என் மலர்
தரவரிசை
விஷ்ணு ஹசன் இயக்கத்தில் ஷங்கர், விஷ்ணு ஹசன், மீனு கார்த்திகா நடிப்பில் வெளியாகிய உள்ளம் உள்ளவரை படத்தின் விமர்சனம்.
கோயம்புத்தூரில் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிகளான ஷங்கர் - மீனு கார்திகா சொந்த ஊரில் இருந்து நகரத்து வருகின்றனர். அங்கு தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகையில், திடீரென அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. மீனு கார்த்திகாவை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விடுகின்றனர். கிராமத்திலிருந்து சென்னை வரும் இளைஞன் ஒருவர் எதிர்பாராத வகையில் இந்த கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறான்.
அவளது கொலையில் இருக்கும் மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மீனு கார்த்திகா வேறு ஒரு பெண்ணின் உடலில் புகுந்து தன்னை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறது. இதற்கிடையே நடக்கும் பல்வேறு பிரச்சனைகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. செய்யாத குற்றத்துக்கு பழிசுமக்கும் அந்த இளைஞன் அதிலிருந்து மீண்டானா? கொலை செய்யப்பட்ட மீனு கார்த்திகா பேயாக மாறி கொன்றவர்களை பழிவாங்கினாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஷங்கர், விஷ்ணு ஹசன், மீனு கார்த்திகா, ப்ரீத்தி, அங்கனா ராய் மற்றும் காம்னா சிங் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கராத்தே சிவவாஞ்சி, நியாமத்கான், தயாரிப்பாளர் நாமக்கல் கே.சண்முகம், அஸ்வின்குமார் உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல் கஞ்சா கருப்பு, மதன் பாப், மீரா கிருஷ்ணன், சித்ரா லட்சுமணன், பரவை முனியம்மா, நந்தகுமார் உள்ளிட்ட பலரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அநியாயமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, வேறொரு பெண்ணின் உடம்புக்குள் புகுந்து கொண்டு தன்னை கொலை செய்தவர்களை பலிவாங்குவதை கதையம்சமாக கொண்டு விஷ்ணு ஹசன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இயக்குநர் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். பேய் வரும் இடங்கள் பயமின்றி, சிரிப்பை தூண்டும்படி இருக்கிறது.
சதீஷ் சக்ரவர்த்தியின் பின்னணி இசை ஓரளவு பயத்தை தூண்டினாலும், பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பி.கே.எஸ்.தாஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `உள்ளம் உள்ளவரை' பயமில்லை.

ஷக்தி வசந்த பிரபு இயக்கத்தில் டெல்லா - "மானாட மயிலாட" வின்னர் சொர்ணா, கிருஷ்ணா நடிப்பில் சமூக விழிப்புணர்வு படமாக வெளியாகியிருக்கும் `ஏன் இந்த மயக்கம்' படத்தின் விமர்சனம்.
பள்ளிக்கு செல்லும் இளம் மங்கையாக வரும் டெல்லாவின் பெற்றோர் மகளை என்ன செய்கிறாள் என்பதை கண்காணிப்பதில்லை. மேலும் மகளுக்கு மொபைல் போன், கணினி, இணையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். அதன்விளைவாக பள்ளிக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் டெல்லா, பாடத்தை கவனிக்காமல் தனது காதலுடன் குறுஞ்செய்தியை பகிர்ந்து வருகிறார்.
இவ்வாறாக பள்ளி செல்லும் டெல்லாவுக்கு சமூக வலைதளம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாகவும் மாறிவிடுகிறது. அந்த காதலால் டெல்லாவுக்கும் அவரை காதலிக்கும் நபருக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாகி, அடுத்தடுத்த கட்டத்திற்கும் செல்கின்றனர்.
அதனால் டெல்லா சந்திக்கும் பிரச்சனைகள்? அவளது பெற்றோர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதனால் என்னென்ன மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்? என்பதே படத்தின் கதை.

பள்ளி செல்லும் இளம் பெண்ணாக நடித்திருக்கும் டெல்லாவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மிகைப்படுத்தாமல் கொடுத்திருக்கிறார். வின்னர் சொர்ணா, கிருஷ்ணா, நெல்லை சிவா என அனைவருமே கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இந்த படத்தை உருவாக்கியிருப்பதற்காக ஷக்தி வசந்த பிரபுவுக்கு வாழ்த்துக்கள். இன்று உலகம் சுருங்கிவிட்டது. உள்ளங்கையில் உலகத் தொடர்பு சாத்தியமாகியுள்ளது. இதனால் பல நன்மைகள் மட்டுமல்ல தீமைகளும் விளைகின்றன. படிக்கிற வயதில் பிள்ளைகள் சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கி தங்கள் நேரத்தை விரயமாக்குவதுடன் தகாத செயல்களில் இறங்கி, தங்கள் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிற விபரீதமும் நடக்கிறது.
வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன தப்பு செய்தாலும் வெளியே தெரியாது என்கிற எண்ணம் உள்ளது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் என்னென்ன செயல்பாடுகளில் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வோடு எச்சரிக்கை உணர்வும் பெற வேண்டும் என்பதை மையக் கருத்தாக கொண்டிருக்கின்றனர்.
சித்தார்த் பாபுவின் இசையில் பின்னணி இசை சிறப்பாக வந்திருக்கிறது. கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `ஏன் இந்த மயக்கம்' பெற்றோருக்கான விழிப்புணர்வு.

