search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2வது 20 ஓவர் போட்டியில் இந்தியா தோல்வி எதிரொலி- சுழற்பந்து வீச்சாளர்கள் மீது கேப்டன் பண்ட் அதிருப்தி
    X

    ரிஷப் பண்ட்       அக்சர் படேல்        யுவேந்திர சாகல்

    2வது 20 ஓவர் போட்டியில் இந்தியா தோல்வி எதிரொலி- சுழற்பந்து வீச்சாளர்கள் மீது கேப்டன் பண்ட் அதிருப்தி

    • 10 வது ஓவருக்கு பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசவில்லை.
    • பேட்டிங் செய்யும் போது, 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

    கட்டாக்:

    இந்தியாவிற்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அந்த அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்று கேப்டன் ரிஷப் பண்ட் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் 49 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். மற்றொரு சூழற்பந்து வீச்சாளர் அக்சர் ஒரே ஒரு ஓவர் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா வீசிய 3 ஓவர்களில் 31 ரன்கள் அடிக்கப்பட்டன.

    இது குறித்து போட்டி நிறைவுக்கு பிறகு பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாகத் தொடங்கினர், ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு, நன்றாகப் பந்து வீசவில்லை, அங்குதான் ஆட்டம் மாறியது என்றார்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும், இனி வரும் போட்டிகளில் இது போன்ற விசயங்களை சரி செய்வோம் என்றும் அவர் கூறினார்.

    பேட்டிங் செய்யும் போது 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்து விட்டதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×