search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sean Roldan"

    • இசையமைப்பாளர் தமன் ஜூனியர் பங்கேற்பாளர்களுக்கு சினிமா வாய்ப்பு அளித்தார்.
    • சினிமா வாய்ப்பை உறுதி செய்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    கொண்ட்டாடமும் கோலாகலமுமாகத் துவங்கி நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10-வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைக்கும்படியான அற்புதமான சம்பவம் நிகழ்ந்தது.

    எளிய பின்னணியிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகர் சேட்டுவிற்கு சினிமா வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் நிகழ்ச்சியிலும் அந்நிகச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே இசையமைப்பாளர் தமன் பல ஜூனியர் பங்கேற்பாளர்களுக்கு சினிமா வாய்ப்பினை அளித்தார்.

     


    அதே போல் இப்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆரம்பகட்டத்திலேயே, கானா சேட்டு என்ற பங்கேற்பாளருக்கு சினிமா வாய்ப்பை உறுதி செய்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், தான் இசையமைக்கும் படத்தில் கானா சேட்டுக்கு பாடும் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். எதிர்பாராத இந்த சர்ப்ரைசால் கானா சேட்டு மகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், இறுதிக்கட்ட வெற்றியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதைத் தாண்டி, ஆரம்பத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு பங்கேற்பாளருக்குக் கிடைத்தது அனைவரையும் வியக்கவைத்த அற்புத தருணமாக அமைந்தது. 

    • ஜடா படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் குமரன்.
    • இவர் இயக்கிய பறை மியூசிக் ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

    கதிர் நடிப்பில் வெளியான ஜடா படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் குமரன். 2019ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் இவர் இயக்கிய பறை மியூசில் ஆல்பம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    அப்டேட் கொடுத்த ஷான் ரோல்டன்
    அப்டேட் கொடுத்த ஷான் ரோல்டன்

    இந்நிலையில் ஷான் ரோல்டன் மற்றும் குமரனின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ரசிகர் ஒருவர் பறை ஆல்பம் பாடலுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணிக்காக காத்திருக்கிறோம். அப்டேட் கொடுங்க என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நாங்கள் இருவரும் இணைந்து வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    • முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பா.பாண்டி, மெஹந்தி சர்க்கஸ், வேலையில்லா பட்டதாரி-2, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைததவர் ஷான் ரோல்டன்.
    • இவர் தற்போது பதிவிட்டிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஷான் ரோல்டன். இவர் "வாயை மூடி பேசவும்" படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின், முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பா.பாண்டி, மெஹந்தி சர்க்கஸ், வேலையில்லா பட்டதாரி-2, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலடைந்தார்.

     

    ஷான் ரோல்டன்

    ஷான் ரோல்டன்

    இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், என் நண்பர் இயக்குனர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சாரந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது.

     

    ஷான் ரோல்டன்

    ஷான் ரோல்டன்

    சிந்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள் என்று பதிவிட்டுள்ளார். இவர் குறிப்பிட்டிருக்கும் அந்த இயக்குனர் யார் என்று? பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு சிலர் அவர்களுக்கு மனதில் தோன்றும் இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகின்றனர். இருந்தும் அவர் சொல்லியிருக்கும் அந்த இயக்குனர் யார் என்பது அவர் பதிவிட்டால் மட்டுமே தெரியும் என்றும் இணையத்தில் பேசி வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.
    • இவர் புதிய வீடியோ பாடல் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஷான் ரோல்டன். இவர் "வாயை மூடி பேசவும்" பேசவும் படத்தின்மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின், "வேலையில்லா பட்டதாரி-2", "ஜெய்பீம்" போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.


    ஷான் ரோல்டன்

    தனி ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் ஷான் ரோல்டன் தற்போது புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். ஒரு நிமிடம் உள்ள இந்த பாடலின் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஷான் ரோல்டன் பகிர்ந்துள்ளார். கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



    இளையராஜா இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள் என்று படவிழாவில் ஷான் ரோல்டன் பேசினார். #MehandiCircus #Ilayaraja
    இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கராஜ், சுவாதி திரிபாதி, விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் விழா நடைபெற்றது.

    இதில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது: ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கு இன்ஸ்பிரே‌ஷன் இளையராஜா சார் தான். குறிப்பாக அவரது இசையில் 80-களில் வெளியான படங்களை தனியாகச் சொல்லலாம். பாடலின் வரிகள், இசைக்கோர்வைகள் அனைத்துமே ஒரு மேஜிக்கலாக இருக்கும். அதே போல் செய்து பார்த்தால் சரியாக வராது.



    அவருடைய இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். பழைய இசை, புதிய இசை என்று பலர் விவாதம் செய்வதாக கேள்விப்பட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை எப்போதுமே நல்லாயிருக்கிற இசை தான் நல்ல இசை. பழைய இசை என்று ஒன்று கிடையாது. இளையராஜா சாருடைய இசையை பழையது என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. கிணற்றில் எப்போதுமே தண்ணீர் வந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இளையராஜாவின் இசையும். இன்னுமொரு 50 ஆண்டுகள் கழித்து அவரது இசையைக் கேட்டால் அதிலிருந்து ஒரு இன்ஸ்பிரே‌ஷன் கிடைக்கும். அவரது இசையை மேலோட்டமாகப் பார்த்தால் சிம்பிளாகத் தெரியும். இசையையே டெக்னாலஜியாக உபயோகித்தவர் இளையராஜா.

    இவ்வாறு அவர் கூறினார். #MehandiCircus #Ilayaraja

    ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ராஜு முருகன் கதை எழுத, சரவணன் ராஜேந்திரன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #MehandiCircus #RajuMurugan
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படம் `மெஹந்தி சர்க்கஸ்'. `குக்கு', `ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். ராஜு முருகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். 

    மாதம்பட்டி ரங்கராஜ் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மாநகரம் பட பிரபலம் செல்வகுமார்.எஸ்.கே. ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 



    கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உருவாக இருப்பதாகவும், நாயகனுக்கும், சர்க்கஸ் செய்பவருக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி படம் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தில் யானைக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MehandiCircus #RajuMurugan

    ×