டேவிட் எப். சாண்ட்பெர்க் இயக்கத்தில் ஸ்டெப்னி சிக்மேன், டலிதா பேட்மேன், அந்தோணி லாபகலியா, மிராண்டா ஓட்டோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் `அனபெல்லா கிரியேஷன்' படத்தின் விமர்சனம்.
ஊருக்கு ஒதுக்கபுறத்தில் வாழ்ந்து வரும் அந்தோணி லாபகலியா அவரது வீட்டிலேயே பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். அவரது மகளான சமாரா லீ ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அவரது மனைவி மிராண்டா ஓட்டோவும் ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகவே முடங்கிக் கிடக்கிறார். அவருக்கு தேவையான அனைத்தையும் அந்தோணியே செய்து வருகிறார்.
இந்நிலையில், சில வருடங்கள் செல்ல தேவாலயத்தைச் சேர்ந்த மதர் மற்றும் ஆறு குழந்தைகளும் அந்தோணியின் வீட்டில் வந்து தங்குகின்றார். அவர்களிடம் குறிப்பிட்ட ஒரு அறையைக் காட்டி அந்த அறையைத் தவிர, அனைத்து பகுதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்தோணி கூறுகிறார். இந்நிலையில், அந்த பாதிரியாருடன் வந்த சிறுமிகளில் கால் ஊனமான ஒரு சிறுமி அந்த அறையை திறப்பதால் அனைவரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.

அந்த அறையில் உள்ள ஒரு அலமாரியில் இருக்கும் பொம்மை மூலம் இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது. இதுகுறித்து அந்த சிறுமி மற்றவர்களிடம் தெரிவித்தும், அதை யாரும் பொருட்படுத்தாததால் அந்த பொம்மையில் இருக்கும் ஆன்மா அந்த சிறுமியின் உடலில் புகுந்து விடுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனை, உயிரிழப்பு என அவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் அந்தோணி லாபகலியா, மிராண்டா ஓட்டோ, ஸ்டெப்னி சிக்மேன், டலிதா பேட்மேன், சமாரா லீ, லூலு வில்சன், டலிதா பேட்மேன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

டேவிட் எப். சாண்ட்பெர்க் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கதை பெரிதாக இல்லாவிட்டாலும், படத்தில் திகிலுக்கு பஞ்சமில்லாமல் இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. திடீர் திடீரென நிகழும் திகில் காட்சிகள் பார்ப்போருக்கு பயத்தை உண்டாக்குகிறது.
பெஞ்சமின் வால்பிஷின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `அனபெல்லா கிரியேஷன்' திகில் குறைவுதான்.

நோவா இயக்கத்தில் கவித்ரன் - பவிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் `நம்ம கத' படத்தின் விமர்சனம்.
தாய், தந்தையை இழந்த நாயகன் கவித்ரன் சென்னையில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகிறார். கானா பாடல்களை பாடுவதையே தொழிலாக கொண்டுள்ள கவித்ரன் அதனை வைத்தே தனது பிழைப்பை நடத்தி வருகிறார். மேலும் தனக்கு எப்போது சாவு வரும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவரது நண்பர்களாக வியட்நாம் வீடு சுந்தரம், பாண்டு, நெல்லை சிவா வருகின்றனர். அவர்களுக்கு மது வாங்கி கொடுத்து அவர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நாயகியான பவிஷாவின் அம்மா இறந்து போக, அங்கு கானா பாடுபவராக கவித்ரன் வருகிறார். தாயை இழந்ததால் பவிஷா, இனி என்னனென்ன பிரச்சனைகளை சந்திப்பாள். அவளது மனக்கஷ்டம் எப்படி இருக்கும் என்பதையே பாட்டாக பாடுகிறார். தாயை பிரிந்த பவிஷாவுக்கு சில நாட்கள் கழித்து, கவித்ரனின் நினைவும், அவன் பாடிய பாடலும் நினைவிற்கு வருகிறது. மேலும் அவளது நினைவை விட்டு செல்லாமலும் இருக்கிறது.

இதையடுத்து கவித்ரனை நேரில் சென்று பார்க்கும் பவிஷா, அவரை காதலிப்பதாக கூறுகிறாள். அவளது காதலுக்கு கவித்ரன் மறுப்பு தெரிவிக்கிறார். இருப்பினும் பவிஷா, கவித்ரனையே சுற்றி வருகிறார். இந்நிலையில், கவித்ரனை தனது வழிக்கு கொண்டுவர கவித்ரனை தனது வீட்டிற்கு வரவைக்கிறார் அங்கு கவித்ரன் - பவிஷா இடையே கசமுசா நடந்துவிடுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பவிஷா கூறுகிறார். ஆனால் பவிஷாவை திருமணம் செய்ய கவித்ரன் மறுப்பதால் இவர்களது பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது.
கடைசியில் கவித்ரன் - பவிஷா இருவரும் இணைந்தார்களா? அல்லது அவரது கொள்கையிலேயே தீவிரமாக இருந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சேரி பகுதியில் வாழும் ஒரு இளைஞனாக கவித்ரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வயதான தனது நண்பர்களுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல் நாயகியான நடித்திருக்கும் பவிஷாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் நாயகியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி வியட்நாம் வீடு சுந்தரம், பாண்டு, நெல்லை சிவா, கிரேன் மனோகர், வடிவுக்கரசி என அனைவருமே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
பெற்றோரை இழந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் கதையை காமெடி கலந்து கூறியிருக்கிறார் நோவா. படத்திற்கு நல்ல கதை அமைந்திருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் சிறப்பாக இருந்தன.
ஜே.கே.செல்வாவின் இசையில் கானா பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `நம்ம கத' கானா கதை.

