என் மலர்

  சினிமா செய்திகள்

  மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. கமல் பங்கேற்பு
  X

  உதயநிதி ஸ்டாலின் -கமல்ஹாசன்

  'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா.. கமல் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
  • இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது.

  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


  மாமன்னன்

  'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராசா கண்ணு' மற்றும் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 1) சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


  மாமன்னன்

  இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ளவுள்ளார். இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


  Next Story
  ×