என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை NDA கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
    • திரையுலகில் ரசிகர்களை வைத்திருப்பது முற்றிலும் வேறு.

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை NDA கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.

    பியூஷ் கோயல் கூறியதாவது, தவெகவை கூட்டணிக்கு இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்; போவார்கள். அவர்களால் எந்தத் தாக்கமும் இருக்காது.

    திரையுலகில் ரசிகர்களை வைத்திருப்பதும் அதை வாக்குகளாக மாற்றுவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். 

    விஜய்யுடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் NDA நடத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.  

    மேலும், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியடைவது அவ்வளவு கடினம் அல்ல. திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது" என்றும் தெரிவித்தார். 

    • இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர்.
    • ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் இன்று 8 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.

    இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    வெடிப்பில் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த கடைகள் மற்றும் பல வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

    ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அதை ஈரான் அரசு ஊடகம் மறுத்துள்ளது.

    எரிவாயு கசிவால் இந்த விபத்து நடந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது? இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது விபத்தா? என்பது குறித்து ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் கடற்படை ஈரானை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பொருளாதார மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த அழகான கௌரவத்திற்கும், 'மராத்வாடாவின் மகள்' என்று என்னைக் கொண்டாடியதற்கும் நன்றி.

    தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF)  இளையராஜா கைகளில் விருது வாங்கியது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், டியர் இளையராஜா சார், எனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் உங்களால் கௌரவிக்கப்பட்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமையாகக் கருதுகிறேன்.

    உங்களது ஆசீர்வாதங்களுடன் எனது பயணத்தைத் தொடங்குவதில் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.

    இந்த அழகான கௌரவத்திற்கும், 'மராத்வாடாவின் மகள்' என்று என்னைக் கொண்டாடியதற்கும் AIFF-க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    சத்ரபதி சம்பாஜிநகர் எப்போதும் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

    எனது சாதனையைப் பாராட்டிப் பேசிய ரசூல் பூக்குட்டி சார் அவர்களுக்கு மிக்க நன்றி." என்று தெரிவித்துள்ளார்.

    பாக்யஸ்ரீ தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா படத்தில் குமாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த வருட அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு  பத்மபாணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ‘வித் லவ்’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

    'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது 'வித் லவ்' படம் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

    இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 'வித் லவ்' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதையடுத்து நடிகர் அபிஷன் ஜீவிந்த்க்கு நடிகை சிம்ரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை சிம்ரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கேமராவுக்குப் பின்னால் இருந்து படங்களை எடுப்பது முதல் அதன் முன் தோன்றி நடிப்பது வரை!! அபிஷன் ஜீவிந்த் இந்தப் புதிய நடவடிக்கையை எடுப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.

    'வித் லவ்' விரைவில் திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 



    • கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.
    • தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பொருளாதார ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    இதனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு, வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு என்பதை பொறுத்தமட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டுவசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தெரிகிறது.

    அதேபோன்று மருந்து பொருட்களில் அரசின் கவனம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சுகாதாரத்தில் நவீனத்துவம் பற்றிய அறிவிப்புகள் இருக்கும் என தெரிகிறது. கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.

    வருமான வரி விதிப்பு வரம்பை பொறுத்தமட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பழைய வரி முறையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக, புதிய வரி முறையை நோக்கி அரசாங்கம் செல்லக்கூடும் என வரி நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தம் காரணமாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் விலை குறைந்தது.

    இதனால், பட்ஜெட்டில் இந்த பொருட்கள் மீதான விலைத்தாக்கம் பெரிய அளவில் ஏற்றமாகவோ, இறக்கமாகவோ இருக்காது என கூறப்படுகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

    குறிப்பாக தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்திருப்பதால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து எழுச்சி பெறும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளது.
    • வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான், இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.

    இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை வருகிற 7-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டு நாடுகளும் இணைந்துதான் தொடரை நடத்துகின்றன.

    ஆனால், வங்கதேசம் இந்தியாவில் பாதுகாப்பை காரணம் காட்டி விளையாட மறுத்தது. இலங்கையில் குரூப் லீக் போட்டிகளை நடத்த வேண்டுகோள் விடுத்தது. ஆனால், ஐசிசி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

    வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகுவதா? அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை இது தொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய கிரிக்கெட் செயலாளர் பண்டுலா திசநாயகே கூறுகையில் "இலங்கை பிராந்திய மோதல்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க விரும்புகிறது. இந்த பிரச்சினை இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையிலானது. நாங்கள் தொடர்ந்து நடுநிலை வகிப்பவராக இருந்து கொண்டிருக்கிறோம். இவைகள் அனைத்தும் எங்களுடைய நட்பு நாடுகள். எந்தவொரு மற்ற நாடுகளும் இலங்கையில் தொடரை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி இலங்கையில் நடைபெற இருக்கிறது.

    • அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல.
    • வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.

    என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.

    * கொரோனா காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன்.

    * அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல.

    * அரசியல்தான் எனது எதிர்காலம்.

    * எனது அரசியல் பயணம் நீண்ட கால பயணம்.

    * வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.

    * கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது

    * நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.

    * எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்விணை ஆற்றுவதில்லை. நான் என்ன அனுபவித்தேன் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

    • பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    • கைபர் பக்துன்வா மாகாணத்தில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    லாகூர்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

    தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் 3 மாகாணங்களில் தனித்தனி நடவடிக்கைகளில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகளைக் கொன்றனர்.

    பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை, ராணுவம் இணைந்து தலிபான் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் படையினரை குறிவைத்து அதிரடி வேட்டை நடத்தினர்.

    பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 41 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரு தளபதி உட்பட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.

    • முதல் மற்றும் 3-வது செட்டை சின்னர் கைப்பற்றினார்.
    • கடைசி இரண்டு செட்டுகளையும் ஜோகோவிச் எளிதாக கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா ஓபனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதியில் ஸ்வெரேவை கடும் போராட்டத்திற்குப் பின் 5.30 மணி நேரம் தாக்குப்பிடித்து அல்காரஸ் வீழ்த்தினார்.

    2-வது அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்- இத்தாலி வீரரும் 2025 சாம்பியனுமான சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் ஜோகோவிச் முதல் செட்டை 3-6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

    3-வது செட்டில் சின்னர் கை ஓங்கியது. அவர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றினார். ஆனால 4-வது செட்டை 6-4 எனவும், 5-வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 4 மணி நேரமும் 9 நிமிடங்களும் தேவைப்பட்டது.

    • அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    இவ்வாறு அவர் கூறினார்:-

    காங்கிரஸ் கை கொடுக்கும் என்றார் உதயநிதி. ஆனால், இப்போது காங்கிரஸ் கை நழுவிவிட்டது.

    அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்றதும், 10 நாள் கூட ஆட்சி நிற்காது என்றார்கள், சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.

    இன்னும் 2 அமாவாசைகள் தான் உள்ளது. திமுகவின் ஆட்சிகாலம் முடியப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.
    • அவரது மனைவி சுனேத்ராவை தலைவராக மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அஜித் பவார் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விமான விபத்தில் காலமானார். இவர் துணை முதல்வராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக தயாராக இருந்தால், தேசியவாத சட்டமன்ற கட்சித் தலைவர் யார் என்பது அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்த நிலையில் நாளை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி நாளை கூடுகிறது. இதில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என அக்கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக புஜ்பால் கூறுகையில் "தேசியவாத காங்கிரஸ் கட்சி, சுனேத்ராவை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தால், சனிக்கிழமை துணை- முதல்வராக பதவி ஏற்க இருந்தாலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டம் நாளை நடைபெறும். சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார். ஏராளமான தலைவர்கள் அவர் துணை முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    இவ்வாறு புஜ்பால் தெரிவித்தார்.

    288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில் சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 40 உறுப்பினர்கள் உள்ளனர். அஜித் பவார் காலமானாதால் பாராமதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

    சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவர் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை.

    • ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பல்களை நகர்த்தி வருகிறது.
    • ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    டாலருக்கு நிகரான ஈரானின் பண மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். போராடியவர்களை ஒடுக்க ஈரான் அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்புடையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். அத்துடன் போர்க்கப்பல்களை ஈரான் நோக்கி நகர்த்த உத்தரவிட்டார். அமெரிக்க போர்க்கப்பல்களும் முன்னோக்கி வருகின்றன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    ஈரான்- அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக துருக்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்தான்புல் சென்றுள்ளார்.

    துருக்கி சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, "பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறோம். அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு முதலில் பேச்சுவார்த்தைகளின் வடிவம், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் தலைப்பு ஆகிய அனைத்தையும் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

    ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதுபோன்று போருக்கும் தயாராக உள்ளது" என்றார்.

    ×