ராம் இயக்கத்தில் வஸந்த் ரவி - ஆண்ட்ரியா - அஞ்சலி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் `தரமணி' படத்தின் விமர்சனம்.
சென்னைக்கு வேலை தேடி வரும் வஸந்த் ரவிக்கு ஒரு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. இந்நிலையில், அஞ்சலியுடன் வஸந்த் ரவிக்கு பழக்கம் ஏற்படுகிறது. அஞ்சலி அங்குள்ள மற்ற பெண்களை போல் மாடலாக இல்லாமல், சாதாரண பெண்ணாக வந்து செல்கிறார். நண்பர்களாக பழகி வரும் அஞ்சலி - வஸந்த் ரவி இடையே நாளடைவில் காதல் வருகிறது. இந்நிலையில், அஞ்சலிக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் அஞ்சலி வஸந்த் ரவியை கழட்டி விடுகிறார்.
அதேநேரத்தில் திருமணமான ஆண்ட்ரியா, அவரது கணவருடனான பிரச்சனையால் பிரிந்து விடுகிறார். இருவரும் பிரியும் சமயத்தில் தான் ஆண்ட்ரியா கருவுற்றிருப்பது தெரிய வருகிறது. அந்த குழந்தையும் வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பிக்க, கணவனைப் பிரிந்து வாழும் ஆண்ட்ரியாவும், அஞ்சலியால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட வசந்த் ரவியும், மழைக்காக ஓரிடத்தில் ஒதுங்கும் போது சந்திக்கிறார்கள்.

மழை நிற்பதற்கு முன்பாக இருவரும் தங்களைப் பற்றியும், தங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றனர். அதன் பிறகு அடுத்தடுது இருவரும் சந்திக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் வஸந்த் ரவி தனது காதலை ஆண்ட்ரியாவிடம் தெரிவிக்கிறார். முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆண்ட்ரியா பின்னர் அவருடன் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்.
முதலில் ஆண்ட்ரியா குறித்த எந்த குறையும் சொல்லாத வஸந்த் ரவி, ஒரு கட்டத்தில் அவளது உடைகள் குறித்தும், ஆண்ட்ரியாவின் போனுக்கு வரும் அழைப்புகள் குறித்தும் கேட்கத் தொடங்குகிறார். இது ஆண்ட்ரியாவுக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து விடுகிறார்கள். பின்னர் இருவரும் தனது தவறை உணர்ந்து மீண்டும் இணைந்தார்களா? அல்லது அவர்களது வாழ்க்கை வேறு பாதையில் சென்றதா? இவ்வாறாக இருவருக்கும் இடையே நடக்கும் ஊடல், கூடல்.இ காதல் என அனைத்தும் கலந்தது தான் படத்தின் மீதிக்கதை.
வஸந்த் ரவி தனது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு சில இடங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பது ரசிக்க வைக்கிறது.

அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதையின் தேவைக்கு ஏற்ப அனைத்து விதமாகவும் நடித்து ஆண்ட்ரியா அசத்தியிருக்கிறார். அஞ்சலியின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் சதீஷின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
தனது ஒவ்வொரு படைப்புகளின் மூலம் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டும் இயக்குநர் ராமின் தைரியத்துக்கு பாராட்டுக்கள். ஒரு இயக்குநரால் இப்படியும் படம் இயக்க முடியும், ஒரு கலைஞனாக தான் பார்த்ததை, தன் கண் முன்னால் நிகழ்ந்ததை அப்படியே படத்தில் காட்டியிருப்பது சிறப்பு. உலக மயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரமும், நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கத்தையும், அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்து வகையான இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக உருவாக்கியிருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் புதுமையான உணர்ச்சியை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் சென்னையையும், சென்னையில் வாழும் இளைஞர்கள், அவரது வாழ்க்கை என அருமையாக காட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் `தரமணி' பார்க்கவேண்டிய இ(ப)டம்.

கிரிஷ் இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா - ஸ்ரேயா சரண் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `கௌதமிபுத்ர சாதகர்ணி' படத்தின் விமர்சனம்.
போருக்கு செல்லும் தனது தந்தையை பார்த்த இளவரசர் பாலகிருஷ்ணா, தனது அம்மா ஹேமா மாலினியிடம் ஏன் போர் நடக்கிறது. அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல கேள்விகளை கேட்கிறார். பாலகிருஷ்ணாவின் சிரத்தை பார்த்து வியந்த ஹேம மாலினி ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர் ஆள்வதால் தான் சாம்ராஜியங்களுக்கு போர் வருகிறது என்று கூறுகிறார்.
அப்படியென்றால் ஒரே மன்னனே மொத்த நாட்டையும் ஆள வேண்டியது தானே என்று பாலகிருஷ்ணா கேட்க, அப்படிபட்ட ஆண்மகன் இன்னமும் பிறக்கவில்லை மகனே என்று ஹேம மாலினி கூறுகிறார். நான் பிறந்துவிட்டேன் தாயே. இந்த மொத்த நாட்டையும் ஒரே குடையின் கீழ் நான் ஆள்வேன். அதன்பின்னர் போர், உயிரிழப்பு உள்ளிட்ட மக்களுக்கு ஆபத்தான காரியங்கள் ஏதும் நிகழாமல் நான் பார்த்துக் கொள்வேன் என்று தாயின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்கிறார்.

அவ்வாறாக நாட்டை ஒரு குடையில் ஆள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுடன், அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்கிறார். அவரது ஆட்சியில் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் அனைத்தும் பாலகிருஷ்ணாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. இதையடுத்து வடக்கு தேசங்களை ஆளும் நாகப்பா என்ற மன்னரின் கீழ் இருக்கும் அனைத்து சாம்ராஜ்யங்கயைும் தனக்கு கீழ் கொண்டு வருவதற்காக அம்மன்னனுக்கு ஓலை ஒன்று அனுப்புகிறார்.
அந்த ஓலையில் நாகப்பாவின் வாளை தன்னிடம் ஒப்பித்து தனக்கு கீழ் ஆட்சி செலுத்தச் சொல்லி குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஓலையால் கடும் கோபத்திற்கு ஆளாகும் நாகப்பா மன்னன், பாலகிருஷ்ணாவின் தாத்தாவை என்னுடைய தாத்தாவே போரில் வீழ்த்தினார். பாலகிருஷ்ணா அப்பாவை தன்னுடைய அப்பாவே வீழ்த்தினார். அவனை ஒழுங்காக தன்னிடம் சரணடைய சொல் என்று கூறுகிறார். மேலும் பாலகிருஷ்ணாவின் மகனை தன்னிடம் ஒப்படைத்து நிம்மதியாக ஆட்சி புரியச் சொல். இல்லையென்றால் அவனுக்கு தான் பிரச்சனை என்று சொல்லி விடுகிறார்.

