என் மலர்
சென்னையில் நடந்த ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மீண்டும் கலந்து கொண்டார். அவர் நடித்த சண்டை காட்சிகள் படமானது.
ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் ‘காலா’. ‘கபாலி’க்கு பிறகு இந்த படத்திலும் அவர் தாதாவாக நடிக்கிறார். திருநெல்வேலியில் இருந்து பிழைப்பு தேடி மும்பை செல்லும் அவர் ரவுடிகள் தொல்லையில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாக்க தாதாவாக மாறுவது போல் திரைக்கதை அமைத்துள்ளனர்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. ரஜினிகாந்த் தாராவி பகுதியில் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வீதிவீதியாக சென்று மக்கள் குறைகள் கேட்பது போன்றும், ரவுடிகளை அடித்து விரட்டுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பை காண ரசிகர்கள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அதன்பிறகு ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக அமெரிக்கா சென்று 2 வாரங்கள் தங்கினார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ரஜினிகாந்த் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அவர் சென்னை திரும்பி மீண்டும் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயாரானார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்துள்ளனர். அங்கு காலா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடித்தார். நேற்றும், நேற்று முன்தினமும் ரஜினிகாந்த் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. வில்லன்களுடன் அவர் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சிகளும் படமானது.
இதில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்களும் கலந்துகொண்டு நடித்தார்கள். இங்கு ஒரு மாதம் வரை படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகளும் இதே அரங்கில் படமாக்கப்படுகிறது.
இந்த வருடம் இறுதியில் ‘காலா’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். கதாநாயகியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டீல், சுகன்யா, ஈஸ்வரிராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பா.ரஞ்சித் இயக்குகிறார்.

கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்து இருக்கிறார். “கலாசார பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்” என்று அவர் கருத்து வெளியிட்டு உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், ஓவியா, ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்றும், இதனை தடைசெய்து கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, திராவிட விடுதலைக்கழகம் ஆகிய அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளன.
இதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன் “என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது” என்றார். “சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டம் என்னை பாதுகாக்கும்” என்றும் கூறினார்.
இந்த பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் 100 நாட்கள் வீட்டுக் காவலில்தான் உள்ளனர். அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்.? முதலில் கலாசார பயங்கரவாதிகளிடம் இருந்துதான் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். இந்து மதம் உங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல. வேலி போட்டு பாதுகாக்க”.
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.
கஸ்தூரி கருத்துக்கு டுவிட்டரில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. “இல்லன்னா மட்டும் சினிமாவில் அரைகுறை உடையுடன் ஆடும் நடிகைகள் காப்பாத்திடுவாங்களாக்கும். நடிச்சமா நாலு காசு பாத்தமான்னு போமா” என்று ஒருவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்தார்.
இதற்கு பதில் அளித்த கஸ்தூரி “அதான் நீங்களெல்லாம் இருக்கீங்களே, நாங்க கெடுக்கிற கலாசாரத்தை கேவலமா ‘கமெண்ட்’ போட்டே தூக்கி நிறுத்திட மாட்டீங்களா?” என்றார்.
இன்னொருவர் “சேரி பிஹேவியர்” என்று சொன்ன காயத்ரி ரகுராம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று குறிப்பிட்டார். “காயத்ரி பேச்சை நானும் விரும்பவில்லை. இதற்கு கமல்ஹாசன் ஏன் பதில் அளிக்க வேண்டும்” என்று கஸ்தூரி கேட்டு இருக்கிறார்.

எந்த குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்றும் நடிகை பாவனா பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப், கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியார், நடிகை பாவனா ஆகிய மூவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான், பாவனாவை மானபங்கப்படுத்த திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், நடிகை பாவனா, தன்னுடைய சகோதரர் ஜெயதேவ் பாலசந்திராவின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அன்பான நண்பர்களே..
இந்த அறிக்கையை இப்படி வெளியிடுவதற்கு காரணம் இருக்கிறது.
எனது எண்ணங்களை டி.வி. சேனல் மூலமோ, நிருபர்களின் பேட்டி மூலமோ எடுத்துக் கூறும் மனநிலையில் நான் இல்லை. எனவேதான் இப்படி அறிக்கை வெளியிடுகிறேன்.

கடந்த பிப்ரவரி 17-ந் தேதி முதல், மறக்க முடியாத மற்றும் மிகவும் துரதிருஷ்டவசமான கஷ்டத்தை கடந்து வந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் நேர்மையான முறையில் இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்தேன். அந்த வழக்கு விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வழக்கில் சமீபத்தில் நடந்த சில கைது நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மற்றவர்களை போல எனக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளன. எந்த சூழ்நிலையிலும், யாரையும் நான் சந்தேகப்படும் நபர் என்று சுட்டிக்காட்டவில்லை.
அதே போல் யார் மீதும் எனக்கு எந்த தனிப்பட்ட பகையும் கிடையாது. யார் பெயரையும் நான் வெளிப்படுத்தவில்லை. இதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளேன்.
கடந்த காலங்களில் அந்த நடிகருடன் (திலீப்) பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் எங்களிடையே தனிப்பட்ட முறையில் சில பிரச்சினைகள் உருவாகின. எனவே, நட்பு உறவில் இருந்து பிரிந்துவிட்டோம்.
அந்த நடிகர் கைது குறித்த தகவல்களை, மீடியா மூலமும், நண்பர்கள் வட்டாரங்கள் மூலமும் திரட்டியபோது அவர் தவறு செய்திருக்கிறார் என்பதற்கான போதிய ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர் என்பது எங்களுக்கு தெரிய வந்தது.
தான் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நடிகர் கூறுகிறார். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அவரது குற்றமற்ற தன்மைக்கான தகவல்கள் வெளிவரட்டும். அப்படி இல்லாவிடில், அவரது தவறான செயல்களின் தகவல்கள் வெளியே வரட்டும்.

