என் மலர்
ஆசிரியர் தேர்வு
- மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
- இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் உடனே மீட்புப் பணிக்கு விரைந்து சென்றனர்.
இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. உயர் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் அமைந்த இந்த பரபரப்பான பகுதியில் நடந்த இச்சம்பவம் அங்கு பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
- தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் SIR பணியை மேற்கொள்ள தடையில்லை.
- வழக்கு விசாரணையை அடுத்த 26-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்காட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுபோன்று பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பில் "SIR நடத்தப்படும் காலம் பருவமழைக் காலம். அப்போது அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த நேரத்தில் SIR பணி மேற்கொள்ள முடியாது. வருவாய்த்துறை அதிகாரிகள், வேறு மாநில அதிகாரிகள் பருவமழை வெள்ளம் தொடர்பான பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் அறுவடை திருவிழாவான பொங்கல் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அந்த நேரத்தில் SIR பணி மேற்கொள்வது சிக்கலை ஏற்படுத்தும்" என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இதற்கான அனைத்து விளக்கங்களையும் கொடுப்பார்கள் என பதில் அளித்தது.
அதன்பின், மலைக்கிராமங்கள் போன்ற இடங்களில் இணையதள வசதி கிடைப்பது சிரமம். சரியாக ஒருமாதம் இருப்பதால் வாக்காளர்களுக்கு போதிய கால அவகாசம் இருக்காது என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
என்றாலும், உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து மனுக்களின் நகல்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்தல் ஆணையம் அதற்கு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. அத்துடன் SIR தொடர்ந்த நடைபெறலாம் என உத்தரவிட்டது.
- இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவ முடிந்தது?
உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்?
பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்லோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வி.சி.க. சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை வி.சி.க. மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரெயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் காரில் பயணிப்போரின் உடமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.
- இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது பேசிய டிரம்ப், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு முக்கியமானது. இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. மேலும், உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா மிக வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.
ரஷிய எண்ணெய் காரணமாக இந்தியா மீதான நமது வரிகள்மிக அதிகமாக உள்ளன. இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். அது மிகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். எதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அவற்றைக் குறைப்போம்" என்று கூறினார். மேலும் இந்தியா-அமெரிக்கா இடையே எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு வரி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகாமையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக அமெரிக்காவால் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
- நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் "அப்போ இப்போ" பாடல் அண்மையில் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
- காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் குண்டுவெடிப்புக்கான குழிகளோ அடையாளங்களோ இல்லையென்று கூறப்பட்டாலும், சிறிய கார் வெடித்து இந்தளவுக்கான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் திங்கள்கிழமை மாலை நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான காவல்துறை விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானையும் குருகிராம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக சம்பவம் நேற்று அரியானாவில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
- தேசிய விருதினை மத்திய அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.
- அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியானாவில் குருகிராம் பகுதியில் நடைபெற்றது.
மத்திய அரசியின் இந்த உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது. இந்த விருதினை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.
இந்நிலையில், தேசிய விருது வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்திற்கும், அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுகள்!
#LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படம் தீயவர் குலை நடுங்க.
அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, தீயவர் குலை நடுங்க படம் வரும் நவம்பர் 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், தீயவர் குலை நடுங்க படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது.
இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.
மீதிமுள்ள 122 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- அதீத ஏற்றுமதி விதிக்கும் நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரியை விதித்தார்.
- வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து உதிரி தொகையை மக்களுக்கே திரும்ப வழங்குவேன்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வரும் டிரம்ப் அந்நாட்டின் மீது அதீத ஏற்றுமதி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். மேலும் பிற நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து உதிரி தொகையை நாட்டு மக்களுக்கே திரும்ப வழங்குவதாக ஏற்கனவே அறிவித்தார்.
இந்நிலையில், அதிக வருமானம் ஈட்டுபவர்களை தவிர பிற அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ரூ.1¾ லட்–சம் (2 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும் என டிரம்ப் நேற்று அறிவித்தார். அவற்றை நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனை சமூக வலைதளமான ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
- குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
- மேகாலயாவின் ஆகாஷ் குமார் அதிவேகமாக அரை சதம் கடந்து சாதனை படைத்தார்.
அகமதாபாத்:
குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'பிளேட் குரூப்' போட்டி நடந்து வருகிறது. இதில் மேகாலயா, அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 386/2 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கு அர்பித் படேவாரா (207), கேப்டன் கிஷான் லின்தோ (119), ராகுல் தலால் (144) கைகொடுத்தனர்.
அடுத்து இறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி முதல் 3 பந்தில் 2 ரன் (0, 1, 1) மட்டுமே எடுத்தார். அதன்பின், அடுத்த 8 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார்.
வரிசையாக 8 சிக்சர்களை விளாசிய இவர் 11 பந்தில் அரைசதம் எட்டினார். முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 628/6 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆகாஷ் 50 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்நிலையில், முதல்தர போட்டியில் அதிவேகமாக (11 பந்து) அரைசதம் விளாசிய வீரரானார் ஆகாஷ் குமார் சவுத்ரி. முன்னதாக, லீசெஸ்டர்ஷையர் அணியின் வெய்ன் ஒயிட் 12 பந்தில் (2012) இச்சாதனை படைத்திருந்தார்.
முதல் தர போட்டியில் வரிசையாக 6 சிக்சர் பறக்கவிட்ட 3வது வீரரானார் ஆகாஷ் குமார். வெஸ்ட் இண்டீசின் சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகியோர் இப்படி சாதித்துள்ளனர்.