இந்நிலையில், தனது மகனை நாகப்பாவிடம் அனுப்பி வைக்கும் கௌதமி புத்ர சாதகர்னியாகிய பாலகிருஷ்ணா, தன் மகனை எப்படி மீட்க வேண்டும் என்று தனக்கு தெரியும் என்று கூறிவிடுகிறார். தனது மகன் உள்ளிட்ட நாகப்பாவிடம் சிக்கி அவதிப்படும் மற்ற நாட்டு மன்னர்களின் இளவரசர்களை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார். இந்நிலையில், ஆங்கிலேயர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சி அமைக்க முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில், வட திசை படைகளுக்கும் தென் திசை படைகளுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரில் யார் வென்றார்கள்? தனது மகன் உள்ளிட்ட மற்ற இளவரசர்களையும் கௌதமி புத்ர சாதகர்னி எப்படி மீட்கிறார்? ஆங்கிலேயர்கள் ஏதேனும் சூழ்ச்சி செய்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாலகிருஷ்ணா நடிக்கும் 100-வது படம் கௌதமி புத்ர சாதகர்னி. தனது 100-வது படத்தில் எந்த அலட்டலும் இல்லாமல், ஒரு ராஜாவுக்கு தேவையான உடலுடனும், பேச்சுடனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாலகிருஷ்ணாவின் மனைவியாக, ராணிக்கு உண்டான தனித்துவத்துடன் ஸ்ரேயா சரண் சிறப்பாக நடித்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் அம்மாவாக ஹேம மாலினி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிவராஜ்குமார், ஃபரா கைராமி, ரவி பிரகாஷ், தனிகெல்லா பரணி, சுபலேகா சுதாகர், கபீர் பேடி உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
கௌதமிபுத்ர சாதகர்னியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி குறுகிய நாளில் இந்த படத்தை பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் கிரிஷ். நாடு முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட கௌதமிபுத்ர சாதகர்னியின் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருப்பதற்காக கிரிஷ்க்கு பாராட்டுக்கள். படத்தின் வசனங்கள் எளிதில் புரியும்படி எழுதியிருப்பது சிறப்பு.
தெலுங்கில் இருந்து டப் செய்யப்பட்டுள்ளதால், சிரந்தன் பாத் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. எனினும் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னண இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. வி.எஸ்.ஞானசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `கௌதமிபுத்ர சாதகர்ணி' வரலாற்று காவியம்.

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - நிவேதா பெத்துராஜ் - பார்த்திபன் - சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் விமர்சனம்.
தனது ஊரில் கோவில் இல்லாததால் உதயநிதி ஸ்டாலின் ஊரில் உள்ள கோவிலில் பார்த்திபன் தனது மகள் நிவேதா பெத்துராஜுக்கு காது குத்து நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நேரம் பார்த்து உதயநிதி ஊரில் ஒருவர் உயிரிழந்ததால், காது குத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் பார்த்திபனையும் அந்த ஊரில் இருந்து விரட்டி விடுகின்றனர்.
இதனால் கடுப்பாகும் பார்த்திபன், உதயநிதி ஊரில் உள்ளவர்களை காலி செய்ய முடிவு செய்கிறார். அதாவது அவர்களை கொல்லாமல், அந்த ஊரில் இருந்து விரட்ட முடிவு செய்கிறார். அதன்படி பலருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கிக் கொடுத்து அவர்களை அங்கேயே இருக்கும்படி செய்துவிடுகிறார். இதனால் உதயநிதியின் ஊரில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விடுகிறது. இந்நிலையில், பெரியவனாகும் உதயநிதிக்கு வெளியூர், வெளிநாடு செல்ல விருப்பமில்லை.

மேலும் தனது ஊருக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். உதயநிதியின் ஊர் மக்கள் தங்களது மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பக்கத்து ஊருக்கு தான் போக வேண்டி இருக்கிறது. இந்நிலையில், தனது ஊருக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் உதயநிதி அதற்கான வழியை யோசிக்கிறார். இந்நிலையில், பார்த்திபனின் தங்கையை திருமணம் செய்து கொண்ட நமோ நாராயணாவின் ஊருக்கு தேவையான உதவிகளை பார்த்திபன் செய்து கொடுக்கிறார்.
இதைப் பார்த்த உதயநிதிக்கு ஒரு யோசனை வருகிறது. தனது தங்கை ஊருக்கே இந்த உதவிகளை செய்யும் பார்த்திபன், அவரது மகளுக்காக என்னென்ன உதவிகளை செய்வார் என்று யோசிக்கிறார். மேலும் பார்த்திபனின் மகளான நிவேதா பெத்துராஜை தேடிப்பிடித்து காதலிக்கவும் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் நிவேதா பெத்துராஜும் உதயநிதியை காதலிக்க தொடங்குகிறார்.

