என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அடுத்த கட்டத்தில் விஷாலின் `சண்டக்கோழி-2'
Byமாலை மலர்1 Nov 2017 1:51 PM GMT (Updated: 1 Nov 2017 1:51 PM GMT)
`துப்பறிவாளன்' படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் `இரும்புத்திரை', `சண்டக்கோழி-2' படக்குழுவில் இருந்து சிறப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் `துப்பறிவாளன்' படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து விஷால் தற்போது மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் `சண்டகோழி-2' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. தற்போது `இரும்புத்திரை' படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பெய்து வரும் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் மவுண்ட் ரோட் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதில் `இரும்புதிரை' படம் வருகிற பொங்கலுக்கு (2018) ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை இடைவேளையின்றி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இந்த படத்தில் சமந்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விஷால் இப்படத்தை தயாரிக்கிறார்.

Next Story
×