search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எங்கோ வாழும் முதலாளி முக்கியமா? இங்கு வாழும் நம் மக்கள் முக்கியமா? சத்யராஜ்
    X

    எங்கோ வாழும் முதலாளி முக்கியமா? இங்கு வாழும் நம் மக்கள் முக்கியமா? சத்யராஜ்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    `தூத்துக்குடியில் நடந்த கொடுமைக்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன். இறந்தவர்கள் அத்தனை பேருக்கும், அந்த குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.



    எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா? இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், நம் தமிழ்நாட்டு மக்களும் முக்கியமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நெஞ்சம் பதைக்க வைக்கிறது. மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இறந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக' என்று தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest #Sathyaraj

    Next Story
    ×