பொதுவாகவே புகழ்ச்சியை விரும்பும் பார்த்திபனுக்கு வேறு யாருக்காவது புகழ்ச்சி சென்றால் அது பிடிக்காது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து அந்த ஊரில் பிரபலமாகும் உதயநிதியை ஊரை விட்டே காலி செய்ய வேண்டும் என்று பார்த்திபன் முடிவு செய்கிறார். அதற்கான முயற்சியில் இறங்கும் போது உதயநிதி தனது மகளை காதலிப்பதும் தெரிய வருகிறது.
இந்நிலையில், பார்த்திபன் தான் தனது ஊர் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து மக்கள்தொகையை குறைக்கிறார் என்ற உண்மையும் உதயநிதிக்கு தெரிய வர, உதயநிதி பார்த்திபனின் திட்டத்தை எப்படி முறியடித்தார்? பார்த்திபனின் மகள் நிவேதா பெத்துராஜுடன் இணைந்தாரா? அதற்கு பார்த்திபன் தடையாக இருந்தாரா? கடைசியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் முறையாக கிராமத்துப் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தனது ஊருக்கு தேவையானதை செய்யும் கிராமத்து இளைஞனாக, அவருக்கு அந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. குறிப்பாக பார்த்திபனுடனான அவரது காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. கிராமத்து பெண்ணாக நிவேதா பெத்துராஜின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. படம் முழுக்க அழகு தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார்.
பார்த்திபன் தனக்கே உண்டான நக்கலுடன் கொஞ்சம் வில்லத்தனத்தையும் சேர்த்து ரசிக்க வைக்கிறார். பார்த்திபனின் கதாபாத்திரம் படத்திற்கே பலமாக இருக்கிறது. பார்திபனுடனே டிரைவராக வரும் மயில்சாமி படம் முழுக்க வந்து அவருக்குண்டான கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். உதயநிதி நண்பனாக வரும் சூரி படம் முழுக்க கலகலப்புக்கு பஞ்சம் வைக்காமல் ரசிக்க வைக்கிறார். சூரி, பார்த்திபன் இடையேயான பேச்சுகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. மற்றபடி மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணா தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

ஊரை நேசிக்கும் ஒரு இளைஞன், தனது ஊரில் உள்ள அனைவரையும் காலி செய்ய சபதம் எடுக்கும் ஒருவரிடம் இருந்து தனது ஊரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை கிராமத்து பின்னணியில் காமெடி கலந்து சிறப்பாக கொடுத்திருக்கிறார் தளபதி பிரபு. குறிப்பாக பார்த்திபனின் கதாபாத்திரம் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மயில்சாமியும் அவருடன் சேர்ந்து போடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது.
டி.இமானின் இசையில் பாடல்கள் கிராமத்து சாயலில் வரவேற்பை பெற்றிருக்கிறது. பின்னணி இசையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். கே.டி.பாலசுப்ரமணியமின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. கிராமத்து வயல்வெளிகளை வளமாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `பொதுவாக எம்மனசு தங்கம்' கிராமத்தின் சிங்கம்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலா பால் - கஜோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் விமர்சனம்.
வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் - அமாலா பால் இந்த பாகத்தில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ், சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் என தனது குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அக்கறை காட்டும் குடும்பப் பெண்ணாக அமலாபால் வருகிறார். இவ்வாறாக குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமலா பால், குடும்பத்திற்கு எது தேவை, தேவையில்லை என்பதை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.
இதுஒருபுறம் இருக்க குடும்பப் பொறுப்புகளை தானே ஏற்றுக் கொள்ளும் தனுஷ், கடைசியாக கிடைத்த கட்டிட பணியை சரியாக செய்து கொடுத்ததால், அவர் பணிபுரியும் கம்பெனிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில், தென்னிந்தியாவில் கட்டிட தொழிலில் சாதனை படைப்போருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் அனைத்து வகையான விருதையும் தென்னிந்தியாவிலேயே பெரிய கட்டிட நிறுவனமான கஜோலின் கட்டிட நிறுவனம் கைப்பற்றுகிறது. ஆனால் சிறந்த பொறியாளருக்கான விருது மட்டும் தனுஷ்க்கு கிடைத்து விடுகிறது.

அனைத்திலும் தனது நிறுவனம் தான் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் கஜோல், சிறந்த பொறியாளருக்கான விருது வாங்கிய தனுஷை தன்னுடைய கம்பனெிக்கு இழுக்க முயற்சி செய்கிறார். இயல்பாகவே அங்கு செல்ல விரும்பாத தனுஷ், கஜோலின் திமிர் பேச்சால் அவருடன் பணிபுரிய மறுக்கிறார். இந்நிலையில், தனுஷை வேலையை விட்டு தூக்க வேண்டும் என்று அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு கஜோல் இடைஞ்சல் கொடுக்கிறார்.
கஜோலின் இடைஞ்சலால் அந்த கம்பெனியில் ஒப்பந்தமாகிய சில கட்டிட பணிகளும் கைவிட்டு போகிறது. இதையடுத்து அந்த கம்பெனியின் தலைமை அதிகாரி கஜோலை சென்று பார்க்கிறார். அவரிடம் தங்கள் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது, தனுஷை வேலையில் இருந்து நீக்கினால், அவரது கம்பெனியில் இருந்து கைவிட்டு போன அனைத்து பணிகளையும் திரும்ப கிடைக்க செய்வதாக கஜோல் உறுதி அளிக்கிறார். ஆனால் தனுஷை வேலையில் இருந்து நீக்க முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி உறுதியாக தெரிவித்து விட்டு சென்றுவிடுகிறார்.

இந்நிலையில், தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று முடிவு செய்யும் தனுஷ், தனது வேலையை ராஜினாமா செய்கிறார். மேலும் கஜோலை நேரில் சென்று பார்க்கிறார். அப்போது அவரை கஜோல் தனது கம்பெனியில் சேரச் சொல்ல, கஜோலின் கம்பெனியில் சேர மறுக்கும் தனுஷ் தனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. வேலையில்லா பட்டதாரி என்ற அடையாளத்துடனே தான் இருக்க விரும்புகிறேன். இனிமேல் தன்னை கஜோலால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
இதையடுத்து, வேலையில்லா பட்டதாரி என்ற தனது அடையாளத்துடன் தனுஷ் என்ன செய்தார்? கஜோல் அவருக்கு மீண்டும் தொல்லைகளை கொடுத்தாரா? கஜோலுக்கு எதிராக தனுஷ் என்ன செய்தார்? வேலையில்லா பட்டதாரியாக எப்படி சாதிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

