search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunny Charles"

    சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - சுவேதா திரிபாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் விமர்சனம். #MehandiCircus #MehandiCircusReview
    தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார்.

    இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது. சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கிறார். சுவாதியை பார்க்கும் ரங்கராஜுக்கு அவர் மீது காதல் வருகிறது. சுவாதியை கரம்பிடிக்க ஆசைப்படுகிறார்.



    நாயகி மீது ரங்கராஜ் பைத்தியமாக திரிய, சுவாதியும் ரங்கராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் சுவாதியின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் ரங்கராஜுக்கு ஒரு போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் மாரிமுத்துவுக்கும் தெரிய வருகிறது. அனைத்திற்கும் ஜாதி பார்க்கும் மாரிமுத்து தனது மகனின் காதலுக்கு தடையாக நிற்கிறார்.

    கடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா? அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே எளிமையான மீதி காதல் கதை.



    இரண்டு மூன்று கெட்அப்களில் வரும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். சுவாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். விக்னேஷ்காந்த் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. மாரிமுத்து ஜாதி வெறி பிடித்தவராகவும், வேலராமமூர்த்தி பாதிரியரராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

    கட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதலை புகுத்தி இதை உருவாக்கி இருக்கிறார் சரவண ராஜேந்திரன். படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது. இளையராஜின் புகழை சொல்லும்படியாக பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் நினைவுகளை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.



    எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.

    மொத்தத்தில் `மெஹந்தி சர்க்கஸ்' இனிமை. #MehandiCircus #MehandiCircusReview #SaravanaRajendran #MadhampattyRangaraj #ShwetaTripathi

    சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதல் கலந்து மெஹந்தி சர்க்கஸ் படம் உருவாகி இருப்பதாக இயக்குநர் சரவண ராஜேந்திரன் கூறினார். #MehandiCircus
    ‘குக்கூ,’ ’ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்திற்கு கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். அவருடைய அண்ணன் சரவண ராஜேந்திரன் இந்த படத்தின் திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இந்த நிலையில், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை பற்றி இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது, 



    “ ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஸ்வேதா திரிபாதி. இவர், மும்பை அழகி. மாரிமுத்து, விக்னேஷ்காந்த், வேல.ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார்.

    இது, சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதை. எளிமையான காதல் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “படம் நன்றாக இருக்கிறது” என்று பாராட்டினார். அதன் பிறகுதான் நான் உயிர்த்தெழுந்தேன்.” என்றார். #MehandiCircus

    சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - சுவாதி திரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் `மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் முன்னோட்டம். #MehandiCircus
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `மெஹந்தி சர்கக்ஸ்'.

    மாதம்பட்டி ரங்கராஜ், சுவேதா திரிபாதி நாயகன், நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், கபிர் துஹான் சிங், ரவி மரியா, அங்குர் விகல், சன்னி சார்லஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு - செல்வகுமார்.எஸ்.கே., படத்தொகுப்பு - பிலோமின் ராஜ், கலை - சதீஷ்குமார், பாடல்கள் - யுகபாரதி, ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன் - சுரேன், ஆடை வடிவமைப்பு - பிரவீன்ராஜா.டி, நடனம் - பாபி, சண்டை பயிற்சி - பில்லா ஜெகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஆறுமுகம், நிர்வாகத் தயாரிப்பு - முகேஷ் சர்மா, இணைத் தயாரிப்பு - வி.கே.ஈஸ்வரன் - வினீஷ் வேலாயுதன், தயாரிப்பு - கே.இ.ஞானவேல் ராஜா, கதை, வசனம் - ராஜூ முருகன், இயக்கம் - சலவண ராஜேந்திரன்.



    படம் பற்றி நாயகி சுவேதா திரிபாதி பேசும்போது,

    1990-களில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. கொடைக்கானலுக்கு சர்க்கஸ் குழுவினர் பயணிக்கும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானலைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே காதல் மலர்கிறது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே மெஹந்தி சர்க்கஸ்” என்று கூறினார். 

    படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #MehandiCircus #SaravanaRajendran #MadhampattyRangaraj #ShwetaTripathi

    மெஹந்தி சர்க்கஸ் டிரைலர்:

    இளையராஜா இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள் என்று படவிழாவில் ஷான் ரோல்டன் பேசினார். #MehandiCircus #Ilayaraja
    இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கராஜ், சுவாதி திரிபாதி, விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் விழா நடைபெற்றது.

    இதில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது: ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கு இன்ஸ்பிரே‌ஷன் இளையராஜா சார் தான். குறிப்பாக அவரது இசையில் 80-களில் வெளியான படங்களை தனியாகச் சொல்லலாம். பாடலின் வரிகள், இசைக்கோர்வைகள் அனைத்துமே ஒரு மேஜிக்கலாக இருக்கும். அதே போல் செய்து பார்த்தால் சரியாக வராது.



    அவருடைய இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். பழைய இசை, புதிய இசை என்று பலர் விவாதம் செய்வதாக கேள்விப்பட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை எப்போதுமே நல்லாயிருக்கிற இசை தான் நல்ல இசை. பழைய இசை என்று ஒன்று கிடையாது. இளையராஜா சாருடைய இசையை பழையது என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. கிணற்றில் எப்போதுமே தண்ணீர் வந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இளையராஜாவின் இசையும். இன்னுமொரு 50 ஆண்டுகள் கழித்து அவரது இசையைக் கேட்டால் அதிலிருந்து ஒரு இன்ஸ்பிரே‌ஷன் கிடைக்கும். அவரது இசையை மேலோட்டமாகப் பார்த்தால் சிம்பிளாகத் தெரியும். இசையையே டெக்னாலஜியாக உபயோகித்தவர் இளையராஜா.

    இவ்வாறு அவர் கூறினார். #MehandiCircus #Ilayaraja

    சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெஹந்தி சர்க்கஸ் படத்திற்காக சர்க்கஸ் பயிற்சி பெற்ற சுவேதா திரிபாதி, சர்க்கஸ் கலைஞர்கள் மனவலிமையால் வெற்றி பெறுகின்றனர் என்று கூறினார். #MehandiCircus #ShwetaTripathi
    பாலிவுட் நடிகையான சுவேதா திரிபாதி தனது முதல் தமிழ் படமான மெஹந்தி சர்க்கசுக்காக உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் பயிற்சி பெற்று இருக்கிறார்.

    ராஜு முருகன் கதை, வசனத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் காதல் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் ஒரு சர்க்கஸ் கலைஞராக சுவேதா திரிபாதி நடிக்கிறார். இதுகுறித்து சுவேதா திரிபாதி பேசும்போது, “இது என்னுடைய முதல் தமிழ் படம் என்பதால் நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.

    உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. சர்க்கஸ் கலை என்பது எளிதானது அல்ல என்பதை புத்தகங்கள் மூலமாகவும், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் மூலமாகவும் நான் முன்பே தெரிந்துகொண்டேன். இருந்தாலும், அவர்களுடன் நேரம் செலவிடும்போதுதான் அவர்களின் உழைப்பு பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் எப்படி வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவே முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.



    சர்வதேச சர்க்கஸ் கலைஞர்களிடம் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நம் நாட்டு கலைஞர்களுக்கு இல்லை. அவர்களது மன வலிமையாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர். படத்திற்காக ராஜா சர்க்கஸ் நிறுவனத்திடம் சின்னமனூரிலும், மதுரையிலும் பயிற்சி பெற்றேன். நடப்பது, தலைவணங்குவது போன்றவற்றை பயிற்சி செய்தேன். கத்தியை தூக்கி எறிவது எப்படி என்றும் கற்றுக் கொண்டேன்.

    1990-களில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. கொடைக்கானலுக்கு சர்க்கஸ் குழுவினர் பயணிக்கும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானலைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே காதல் மலர்கிறது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே மெஹந்தி சர்க்கஸ்” என்று தெரிவித்துள்ளார். #MehandiCircus #ShwetaTripathi #SaravanaRajendran #MadhampattyRangaraj

    ×