என் மலர்
நீங்கள் தேடியது "clothing"
- திருப்பூர் பின்னலாடைகளில் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 26.8 சதவீதம் பங்களித்தது
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.இது பின்னலாடைத்துறை உள்பட இந்தியாவின் பல்வேறு துறை ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வரை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் 50 சதவீத வரி விதிப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்-ஏற்றுமதியாளர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்த வரி தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத்துறையை கடுமையாகப் பாதிக்கும். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 8 பில்லியன் டாலர்கள், அதாவது 26.8 சதவீதம் பங்களித்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 60 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருகிறது. கடந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி ரூ.45,000 கோடி மதிப்புடையதாக இருந்தது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ரூ.12,000 கோடி மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவுடன் தலையிட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், வரி விதிப்பால் கடந்த 10 நாட்களில் அமெரிக்காவுக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் அமெரிக்க இறக்குமதியாளர்களும் அடிப்படை வரியை 10 சதவீதம் பகிர்ந்து வருகின்றனர். ஆட்குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது . திருப்பூரில் உள்ள சில அலகுகள் மூடப்பட்டுள்ளது. சரக்கு அனுப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலை இழப்புகள் எதுவும் இல்லை.
2030 ம் ஆண்டுக்குள் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் ரூ.1லட்சம் கோடியை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய வரி விதிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் இலக்கை அடைவதை கடினமாக்குகிறது என்றார்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் (சிட்டி) கூற்றுப்படி, இந்தியா 2025ம் நிதியாண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் வளர்ச்சி குறைந்துள்ளது. ஜூன் 2025ல், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 3.3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. இது இந்தியாவின் முந்தைய ஆண்டை விட மிகவும் குறைவாகவும், வியட்நாம் மற்றும் வங்காளதேசத்தை விட மிகவும் பின்தங்கியதாகவும் உள்ளது.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரின் தரவுகளின்படி, இந்தியா வியட்நாமிடம் சந்தைப்பங்கை இழந்து வருகிறது. ஜனவரி மற்றும் ஜூன் 2025க்கு இடையில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 5.36 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் வியட்நாமின் ஏற்றுமதி 18.5 சதவீதம் அதிகரித்து 8.54 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் மாதாந்திர ஏற்றுமதி ஜனவரியில் 860 மில்லியன் டாலரில் இருந்து ஜூன் மாதத்தில் 770 மில்லியன் டாலராக குறைந்தது.
ஏற்றுமதியாளர்களின் துயரங்களை அதிகரிக்கும் வகையில் 50 சதவீதம் வரியுடன் இணைந்து, அமெரிக்காவில் இந்திய ஜவுளிகள் மீதான மொத்த வரிகள் 59-64 சதவீதமாக உயரக்கூடும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஜவுளி உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்ளூரில் விற்பனையாவதால் இந்தியா அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று அதன் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
இருப்பினும் கூடுதல் 25 சதவீதம் வரி தற்காலிகமானது என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவருமான ஏ. சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சந்தைகளை பன்முகப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இங்கிலாந்துடன் ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மற்றொரு ஒப்பந்தம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட 50 சதவீத இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவுடனான பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து விவாதிக்க உள்ளனர்.
பருத்தி வரி தள்ளுபடி
இதற்கிடையில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பருத்தி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து பங்களாதேஷ் ,வியட்நாம், இலங்கை போன்ற போட்டி நாடுகளுடன் விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பான நிலையை அடைய முடியும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 30 வரையிலும் என்பது குறுகிய கால அளவாக உள்ளதால் அதனை நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை நூலிழை ஆடைகளை பொறுத்தவரை, திருப்பூரில் 10 முதல் 20 சதவீதம் வரை செயல்படுத்தி வருகிறோம். தற்பொழுது பருத்தி விலை குறைய வாய்ப்பிருப்பதால் பருத்தி ஆடைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் . இதன் மூலம் போட்டிநாடுகளுடன் போட்டியிட்டு வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். இந்த விலை குறைப்பின் மூலம் அதிகப்படியான ஆர்டர்களை எங்களால் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்
- சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது
இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் வசித்து வருபவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் 45 வயதான பரிதா வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.
சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என்றாலும் சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வருடம் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8அடி பைத்தானால் விழுங்கப்பட்டார். 2018 இல் சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி பைத்தானின் வயிற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
- மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.
தரங்கம்பாடி:
தமிழக அரசின்தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது.
இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவ ண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் இறக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட கலெக்டர் லலிதா குத்துவி ளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.
இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.14 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடியும், சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி. வாடிக்கை யாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.
தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.
இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா மற்றும் விற்பனை நிலைய ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.
விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை மேலாளர் குமார் செய்திருந்தார்.
ஹாட் பேன்ட்:
கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.
பருத்தி சேலைகள்:
பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.
நீளமான பாவாடைகள்:
அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.
லூசான பேன்ட் :
இப்போதெல்லாம் லூசான பேண்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்
பருத்தி ஆடைகள்:
வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.
சல்வார் கமீஸ்:
சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.
குட்டையான ஆடைகள்:
கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.
காதி:
கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.
சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன. பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ஸ்லீப் லெஸ் (கையில் இல்லாத டாப்ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துகின்றன சுடிதார்களில்.
ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளசுகள். அதிலும் தையல் கடைக்குச் சென்றால் ஒரு சுடிதார் தைப்பதற்கு எத்தனை விஷயங்களை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.
முதலில் கழுத்து வடிவம். அதில் எத்தனை வடிவங்கள். எல்லாவற்றையும் பார்த்தால் நமக்கு மயக்கமே வருகிறது. அதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்த பின்னர் கட் வைத்ததா, இல்லையா என்ற கேள்வி. பேண்ட் மாடல் எப்படி என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது நாம் எப்படிப்பட்ட உடையைத் தைக்கச் சொல்லியிருக்கிறோம் என்றே புரியாமல் போய் விடுகிறது.
அத்தனை வகையில் மாடல்களும், வகைகளும் வந்துவிட்டன. புதிதாக வரும் மாடல்களைத்தான் இளசுகளும் விரும்புகின்றனர். அதனால் தாங்கள் தவறாக தைத்து விடும் பேன்டினைக் கூட மாடல் என்று அறிமுகப்படுத்தி விடுகின்றனர் தையல்காரர்கள்.
தற்போது இளசுகள் விரும்பி அணியும் வகையில் பஞ்சாபி மாடல்தான் முன்னணியில் உள்ளது. அதாவது இறுக்கமான, நீளம் குறைந்த டாப்சும், தொள தொள வென்ற பேண்டும் தான் பேஷனாகிவிட்டது. அதற்கு அடுத்தபடியாக காலர் மாடல் அதிகரித்துள்ளது. காலர் வைத்த சுடிதாருக்கு என்ன விசேஷம் என்றால் துப்பட்டா அணியத் தேவையில்லை. மேலும் அதனை ஜீன்ஸிற்கும் போட்டுக் கொள்ளலாம்.
கைகளிலும், கழுத்தின் முன் அல்லது பின் புறத்தில் முடிச்சுகள் போடும் புதிய வடிவம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த மோகம் சுடிதார்களையும் தாண்டி பெண்கள் அணியும் ஜாக்கெட்டுக்கும் சென்றுள்ளதுதான் கூடுதல் தகவல்.
குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை.
திருமண விழாக்களில்: திருமண விழாவுக்கு ஏற்ற உடை பட்டுப் பாவாடைதான். அந்த நேரங்களில் அவர்களுக்கு கழுத்தை ஒட்டி நெக் செயினும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும். நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வங்கி, வளையல், கைகளுக்கு மெஹ ந்தி, மோதிரம் செட், இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டால், ரொம்ப அழகாக இருக்கும். எந்த வகை நகையாக இருந்தாலும், ஒரே மாதிரி போடவும். பிளைன் நகைகள் திருமண விழாவிற்கு அழகாக இருக்கும். முடிந்தவரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல், ஒரு கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.
ரிசப்ஷனுக்கு : மாலை நேர ரிசப்ஷனுக்கு, குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உடைகள் எது என்றால் காக்ராசோளி, அனார்கலி, சகாரா போன்ற நல்ல ஒர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் போது, டிரஸ்க்கு மேட்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும்.
பர்த் டே பார்ட்டி: அடிக்கடி போவது இங்குதான். பார்ட்டிக்கு போகும் போது சிம்பிளாக, மார்டனாக டிரஸ் போடவும். அந்த டிரசுக்கு மேட்சாக மெல்லிய செயின், வளையல், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஒட்டினால், அழகாக இருக்கும்.
சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேண்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம்.

பொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது.
சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.
உடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.
சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற சட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கருப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…
தரமான வைரம் என்பது பலவிதமான சோதனைகளுக்குப்பின் ஆய்வு செய்து அதற்கு என சர்வதேச தர குறியீடு தரப்படுகிறது. நாம் விரும்பி அணிகின்ற பலவிதமான ஆபரணங்கள் என்பதில் வைரம் பதித்தும், தனிப்பட்ட வைர நகைகள் என்றவாறும் விலை மதிப்புமிக்க வைர நகைகள் தயார் செய்யப்படுகிறது. இதில் பதியப்படும் வைரங்கள் என்பது ஒவ்வொரு விதமான உருவ அமைப்பிலும், அதன் மதிப்பை காட்டும் காரட் அளவீடுகளை கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முந்தைய நாளில் வைரங்கள் என்பதில் போலியும், தோஷமும், அதிகமாக காணப்பட்டன. இன்றைய நாளில் தர சான்றுதலுடன் கூடிய தோஷம் நீக்கப்பட்ட வைரங்கள் கிடைக்கின்றன.
வைர நகைகள் என்பது தங்கம், பிளாட்டினம் போன்றவற்றில் பதியப்பட்டு கிடைக்கின்றன. அதுபோல் 18 காரட் வெள்ளை தங்கம், ரோஸ் கோல்டு, 18 காரட் தங்கம் போன்ற உலோகங்களும் வைர நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வைரம் எப்படியாயினும் வடிவமைத்தாலும் அதன் அழகே அதன் சிறப்பை உயர்த்தி பிடிக்கின்றது.
வைரத்தின் உருவ அமைப்புகள்:

ஆர்வத்தை தூண்டும் வைர நெக்லஸ்கள்
பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர். தங்க செயின் அமைப்பின் நடுநடுவே வைர பூக்கள், வைர தொங்கல்கள் கொண்டவாறும், முற்றிலும் அதிகபட்ச வைரங்கள் பதியப்பட்டு அடுக்கடுக்கான வளைவுகளுடன் கூடிய நெக்லஸ்கள் வரை ஆர்வத்தை தூண்டும் விதத்தில் கிடைக்கின்றன.
தங்க செயின் பின்னணியில் இடைவெளி விட்டு நட்சத்திர பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலும் ஏழு வைர கற்கள் என்றவாறு மொத்தம் ஐந்து பூக்களிலும் 35 வைரக்கற்கள் பதியப்பட்ட நெக்லஸ் அழகின் உச்சம். ஏனெனில் தங்க செயின் வளைவின் மேற்புற அமைப்பில் ஜொலிக்கும் நட்சத்திர பூக்கள் கண்கவர் தோற்ற பொலிவை தருகின்றது.
சூரிய கதிர்கள் போன்று விரியும் நெக்லஸ்
காலை எழுந்தவுடன் சூரியனை பார்க்கும்போது அதன் கதிர்கள் மேலெழுந்து வரும் அழகு தனிச்சிறப்பு. அந்த அரை வட்ட சூரிய ஒளிக்கதிர்கள் போன்ற அமைப்புடன் நெக்லஸ் உருவாக்கம் உள்ளது. மெல்லிய இருபக்க செயின் அமைப்பு அரை வட்ட வடிவில் மேலிருந்து கீழிறங்க நீளமான ஒளிக்கதிர்கள் போல் வைரம் பதியப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. வட்டமான சிறு வைரகற்கள், மேற்பகுதியிலும், கீழ் தொங்கும் அமைப்பில் பியர் வைரக்கற்கள் பதியப்பட்டும் கலை நயத்துடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒளிக்கதிர்கள் பிரகாசத்தை வைரக்கற்கள் தத்ரூபமாக வழங்குவதால் கழுத்து பகுதி அதிகபட்ச ஒளிப்பிரகாசத்துடன் ஜொலிக்கிறது.
பெரிய பூக்களாய் தொங்கும் வைர காதணிகள்
சிறுசிறு வைரக்கற்கள் பதியப்பட்ட சிறுகாதணிகள் என்பதுடன் பெரிய வைரக்கற்கள் பதித்த காதணிகளும் பிரம்மாண்ட அமைப்பில் உள்ளன. பெரிய பூ விதழ்கள் கொண்ட பூ அமைப்பு வண்ண கற்கள் இணைப்புடன் ஜொலிக்கும் பூக்களாய் காட்சித் தருகின்றது. இதன் பிற வடிவங்களாய் மெல்லிய கம்பி இணைப்பு, ஜல்லடை அமைப்பு, கணித அமைப்பு போன்றவைகளும் பெரிய காதணிகளாய் உலா வருகின்றன. நவீன கால பெண்களின் ரசனையை பூர்த்தி செய்யும் வடிவில் காட்சியளிக்கின்றன.