தனுஷ் தனக்கே உரிய இயல்பான நடிப்பால் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கிறார். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் ஒரு வேலையில்லா பட்டதாரியாகவே தனுஷ் ரசிக்க வைக்கிறார். மனைவியிடம் அடி வாங்குவதிலும், கஜோலை எதிர்த்து நிற்பதிலும் தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அமலா பால் ஒரு மனைவியாகவும், தனது குடும்பத்தின் மீது அக்கறை கொள்ளும் குடும்ப பெண்ணாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். தனுஷ் - அமலா பால் இடையேயான காதலும், பந்தமும் படத்தில் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. தனது கணவனை திட்டுவதிலும், குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுவதிலும் அமலா பால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மின்சார கனவு படத்திற்கு பிறகு 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடித்திருக்கும் கஜோல், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் கட்டிட தொழிலில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற கர்வத்துடன் மிரள வைத்திருக்கிறார்.
விவேக் தனக்கே உரிய ஸ்டைலில் சிரிக்க வைக்கிறார். சமுத்திரக்கனி தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரிஷிகேஷ், மீரா கிருஷ்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரிது வர்மா சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பாக இயக்கி இருக்கிறார். கூட்டுக் குடும்பம், அன்பு, பாசம், காதல், அக்கறை, பிரச்சனை எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். கஜோல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கே பலத்தை கூட்டியிருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவில் சமீர் தாஹீர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.
மொத்தத்தில் `வேலையில்லா பட்டதாரி 2' பொழுதுபோக்கு.

டெடி சான் இயக்கத்தில் டோனி யென், வேங் போகியாங், சார்லி யங், மிச்சல் பாய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள `குங் பூ கில்லர்' படத்தின் விமர்சனம்.
நாயகன் டோனி யென் ஹாங் காங்கில் குங் பூ கலையை பயிற்றுவிக்கும் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். டோனி யென்னை போலவே பல குங் பூ மாஸ்டர்களும் குங் பூ பள்ளிகளை நடத்தி வருகின்றனர். தானே குங் பூவில் சிறந்தவன் என்பதை நிருபிக்க வேண்டும் என்று டோனி யென்னின் ஆசை. இதில் தனது பள்ளி தான் குங் பூ வித்தையில் சிறந்தது என்பதை நிருபிக்கும் வகையில் குங் பூ பள்ளிகளுக்கு இடையே அவ்வப்போது போட்டிகளும் நடத்தப்படுகிறது. அதில் பெரும்பாலும் குங் பூ மாஸ்டர்கள் மோதுவார்கள். இதில் ஒரு சண்டையின் போது மாஸ்டர் ஒருவரை, டோனி யென் கடுமையாக தாக்கிவிடுகிறார். இதில் அந்த மாஸ்டரும் இறந்து விடுகிறார்.
இந்நிலையில் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டு டோனி யென் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு தான் ஒரு குங் பூ மாஸ்டர் என்பதை வெளிப்படுத்தாமல் சாதரண மனிதராகவே வலம்வருவதால், ஜெயிலில் அவருக்கு பலரும் தொல்லை கொடுக்கின்றனர். ஜெயில் கைதிகளுக்காக பொழுதுபோக்கு நேரமும் ஒதுக்கப்படுகிறது. அந்த சமயத்தில் கைதிகளுக்கு தொலைக்காட்சி போட்டுக் காட்டப்படும். அப்போது தொலைக்காட்சியில் சென்ற செய்தித் துளியில், குங் பூ மாஸ்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக செய்தி வருகிறது.

அதைப் பார்த்த டோனி யென் அதிர்ச்சியடைகிறார். மேலும் தனக்கு அந்த கொலைகாரன் குறித்த தகவல் தெரியும் என்றும் கூறுகிறார்.
இந்த கொலை வழக்கில் தன்னால் உதவ முடியும் என்று டோனி கூற, ஜெயிலில் இருந்து தப்பிக்கவே இவன் இவ்வாறு கூறுகிறான் என்று ஜெயில் காவலாளிகள் டோனியின் பேச்சை கேட்கவில்லை.
இந்நிலையில், டோனியிடம் மற்ற ஜெயில் கைதிகள் வம்பு இழுக்க தான் யார் என்பதை அவர்களுக்கு காட்டுகிறார். அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார். இதையடுத்து, கும் பூ மாஸ்டர் கொலை குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரியும் அவரை பார்க்க வருகிறார்.

அந்த போலீசிடம் அந்த கொலைகாரன் ஒரு சீரியல் கில்லர் என்றும் அவன் அடுத்ததாக இந்த குங் பூ கலையில் கைதேர்ந்த குறிவைத்திருக்கிறான். அதற்குள் அவர்களை காப்பாற்றுங்கள். இந்த வழக்கில் தங்களுக்கு என்னால் உதவமுடியும் என்றும் கூறுகிறார். டோனியின் பேச்சை அந்த போலீசும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்.
இந்நிலையில், டோனி சொன்னது போலவே, அடுத்தடுத்து குங் பூ மாஸ்டர்கள் கொல்லப்பட டோனியின் உதவியை போலீசார் நாடுகின்றனர். கடைசியில் டோனி யென் போலீசுக்கு உதவி செய்து அந்த சீரியல் கில்லரை பிடிக்க உதவினாரா? அல்லது அந்த சீரியல் கில்லர் அனைத்து குங் பூ மாஸ்டர்களையும் கொன்றாரா? அந்த சீரியல் கில்லர் ஏன் குங் பூ மாஸ்டர்களை தேர்ந்தெடுத்து கொல்கிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

