search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள் பிக்சல் 6
    X
    கூகுள் பிக்சல் 6

    இணையத்தில் லீக் ஆன பிக்சல் 6ஏ விவரங்கள்

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கின்றன. புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகாது என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

    இந்த நிலையில், கூகுள் பிக்சல் 5ஏ போன்றே பிக்சல் 6ஏ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தோற்றத்தில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் போன்றே காட்சியளிக்கின்றன. 

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனில் இரண்டு கேமரா சென்சார்கள், ஒற்றை எல்.இ.டி. பிளாஷ், பவர் பட்டன், வால்யூம் ராக்கர்கள் உள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 12.2 எம்பி லென்ஸ், 16 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. 

    இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×