என் மலர்

  சினிமா

  என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்
  X

  என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா, சாய் பல்லவியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. #NGK #Suriya
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதில் சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றுள்ளனர். 

  இந்த நிலையில், படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா மற்றும் சாய் பல்லவியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சூர்யா கரைவேட்டி, சட்டையுடன் அரசியல்வாதி போல தோற்றமளிக்கிறார். அதேபோல் சாய் பல்லவி சாதாரண காட்டன் சேலையுடன் இருக்கும்படியான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. 

  இந்த படத்தில் சூர்யாவின் மனைவி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.   இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

  இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் மற்றும் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். #NGK #Suriya 

  Next Story
  ×