வயசானாலும் ஸ்டைலும் அழகும் இன்னமும் உன்னைவிட்டு போகல என்ற ரம்யா கிருஷ்ணன் வசனம் போல, வயதானாலும் தனது உடற்கட்டிலும், குங் பூ கலையிலும் தான் சிறந்தவர் என்பதை டோனி யென் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். அதேபோல் அனைத்து குங் பூ மாஸ்டர்களையும் ஒருகை பார்ப்பதில் வல்லவராகவும், சீரியல் கில்லராகவும் நடித்திருக்கும் வேங் போகியாங்கின் நடிப்பு படத்திற்கே பலம். டோனி யென்னை விட வேங் போகியாங்கிற்கு தான் சண்டைக்காட்சிகள் அதிகமாக இருக்கிறது.
வெவ்வேறு விதமான குங் பூ மாஸ்டர்களிடம் மோதும் போது அனைவரையும் தோற்கடிப்பதில் ஒரு சைக்கோவாகவே வாழ்ந்திருக்கிறார் வேங் போகியாங்கி. டோனி யென்னுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவரது கதாபாத்திரமும் முக்கியமானதாக இருக்கிறது. சார்லி யங், மிச்சல் பாய் உள்ளிட்டோரும் படத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை போதும் போதும் என்றளவுக்கு சண்டைக் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப படத்தை இயக்கியிருக்கிறார் டெடி சான். திரைக்கதை விறுவிறுப்பாக இருப்பதால் படம் ரசித்து பார்க்கும்படி இருக்கிறது.
பீட்டர் காமின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. விங்-ஹங் வோங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் நல்லபடியாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `குங் பூ கில்லர்' மரணஅடி

சம்பந்த நந்தி இயக்கத்தில் ரவிதேஜா - தமன்னா - ராஷி கண்ணா நடிப்பில் டப் செய்து வெளியாகியிருக்கும் `பெங்கால் டைகர்' படத்தின் விமர்சனம்.
ரவிதேஜா தனது படிப்பை முடித்துவிட்டு வேலை ஏதுமின்றி ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார். அவரது போக்கு பிடிக்காத ரவிதேஜாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதற்காக பெண் பார்க்கவும் செல்கின்றனர். ஆனால் மணமகளுக்கு ரவிதேஜாவை பிடிக்கவில்லை. ஏன் என்று காரணம் கேட்க, தான் திருமணம் செய்யும் நபர் ஊரிலேயே பிரபலமான நபராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள்.
இதையடுத்து தான் ஒரு பெரிய ஆளாக மாறிவருவதாகக் கூறி ரவிதேஜா அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அதற்காக திட்டம் ஒன்றும் போடுகிறார். அவரது திட்டத்தின்படி, பேட்டி அளித்துக் கொண்டிருந்த அமைச்சர் ஒருவர் மீது கல்லை தூக்கி வீசுகிறார். அமைச்சர் மீது கல்லை வீசயதால் போலீசார் அவரை கைது செய்து அடிக்க, பப்ளிசிட்டிக்காகவே தான் அவ்வாறு செய்ததாக ரவிதேஜா கூறுகிறார். இதனால் கோபமடையும் அமைச்சர் ரவிதேஜாவை நேரில் பார்த்து பேசுகிறார். அதில் ரவிதேஜாவுக்கு பயமே இல்லை என்பதை உணர்ந்து ரவிதேஜாவை தன்னுடன் அழைத்து செல்கிறார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சரான ராவ் ரமேஷின் மகள் ராஷி கண்ணா வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறாள். இந்தியாவில் தனது எதிரிகளால் தன் மகளுக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்ற யோசனையில் இருக்கும் ராவ் ரமேஷிடம், ரவிதேஜா குறித்து அந்த அமைச்சர் கூற, தனது பெண்ணுக்கு துணையாக வர ரவிதேஜாவை அழைக்கிறார்.
இதையடுத்து, ரவிதேஜா மேலும் பிரபலமடைகிறார். இந்நிலையில், இந்தியா வரும் ராஷி கண்ணாவுக்கு தொல்லை கொடுக்கும் சிலரையும் அடித்து துவம்சம் செய்கிறார். இதனால் ராஷிக்கு, ரவி தேஜா மீது காதல் வந்துவிடுகிறது. தனது மகளின் ஆசையை புரிந்து கொண்ட ராவ் ரமேஷ், தனது மகளை ரவிதேஜாவுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்கிறார். அதனை தனது வீட்டு நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர், அனைத்து
அமைச்சர்கள், பிரபலங்கள் முன்னிலையில் அறிவிக்கிறார்.

தனது திட்டத்தின் படியே காயை நகர்த்தும் ரவிதேஜா, ராவ் ரமேஷின் இந்த அறிவிப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறுகிறார் ஆனால் அந்த பெண் யார் என்பதை கூறாமல் இருக்கும் ரவிதேஜாவிடம், அந்த பெண் யாராக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பதாக முதலமைச்சர் வாக்குறுதி கூற, முதலமைச்சரின் மகளான தமன்னாவை தான், ரவிதேஜா ஒருமனதாக காதலிப்பதாக கூறிவிடுகிறார். ரவிதேஜாவின் இந்த அறிவிப்பை கேட்டு முதலமைச்சர் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ரவி தேஜா ஏன் இவ்வாறு கூறினார்? அதன் பின்னணியில் இருக்கும் உள்நோக்கம் என்ன? கடைசியில் ரவிதேஜா தமன்னா உடன் இணைந்தாரா? ராஷி கண்ணாவை மணந்தாரா? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
ரவிதேஜா தனக்கே உரிய கிண்டல் கலந்த பேச்சுடன் மக்களை ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் மிரள வைக்கிறார். அவரது படபட பேச்சிலும், காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தமன்னா வழக்கம் போல தனது கதாபாத்திரத்திற்கு தேவயானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். காதல், கவர்ச்சி, ரொமான்ஸ் என அனைத்திலும் ராஷி கண்ணாவின் பங்கு அளப்பறியது.

ராவ் ரமேஷ், தனிகெல்லா பரணி, பூசனி கிருஷ்ண முரளி, பிரம்மானந்தம் என அனைவருமே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
படத்தின் தலைப்புக்கு ஏற்ப ரவிதேஜாவை ஒரு புலியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் சம்பந்த நந்தி. சண்டைக்காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். குடும்பம், காதல், ரொமான்ஸ், அரசியல் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.
பீம்ஸ் சீசிரோலியோவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார். சவுந்தர்ராஜனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பெங்கால் டைகர்' விறுவிறு ஓட்டம்.

