மீண்டும் இணையும் குமரன்-ஷான் ரோல்டன் கூட்டணி

ஜடா படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் குமரன்.இவர் இயக்கிய பறை மியூசிக் ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
மீண்டும் இணையும் குமரன்-ஷான் ரோல்டன் கூட்டணி
Published on

கதிர் நடிப்பில் வெளியான ஜடா படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் குமரன். 2019ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் இவர் இயக்கிய பறை மியூசில் ஆல்பம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அப்டேட் கொடுத்த ஷான் ரோல்டன்
அப்டேட் கொடுத்த ஷான் ரோல்டன்

இந்நிலையில் ஷான் ரோல்டன் மற்றும் குமரனின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ரசிகர் ஒருவர் பறை ஆல்பம் பாடலுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணிக்காக காத்திருக்கிறோம். அப்டேட் கொடுங்க என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நாங்கள் இருவரும் இணைந்து வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com