டாலர் மதிப்பு உயர்வால் ஆடைகளுக்கு கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு- திருப்பூர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ரூபாய்க்கு நிகரான அன்னிய பண மதிப்பு குறையும் போது ஏற்றுமதியாளர்களுக்கு பாதகமாகவும், அன்னிய பண மதிப்பு உயர்ந்தால் சாதகமாகவும் அமைகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர்கள் பெற்று ஆடை தயாரிக்கின்றன. ஏற்றுமதி பின்னலாடைகளின் விலை டாலர், யூரோ, பவுண்ட் என அன்னிய பண மதிப்பு அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

ரூபாய்க்கு நிகரான அன்னிய பண மதிப்பு குறையும் போது ஏற்றுமதியாளர்களுக்கு பாதகமாகவும், அன்னிய பண மதிப்பு உயர்ந்தால் சாதகமாகவும் அமைகிறது. இந்தநிலையில் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் 72 முதல் 73 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு அதிக பட்சமாக கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.76.17ஐ எட்டியது படிப்படியாக சரிந்த டாலர் கடந்த பிப்ரவரியில் ரூ.74.52 ஆக இருந்தது.

தற்போது மீண்டும் டாலர் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இம்மாதம் 7-ந்தேதி ரூ.77.08ஐ எட்டியது. இன்றைய நிலவரப்படி ரூ. 76.57ஆக உள்ளது. கடந்த பிப்ரவரியில் ரூ.101.83 ஆக இருந்த பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு தற்போது ரூ.100.07 ஆக சிறிதளவு சரிந்துள்ளது.

கடந்த மாதம் ரூ.84.26 ஆக இருந்த யூரோ மதிப்பு ரூ. 84.08ஆக பெரிய மாற்றமின்றி தொடர்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதன் மூலம் வெளி நாடுகளுக்கு தயாரித்து அனுப்பும் ஆடைகளுக்கு கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com