ஜெய்சன் இயக்கத்தில் நிகில் மோகன், ரஹ்மான், இனியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் `சதுரஅடி 3500' படத்தின் விமர்சனம்.
வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும் செய்திகள் வெளிவர போலீசும் அந்த கட்டிடத்திற்குள் செல்ல பயப்படுகின்றனர்.
கட்டிடத்தின் பாக்கி வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியான நாயகன் நிகில் மோகனிடம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் நிகில் மோகன் கொலையில் இருக்கும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பல தடங்கல்கள் வருகின்றன.

அந்த தடங்கல்கள் அனைத்தையும் தாண்டி, கொலைக்கான மர்மத்தை கண்டுபிடித்தாரா? உண்மையாகவே அந்த கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகள் ஏதேனும் இருக்கிறதா? அந்த கொலைக்கு காரணமானவர் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் நிகில் மோகன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான உடற்கட்டுடன் இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. . இனியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரஹ்மான் தனது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது.
பிரதாப் போத்தனுக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் அமையவில்லை என்று தான் கூறவேண்டும். மற்றபடி கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், சுவாதி தீக்ஷித் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்கு, ஏற்ற திரைக்கதையை அமைப்பதில் இயக்குநர் ஜெய்சன் கோட்டைவிட்டிருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளுக்கு இடையேயான தொடர்பும் சரியில்லை. காட்சிகள் ஏனோ தானோவென்று எடுக்கப்பட்டிருப்பது போல தோன்றுகிறது. திடீர் திடீரென்று மாறுபட்ட காட்சிகள் வந்து முகசுளிப்பை உருவாக்குகிறது. அதேபோல் பல படங்களில் தங்களது நடிப்பை நிரூபித்திருக்கும் பல முன்னணி நடிகர்களை சரியாக இயக்குநர் வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி படத்தில் ப்ளஸ் என்று குறிப்பிட்டு கூறும்படியாக ஏதும் இல்லை.
கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையும் பாராட்டும்படி இல்லை. ஐ.பிரான்சிஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `சதுரஅடி 3500' நமக்குதான் பேரிடி.

வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்கத்தில் சதீஷ் ராவன் - டெல்னா டேவிஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்கம் படத்தின் விமர்சனம்.
தனது தந்தையை இழந்த நாயகன் சதீஷ் ராவன், அம்மாவின் கட்டுப்பாட்டில் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். போதை பொருட்களை விற்றுவரும் சதீஷின் அம்மா, சதீஷின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். அதன்மூலம் சதீஷ் தவறான வழிக்கு செல்லவும் வித்திடுகிறாள். தனது அன்னையின் பேச்சைக் கேட்டு நடக்கும் சதீஷ், அடிதடி சண்டை, கொலை உள்ளிட்ட பல குற்றச் செயல்களை செய்து வருகிறான்.
அதேநேரத்தில் சதீஷுக்கு நெருக்கமான நான்கு நண்பர்களில், ஒருவனது அம்மா படிப்பே முக்கியம். படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தனது மகனுக்கு ஊக்கம் அளிக்கிறார். இதற்கிடையே, நாயகி டெல்னா டேவிசுக்கு, சதீஷ் மீது காதல் வருகிறது. சிறுவயது முதலே சதீஷுடன் இருந்த ஈர்ப்பு பின்னர் காதலாக மாற, ஒருகட்டத்தில் இருவருமே காதலிக்க தொடங்கி விடுகின்றனர். அந்த காதலையும் தவறாக பயன்படுத்திவிடுகிறார் சதீஷ்.

தனது அன்னையின் பேச்சைக் கேட்டு படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த சதீஷின் நண்பன் கலெக்டராக வருகிறார். மறுபக்கத்தில் தனது அம்மாவால் பள்ளிப்படிப்பை தொலைத்து ஒரு ரவுடியாக மாறி நிற்கிறார் சதீஷ். இந்நிலையில், கொலை குற்றம் ஒன்றில் போலீசில் சிக்கிய சதீஷை என்கவுன்டர் செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் தனது நண்பனை காப்பாற்ற கலெக்டரான சதீஷின் நண்பர் முயற்சி செய்கிறார்.
கடைசியில் படிப்பை துளைத்த ஒருவர், படிப்புக்கு முக்கியத்துவத்தை உணர்ந்த ஒருவர் என இருவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு ரவுடியாக வலம்வரும் சதீஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவரது பேச்சும், நடை, உடை பாவனைகள் என அனைத்திலுமே வடசென்னை இளைஞனாகவே வாழ்ந்த்திருக்கிறார். டெல்னா டேவிஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார்.

ரவுடி வாழ்க்கையை துறந்து நல்ல வாழ்க்கையை வாழ முயற்சி செய்து வரும் ரஞ்சித் படத்திற்கு பக்கபலமாக சிறப்பாக நடித்திருக்கிறார். வைதேகி, வடிவுக்கரசி, கயல் தேவராஜ் உள்ளிட்டோர் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார்.
இரு இளைஞர்களின் வாழ்க்கை அவர்களது அம்மாவின் போதைனயால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை வடசென்னை சாயலில் சிறப்பாக இயக்கியிருக்கிறார் வேலுதாஸ் ஞானசம்பந்தம். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். படிப்பு என்பது எவ்வுளவு முக்கியம் என்பதை பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்க எடுத்துக் கூற வேண்டும் என்பதை படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஈஸ்வரி புரொடக்ஷன் இசையில் பாடல்கள் கேட்கும் படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவில் காட்சிகள் வடசென்னையை சுற்றி சுழன்றிருக்கிறது.
மொத்தத்தில் `ஆக்கம்' கல்விக்கான ஏக்கம்.