என் மலர்

  நீங்கள் தேடியது "Saravana Rajendhiran"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ராஜு முருகன் கதை எழுத, சரவணன் ராஜேந்திரன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #MehandiCircus #RajuMurugan
  ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படம் `மெஹந்தி சர்க்கஸ்'. `குக்கு', `ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். ராஜு முருகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். 

  மாதம்பட்டி ரங்கராஜ் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மாநகரம் பட பிரபலம் செல்வகுமார்.எஸ்.கே. ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.   கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உருவாக இருப்பதாகவும், நாயகனுக்கும், சர்க்கஸ் செய்பவருக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி படம் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தில் யானைக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MehandiCircus #RajuMurugan

  ×