search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இங்கயே தட்டிக் கேட்கல அப்பறம் எப்படி வெளியில கேட்பீங்க.. மணிகண்டனுக்கு பதிலடி கொடுத்த கமல்..
    X

    பிக்பாஸ் சீசன் 6

    இங்கயே தட்டிக் கேட்கல அப்பறம் எப்படி வெளியில கேட்பீங்க.. மணிகண்டனுக்கு பதிலடி கொடுத்த கமல்..

    • பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 76 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 76 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், அசீம் மாதிரியான ஒரு ஆளை வெளியே சந்தித்து அவர் இவ்வாறு கோபப்பட்டால் நீங்கள் எப்படி நடந்துக் கொள்வீர்கள் என கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் கேட்கிறார். இதற்கு மணிகண்டன் நான் கண்டிப்பாக தட்டிக் கேட்பேன் என்கிறார். இதற்கு வீட்டிற்க்குள்ளேயே கேட்கவில்லை பின்னர் வெளியில் எப்படி கேட்பீர்கள் என்று கமல் பதிலடி கொடுக்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    Next Story
    ×