search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்சல் 6ஏ"

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கின்றன. புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகாது என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

    இந்த நிலையில், கூகுள் பிக்சல் 5ஏ போன்றே பிக்சல் 6ஏ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தோற்றத்தில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் போன்றே காட்சியளிக்கின்றன. 

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனில் இரண்டு கேமரா சென்சார்கள், ஒற்றை எல்.இ.டி. பிளாஷ், பவர் பட்டன், வால்யூம் ராக்கர்கள் உள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 12.2 எம்பி லென்ஸ், 16 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. 

    இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 சீரிஸ் மாடல்களின் பாஸ்ட் சார்ஜிங் வசதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வழங்கி இருக்கிறது.


    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் அதிகளவு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. தற்போது கூகுள், தனது புதிய பிளாக்‌ஷிப் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் சார்ஜர் வழங்கப்படுவதில்லை. எனினும், கூகுள் 30 வாட் பாஸ்ட் சார்ஜரை தனியாக விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து பலரும் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

     கூகுள் பிக்சல் 6

    தற்போது கூகுள் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய பிக்சல் 6 மாடலில் 21 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 23 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது. 

    "பேட்டரி செல், சிஸ்டம் டிசைன், டெம்பரேச்சர், சிஸ்டம் யூசேஜ் மற்றும் ஸ்டேட் ஆப் சார்ஜ் உள்ளிட்ட காரணிகளே சார்ஜிங் ரேட்டை நிர்ணயிக்கிறது. எனினும், போனின் பேட்டரி குறையும் போது 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும்." என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    சீனாவை சேர்ந்த பி.வை.டி. நிறுவனம் இந்திய சந்தையில் முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்தது.


    சீன நாட்டு நிறுவனமான பி.வை.டி. (பில்டு யுவர் டிரீம்ஸ்) நிறுவனம் இந்திய சந்தையில் இ6 எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய பி.வை.டி. இ6 விலை ரூ. 29.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பி.வை.டி. இ6 மாடல் டெல்லி என்.சி.ஆர்., பெங்களூரு, ஐதராபாத், மும்பை, சென்னை, விஜய்வாடா, கொச்சி மற்றும் ஆமதாபாத் நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. எனினும், பி.வை.டி. மாடல் பி2பி பிரிவில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாடகை கார் ஓட்டுவோர் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

     பி.வை.டி. இ6

    பி.வை.டி. இ6 மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 94 பி.ஹெச்.பி. திறன், 180 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரில் 71.6 கிலோவாட் ஹவர் பிளேட் லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 415 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இத்துடன் பி.வை.டி. இ6 மாடலில் உள்ள சிட்டி ஒன்லி ரேன்ஜ் 520 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. கோபால்ட் இல்லாத பேட்டரி என்பதால், இது மற்ற பேட்டரிகளை விட பாதுகாப்பானது ஆகும்.
    அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் 6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை ஃப்ளிப் கேமராவுடன் அறிமுகம் செய்தது.



    அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் 6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.46 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச்-லெஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்டாக் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சென் யு.ஐ. 6 கொண்டிருக்கும் புதிய சென்ஃபோன் 6 மாடலில் ஆண்ட்ராய்டு கியூ மற்றும் ஆண்ட்ராய்டு ஆர் உள்ளிட்டவற்றுக்கான அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சென்ஃபோனில் ஃப்ளிப் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.



    இதில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், குவாட் பேயர் தொழில்நுட்பமும், 13 எம்.பி. 125 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி கேமரா 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். இதனை முன்புற செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்தலாம். இதன் ஃப்ளிப் அம்சம் 90 டிகிரி வரை திரும்பும்.

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் புதிய சென்ஃபோன் 6 மாடலில் பிரத்யேக ஸ்மார்ட் கீ வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் க்விக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பம் மற்றும் 18 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.



