என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரைபகினா முன்னேற்றம்
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரைபகினா முன்னேற்றம்

    • அரையிறுதியில் ஜெசிகா பெகுலா ரைபகினாவுடன் மோதினார்.
    • இறுதிபோட்டியில் ரைபகினா - சபலென்கா நாளை மறுநாள் மோதவுள்ளனர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் 6-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா கஜகஸ்தானை சேர்ந்த 5-வது வரிசையில் உள்ள ரைபகினாவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிபோட்டியில் ரைபகினா - சபலென்கா நாளை மறுநாள் மோதவுள்ளனர்.

    Next Story
    ×