என் மலர்

  நீங்கள் தேடியது "Zenfone 6"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் 6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை ஃப்ளிப் கேமராவுடன் அறிமுகம் செய்தது.  அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் 6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.46 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச்-லெஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

  ஸ்டாக் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சென் யு.ஐ. 6 கொண்டிருக்கும் புதிய சென்ஃபோன் 6 மாடலில் ஆண்ட்ராய்டு கியூ மற்றும் ஆண்ட்ராய்டு ஆர் உள்ளிட்டவற்றுக்கான அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சென்ஃபோனில் ஃப்ளிப் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.  இதில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், குவாட் பேயர் தொழில்நுட்பமும், 13 எம்.பி. 125 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி கேமரா 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். இதனை முன்புற செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்தலாம். இதன் ஃப்ளிப் அம்சம் 90 டிகிரி வரை திரும்பும்.

  பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் புதிய சென்ஃபோன் 6 மாடலில் பிரத்யேக ஸ்மார்ட் கீ வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் க்விக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பம் மற்றும் 18 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.  அசுஸ் சென்ஃபோன் 6 சிறப்பம்சங்கள்:

  - 6.46 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நானோ எட்ஜ் IPS LCD 19.5:9 டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
  - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
  - அட்ரினோ 640 GPU
  - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
  - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சென் யு.ஐ. 6
  - டூயல் சிம்
  - 48 எம்.பி. ஃப்ளிப் கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, 1/2″ சோனி IMX586, 0.8μm பிக்சல், லேசர் AF, EIS
  - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 125-டிகிரி அல்ட்கா வைடு லென்ஸ், f/2.4
  - கைரேகை சென்சார்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - க்விக் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

  அசுஸ் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் டுவிலைட் சில்வர் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 499 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.39,132) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 559 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.43,800) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 599 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.46,970) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×