஃப் மென்பட்டு சேலைகளும், பிளெயின் கருப்பு நிற ப்ளவுசிற்கு ஹவி ஜரி வேலைப்பாட்டுடன் உடல் நிறம் கருமையாக இருக்கும் சேலைகளும், பட்டில் ட்யூயல் பார்டர் அதாவது கட்டங்களுக்குக் கீழே குதிரை, அன்னம், மயில் போன்றவை இருக்கும் ஒருபுற பார்டருடன், மேல்புறம் குதிரை, அன்னம் மயில் போன்றவை இருக்கும் ஒத்தை பார்டர் சேலைகளும், ஹெவி பார்டர் சேலைகளும் சிறு சிறு மாற்றங்களுடன் புதுவரவாக உள்ளன.
போச்சம் பள்ளி பட்டில் இக்கத் வேலைப்பாடு, பட்டடோலா பட்டில் மல்ட்டி கலர், ப்யூர் காஞ்சிபுரப் பட்டில் லைட் வெயிட் சேலைகள், பனாரஸ் சில்க் சேலைகளும் அருமையான டிசைன் மற்றும் கலர்களில் நியாயமான விலையுடன் அதனுடைய தரத்தில் சிறிதும் குறைவில்லாமல் இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வந்துள்ளன.

Next Story
×