என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வசூலில் புதிய சாதனை படைத்த மோகன்லால் - விஷாலின் `வில்லன்'
Byமாலை மலர்1 Nov 2017 2:52 PM GMT (Updated: 1 Nov 2017 2:53 PM GMT)
உன்னிகிருஷ்ணன் நடிப்பில் மோகன் லால் - விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வில்லன்' படம் வசூலில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
`பாகுபலி-2' மற்றும் `புலிமுருகன்' திரைப்படத்துக்கு பிறகு மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வில்லன்' திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மோகன் மற்றும் விஷால் நடிப்பில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `வில்லன்'. இந்த படத்தில் மோகன் லால் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். விஷால் டாக்டராக நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்த படம் தான் மலையாளத்தில் விஷால் மற்றும் ஹன்சிகா அறிமுகமாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன் லால் நடிப்பில் வெளியாகிய படங்களிலேயே அதிக வசூல் செய்திருக்கும் படம் என்ற சிறப்பையும் `வில்லன்' திரைப்படம் பெற்றிருக்கிறது. இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி `த்ரிஷ்யம்' படத்துக்கு பின்னர் மோகன் லாலின் நடிப்பை அனைவரும் ரசித்து பாராட்டிய திரைப்படமும் இது தான் என்று கூறப்படுகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், ஹன்சிகா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Next Story
×