என் மலர்

  தொழில்நுட்பம்

  ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
  X

  ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தேதி மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம். #OnePlus6T #ThunderPurple  ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ விற்பனை தளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

  இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மதியம் 02.00 மணிக்கு விற்பனை துவங்குகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் ஒன்பிளஸ் விற்பனையகங்களில் சிறப்பு விற்பனை காலை 11.00 மணிக்கே துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  8 ஜி.பி. ரேம்,128 ஜி.பி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் எடிஷன் விலை ரூ.41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் 6டி மாடலின் பின்புறம் ஃபிராஸ்டெட் கிளாஸ் மற்றும் S வடிவ வளைவு இடம்பெற்றுள்ளது.  ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

  – 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
  – கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
  – 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
  – அட்ரினோ 630 GPU
  – 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
  – 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
  – ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0
  – டூயல் சிம் ஸ்லாட்
  – 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
  – 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
  – 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா
  – இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  – வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
  – யு.எஸ்.பி. டைப்-சி
  – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  – 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  சலுகைகள்:

  – தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.1,500 கேஷ்பேக்

  – அமேசான் மற்றும் ஒன்பிள் பிரத்யேக ஆஃப்லைன் விற்பனையகங்களில் மூன்று மாதங்கள் வட்டியில்லா மாத தவணை முறை வசதி

  – கோடாக் செர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான இலவச இன்சூரன்ஸ்

  – ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.299 சலுகையை தேர்வு செய்யும் போது ரூ.5,400 வரை உடனடி கேஷ்பேக், ரூ.150 மதிப்புள்ள 36 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது.
  Next Story
  ×