search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பெண் தோழியை தேடுவதாக நடிகர் ஆர்யா டுவிட்டரில் அறிவிப்பு
    X

    பெண் தோழியை தேடுவதாக நடிகர் ஆர்யா டுவிட்டரில் அறிவிப்பு

    தான் ஒரு பெண் தோழியை தேடுவதாக நடிகர் ஆர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. ஆனால் அவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது வெளியான ‘கடம்பன்’ படமும் தோல்வியை தழுவியது.

    தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

    ஆர்யாவுக்கு நடிகைகள் பலர் தோழியாக உள்ளனர். தமிழ் சினிமாவின் ரோமியோவாகவும் வலம் வருகிறார். ஆனால் அவர் இது வரை எந்த நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்படவில்லை.

    பிரியாணி செய்து கொடுத்தே ஆர்யா நடிகைகளை வளைத்து விடுவார் என்று அவரை சக நடிகர்கள் கிண்டல் அடிப்பதுண்டு.



    இந்த நிலையில் நடிகர் ஆர்யா பெண் தோழியை தேடத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ‘உடனடியாக தனக்கு ஒரு கேள் பிரண்ட் வேண்டும்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

    ஆர்யாவின் வீடியோ அறிவிப்பை நடிகை வரலட்சுமி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஆர்யா கூறி இருப்பதாவது:-

    “நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஆர்யா. நான் இப்போது முக்கியமான பிரச்சினையில் இருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, எனக்கு உதவுங்கள். உடனடியாக எனக்கு கேர்ள் பிரண்ட் தேவை. பிளீஸ்...”

    இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.



    வரலட்சுமி தயாரிப்பில் உருவாக இருக்கும் நடன நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக ஆர்யா இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறார். ஆர்யாவை தொடர்ந்து பிரசன்னாவும் இதுபோன்ற ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

    இந்த வீடியோ பதிவை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ‘காபியில் போடாத சுகரும், ஆர்யாவுக்கு மசியாத பிகரும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை’ என்று கூறியுள்ளனர்.
    Next Story
    ×