search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meizu"

    மெய்சு நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. #meizuzero #smartphone



    மெய்சு நிறுவனம் சீரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி இருக்கும் மெய்சு சீரோ முற்றிலும் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கிறது. அந்த வதையில் புதிய சீரோ ஸ்மார்ட்போனில் எவ்வித போர்ட்களும் இடம்பெறவில்லை. இதனால் ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் நீக்கப்பட்டு 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய சீரோ ஸ்மார்ட்போனில் ஆடியோ பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ப்ளூடூத் பயன்படுத்த வேண்டும். வாட்டர்ப்ரூஃப் வடிவமைப்பு கொண்டிருக்கும் சீரோ ஸ்மார்ட்போன் IP68 தரச்சான்று பெற்றிருக்கிறது. 

    இந்த ஸ்மார்ட்போனில் எம்சவுண்ட் 2.0 (mSound 2.0) தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதால், போனின் ஸ்கிரீன் ஸ்பீக்கர் மற்றும் இயர்பீஸ் போன்று இயங்குகிறது. முந்தைய தொழில்நுட்பங்களை விட மேம்பட்ட ஒலியெழுப்பும் வகையில் மெய்சு சீரோ ஸ்மார்ட்போனின் உள்புறம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக மெய்சு தெரிவித்துள்ளது.

    ஹெச்.டி.சி. எட்ஜ் சென்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்ததை போன்ற பிரெஷர் சென்சிட்டிவ் முறையில் இயங்கும்படி பவர் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இசிம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதால் புதிய மெய்சு சீரோ ஸ்மார்ட்போனில் சிம் ஸ்லாட் இடம்பெறவில்லை.



    மெய்சு சீரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1080x2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - ஆண்ட்ராய்டு சார்ந்த ஃபிளைம் 7
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.3″ சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, OIS, PDAF,
    - 20 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், f/2.6, 6-எல்.இ.டி. ரிங் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 18வாட் வயர்லெஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    மெய்சு சீரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இசிம் தொழில்நுட்பத்திற்கான அனுமதி பெற வேண்டும் என்பதால் புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
    மெய்சூ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. #MEIZU



    மெய்சூ நிறுவனத்தின் எம்6டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    13 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX278 RGBW சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, கைரேகை சென்சார், 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    மெய்சூ எம்6டி சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
    - மாலி T860 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு மற்றும் ஃபிளைம் ஓ.எஸ்.
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OV13855 சென்சார், f/2.2, 1.12um பிக்சல்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செலஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மெய்சூ எம்6டி விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #MEIZU #smartphone
    மெய்சூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஃபிளாக்ஷிப் மாடலான 16த் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #meizu16th


     
    மெய்சூ ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. மெய்சூ 16த் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 91.18% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. 

    மெய்சூ 16த் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 99.12% துல்லியமாக இயங்கும் என்பதால், ஸ்மார்ட்போன் 0.25 நொடிகளில் அன்லாக் ஆகிவிடும்.



    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, 20 எம்.பி. இரண்டாவது டெலிஃபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    3D கிளாஸ் பேக் மற்றும் செராமிக் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கும் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 24வாட் எம் சார்ஜ் ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் 0-67% வரை சார்ஜ் ஆக வெறும் 30 நிமிடங்களே ஆகும்.



    மெய்சூ 16த் சிறப்பம்சங்கள்

    - 6-இன்ச் 1080x2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி (UFS 2.1)
    - டூயல் சிம்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபிளைம் ஓ.எஸ். (Flyme OS)
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, PDAF
    - 20 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், f/2.6
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - எம் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புது மெய்சூ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. #meizu16th #smartphone
    மெய்சு நிறுவனத்தின் எம்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    மெய்சு நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த எம்5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    5.2இன்ச் ஹெச்டி 2.5D வளைந்தி கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 64-பிட் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம்ஓஎஸ் 6 (FlymeOS 6) இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பாலிகார்போனேட் பாடி, மெட்டல் ஃபிரேம் மற்றும் மெட்டாலிக் கோடுகளை கொண்டிருக்கும் எம்6 ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனினை 0.2 நொடிகளில் அன்லாக் செய்யக்கூடிய கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ சப்போர்ட் மற்றும் 3070 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    மெய்சு எம்6 சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
    - மாலி T860 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம் ஓஎஸ் 6.0
    - 13 எம்பி பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், PDAF, f/2.2
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3070 எம்ஏஹெச் பேட்டரி

    மெய்சு எம்6 ஸ்மார்ட்போன் பிளாக், சில்வர், புளு மற்றும் கேல்டு என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மெய்சு எம்6 இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.7,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×