    அசுஸ் சென்ஃபோன் 6 சிறப்பம்சங்கள்:

    - 6.46 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நானோ எட்ஜ் IPS LCD 19.5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சென் யு.ஐ. 6
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. ஃப்ளிப் கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, 1/2″ சோனி IMX586, 0.8μm பிக்சல், லேசர் AF, EIS
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 125-டிகிரி அல்ட்கா வைடு லென்ஸ், f/2.4
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - க்விக் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    அசுஸ் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் டுவிலைட் சில்வர் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 499 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.39,132) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 559 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.43,800) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 599 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.46,970) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.



    அசுஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போனின் டம்மி யூனிட் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.

    அதன்படி புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனில் மேனுவல் ஸ்லைடர் வடிவமைப்பு, கிளாஸ் பேக், பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் முன்புறம் ஸ்லைடு செய்யும் போது டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இதில் ஒரு சென்சார் வைடு ஆங்கிள் கேமராவாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்லைடரின் மேல் ஸ்பீக்கர் கிரில் காணப்படுகிறது. இதன் ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் டியூன் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது.



    கேமரா சென்சாரின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்புறம் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது. இதேபோன்ற புகைப்படங்கள் கடந்த மாதமும் வெளியானது. எனினும், இதன் பிளாக் நிற வெர்ஷன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், நோட்டிஃபிகேஷன் எல்.இ.டி. மற்றும் பிரத்யேக ஸ்மார்ட் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படும் என அசுஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.

    அசுஸ் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக நிகழ்வு அந்நிறுவன வலைதளத்தில் நேரலை செய்யப்படும் என அசுஸ் தெரிவித்திருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஐபோன் X ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneX



    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 7 உற்பத்தி நடைபெறுகிறது. இதே ஆலையில், ஏற்கனவே ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்தால் விற்பனை அதிகரிக்கும் என ஆப்பிள் நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபோன் X உற்பத்தி ஜூலை 2019 இல் துவங்கலாம் என தெரிகிறது.

    இந்தியாவில் ஐபோன் X மாடலை தாய்வான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடலை உற்பத்தி செய்ய சென்னை அருகே அமைந்திருக்கும் ஆலையில் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.



    முதற்கட்டமாக ஐபோன் X உற்பத்தி துவங்கியதும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்திய பொது தேர்தலுக்கு பின் உருவாகும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பொருத்தே இவை எந்தளவு சாத்தியப்படும் என்பதை பார்க்க வேண்டும். 

    இதுவரை விஸ்ட்ரண் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 29 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்ததாக இந்திய டெல்லுலார் மற்றும் மின்னணு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம்  5.8 கோடி யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது.
    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. #Xiaomi #Redmi6



    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்காலிக விலை குறைப்பு இன்று (பிப்ரவரி 6) துவங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அமலாகி இருக்கிறது. அந்த வகையில் ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 முதல் ரூ.2000 வரை குறைக்கப்படுகிறது.

    சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பிற்கான அறிவிப்பினை ரெட்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து ரெட்மி இந்தியா தனது ஸ்மார்ட்போன்களுக்கு தற்காலிக விலை குறைப்பினை அறிவித்துள்ளன. சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு எவ்வித சலுகைகளையும் அறிவிக்கவில்லை.  



    ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்Hனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலையும் ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன்று ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் ரூ.500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இறுதியில் ரெட்மி 6 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் கேஷ்பேக் மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 மதிப்புடைய உடனடி தள்ளுபடி மற்றும் 20 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. #Samsung #Smartphones
    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்த சில ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்திருக்கிறது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018), கேலக்ஸி ஏ7 (2018) மற்றும் கேலக்ஸி ஜெ6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    நான்கு கேமரா சென்சார் கொண்ட கேலக்ஸி ஏ9 மற்றும் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் ரூ.23,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான கேலக்ஸி ஏ7 இதுவரை ரூ.5000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.13,990 விலையில் அறிமுகமான கேலக்ஸி ஜெ6 (3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.3500 குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.



    விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

    - சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 8 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.36,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    - சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.33,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    - சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    - சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 4 ஜி.பி. + 64 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.18,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    - சாம்சங் கேலக்ஸி ஜெ6 4 ஜி.பி. + 64 ஜி.பி. மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    - சாம்சங் கேலக்ஸி ஜெ6 3 ஜி.பி. + 32 ஜி.பி. மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.10,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் ல்மார்ட்போன்களை புதிய விலையில் வாங்கிட முடியும்.

    சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்டு 2019 விழா அடுத்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Samsung #Smartphones
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன் விலையை குறைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதைத் தொட்ர்ந்து ரெட்மி ஸ்மார்ட்போன் பழைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #Redmi6 #smartphone



    சியோமி நிறுவனத்தின் Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சியோமி நிறுவனம் தனது ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

    அந்த வகையில் ரெட்மி 6 3ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை குறைக்கப்பட்டு தற்சமயம் அதன் பழைய விலையான ரூ.7999க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.500 உயர்த்தப்பட்டது. இதேபோன்று 64 ஜி.பி. ரெட்மி 6 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    புதிய விலையில் ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் அமலாகியிருக்கிறது. 



    ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. #Redmi6A



    இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.600 வரை அதிகரிக்கப்பட்டு இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.8,499 மற்றும் ரூ.6,592 விலையில் விற்பனை செய்யப்பட்டன. 

    எனினும், ரெட்மி 6 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை மட்டும் மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, தற்சமயம் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது. 



    சமீபத்தில் சியோமியின் துணை பிரான்டு போகோவின் எஃப்1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டது. அந்த வகையில், போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    புதிய விலை குறைப்பை தொடர்ந்து ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி விலை ரூ.5,999 என்றும் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு இன்று (டிசம்பர் 13) மதியம் 12.00 மணி முதல் அமலாகிறது.



    சியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
    - 2 ஜி.பி. ரேம் 
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 6 போன்றே ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனும் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. #Redmi6A #smartphone
    மெய்சூ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. #MEIZU



    மெய்சூ நிறுவனத்தின் எம்6டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    13 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX278 RGBW சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, கைரேகை சென்சார், 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    மெய்சூ எம்6டி சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
    - மாலி T860 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு மற்றும் ஃபிளைம் ஓ.எஸ்.
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OV13855 சென்சார், f/2.2, 1.12um பிக்சல்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செலஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மெய்சூ எம்6டி விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #MEIZU #smartphone
    ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தேதி மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம். #OnePlus6T #ThunderPurple



    ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ விற்பனை தளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மதியம் 02.00 மணிக்கு விற்பனை துவங்குகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் ஒன்பிளஸ் விற்பனையகங்களில் சிறப்பு விற்பனை காலை 11.00 மணிக்கே துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    8 ஜி.பி. ரேம்,128 ஜி.பி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் எடிஷன் விலை ரூ.41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் 6டி மாடலின் பின்புறம் ஃபிராஸ்டெட் கிளாஸ் மற்றும் S வடிவ வளைவு இடம்பெற்றுள்ளது.



    ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

    – 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    – 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
    – அட்ரினோ 630 GPU
    – 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    – 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    – ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
    – 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
    – 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா
    – இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    – வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
    – யு.எஸ்.பி. டைப்-சி
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    – 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சலுகைகள்:

    – தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.1,500 கேஷ்பேக்

    – அமேசான் மற்றும் ஒன்பிள் பிரத்யேக ஆஃப்லைன் விற்பனையகங்களில் மூன்று மாதங்கள் வட்டியில்லா மாத தவணை முறை வசதி

    – கோடாக் செர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான இலவச இன்சூரன்ஸ்

    – ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.299 சலுகையை தேர்வு செய்யும் போது ரூ.5,400 வரை உடனடி கேஷ்பேக், ரூ.150 மதிப்புள்ள 36 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது.
    ×