என் மலர்

  தொழில்நுட்பம்

  இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் விலை குறைப்பு
  X

  இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. #Redmi6A  இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.600 வரை அதிகரிக்கப்பட்டு இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.8,499 மற்றும் ரூ.6,592 விலையில் விற்பனை செய்யப்பட்டன. 

  எனினும், ரெட்மி 6 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை மட்டும் மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, தற்சமயம் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.   சமீபத்தில் சியோமியின் துணை பிரான்டு போகோவின் எஃப்1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டது. அந்த வகையில், போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

  புதிய விலை குறைப்பை தொடர்ந்து ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி விலை ரூ.5,999 என்றும் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு இன்று (டிசம்பர் 13) மதியம் 12.00 மணி முதல் அமலாகிறது.  சியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

  - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
  - 2 ஜி.பி. ரேம் 
  - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9
  - டூயல் சிம் ஸ்லாட்
  - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
  - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
  - இன்ஃப்ராரெட் சென்சார்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  சியோமி ரெட்மி 6 போன்றே ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனும் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. #Redmi6A #smartphone
  Next Story
  ×