ஏக் காவ் மே.. நீ ஆம்பளையாமே.. - ரகு தாத்தா படத்தின் பாடல் வெளியானது

ரகுத் தாதா வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் அடுத்த பாடலான `ஏக் காவ் மே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
ஏக் காவ் மே.. நீ ஆம்பளையாமே.. - ரகு தாத்தா படத்தின் பாடல் வெளியானது
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்று டீசர் வெளியானது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் பாடலான அருகே வா பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.

தற்பொழுது படத்தின் அடுத்த பாடலான `ஏக் காவ் மே' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை கானா பாடகரான கானா விமலா பாடியுள்ளார். பாடலின் வரிகளை பாக்யம் ஷங்கர் எழுதியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com