என் மலர்

  நீங்கள் தேடியது "iPhone 6s"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஐபோன் X ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneX  ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 7 உற்பத்தி நடைபெறுகிறது. இதே ஆலையில், ஏற்கனவே ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்தால் விற்பனை அதிகரிக்கும் என ஆப்பிள் நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபோன் X உற்பத்தி ஜூலை 2019 இல் துவங்கலாம் என தெரிகிறது.

  இந்தியாவில் ஐபோன் X மாடலை தாய்வான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடலை உற்பத்தி செய்ய சென்னை அருகே அமைந்திருக்கும் ஆலையில் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.  முதற்கட்டமாக ஐபோன் X உற்பத்தி துவங்கியதும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்திய பொது தேர்தலுக்கு பின் உருவாகும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பொருத்தே இவை எந்தளவு சாத்தியப்படும் என்பதை பார்க்க வேண்டும். 

  இதுவரை விஸ்ட்ரண் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 29 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்ததாக இந்திய டெல்லுலார் மற்றும் மின்னணு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம்  5.8 கோடி யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது.
  ×