சட்டத்தின் கண்கள் முன்பு அனைவரும் சமம்தான். குற்றம் இழைக்காத ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது. அதுபோல், எந்த ஒரு குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது. நான் அந்த நடிகருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாகவும், பிற முதலீடுகள் செய்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது
அது தவறான தகவல். எங்களிடையே அதுபோன்ற தொடர்புகள் இல்லை. முதலில் இந்த தகவல் வெளியானபோது, சிறிதளவு கூட உண்மை இல்லாத அந்த தகவல் விரைவில் மறைந்து விடும் என்றே நினைத்தேன். ஆனால், வர்த்தக தொடர்புகள் குறித்த தகவல் மீண்டும், மீண்டும் ஊடகங்களில் வெளிவருவதால், இந்த விளக்கத்தை கொடுக்க விரும்பினேன்.
தேவைப்பட்டால், விசாரணை அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளேன். அதேபோல், இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு, போலீசாருக்கு நான் நன்றி தெரிவிப்பது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோ போலியானது என்பதை கூற இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன். இதுபோன்ற செயல்கள் மக்கள் மற்றும் மீடியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.
அனைவரும் இந்த நாட்டின் சட்டத்தின் கீழ்தான் இருக்கிறோம். குற்றம் இழைக்காத ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது, எந்த ஒரு குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்று நான் மீண்டும் கூறுகிறேன்.
உங்களின் அளவிடமுடியாத அன்பு மற்றும் ஆதரவுக்கு ஏராளமான பிரார்த்தனைகளுடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு நடிகை பாவனா கூறியுள்ளார்.

கேளிக்கை வரி பிரச்சினையில் நல்ல தீர்வு ஏற்படும் என்று அரசு குழுவினரை சந்தித்த பின்னர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சினிமா டிக்கெட்களுக்கு மத்திய அரசு 28 சதவிதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. தமிழக அரசும் 30 சதவிதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இந்த இரட்டை வரிவிதிப்பை ஏற்க முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேளிக்கை வரியை ரத்து செய்ய வற்புறுத்தி தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு தரப்பிலும் திரையுலகினர் தரப்பிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து தியேட்டர்களை மூடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திரையுலகினர் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால், அபிராமி ராமநாதன், ஆர்.கே.செல்வமணி, திருப்பூர் சுப்ரமணியம், அருள்பதி, கதிரேசன், எஸ்.ஆர்.பிரபு, கல்யாண், எல்.சுரேஷ் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினரை சந்தித்து பேசினார்கள். இதில் அனைத்து அரசு துறை செயலாளர்களும் கலந்துகொண்டனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று திரையுலகினர் சார்பில் வற்புறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-
சினிமாத்துறை இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. சினிமா மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இது பெரிய சுமை. எனவே கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகளிடம் வற்புறுத்தினோம்.
எங்கள் கோரிக்கையை அரசு ஏற்று சினிமா வளர்ச்சிக்கு ஆவன செய்யும் என்று நம்புகிறோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்தகட்டமாக 24-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது நல்ல தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு விஷால் கூறினார்.
ஆர்.கே.செல்வமணி கூறுகையில், “கேளிக்கை வரி தியேட்டர் கட்டணம், திரையரங்குகளை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்”, என்றார்.

ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - கயல் ஆனந்தி - சரவணன் நடிப்பில் வெளியாகியிருக்கும் `பண்டிகை' படத்தின் விமர்சனம்.
சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த கிருஷ்ணாவை, அவரது உறவினர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார். தொடக்கத்தில் அங்கு அடிதடியில் ஈடுபடும் கிருஷ்ணா, பெரியவனாக ஆன பின்னர் அடிதடிகளை விட்டுவிட்டு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணாவின் நண்பரான பிளாக் பாண்டியும் அதே ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கயல் ஆனந்தியை பார்க்கும் கிருஷ்ணாவுக்கு அவள் மீது காதல் வருகிறது. அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணா ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுஒருபுறம் இருக்க வீடியோ கேம்ஸ் கடை வைத்திருக்கும் சரவணன் சூதாட்டத்தில் அதீத ஈடுபாடுடன் இருக்கிறார். அந்த ஈடுபாட்டின் காரணமாக மதுசூதனன் நடத்தும் கிரிக்கெட் சூதாட்ட குழுவில் இணைந்து சூதாடி வருகிறார். மேலும் சூதாட்டத்தின் மூலம் தனது வீடு மற்றும் சொத்து அனைத்தையும் இழந்து விடுகிறார். இதனால் அவரது மனைவியும், அவரை விட்டுச் செல்கிறார். இதையடுத்து விட்டதை பிடிக்க சரவணன் தொடர்ந்து முயற்சி செய்து வரும் வேளையில், கிருஷ்ணாவை சந்திக்கிறார். அதுவும் கிருஷ்ணா ஒருவரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்யும் போது அவரை சந்திக்கிறார்.

இதையடுத்து கிருஷ்ணாவிடம் இங்கு செய்யும் சண்டையை தன்னுடன் வந்து ஒரு இடத்தில் சண்டை செய்தால் இருவருக்கும் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். முதலில் சரவணனின் அழைப்பை ஏற்காத கிருஷ்ணா, தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் தேவைப்படுவதால், அந்த சண்டையில் பங்கேற்க ஒத்துக் கொள்கிறார்.
சூதாட்டத்தில் ஈடுபடுவோர், அதில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காக மதுசூதனன் தெரு சண்டை (STREET FIGHT) ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சண்டை போடுபவர்களை வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்த சண்டை நடத்தப்படுகிறது.

முதலில் பங்கேற்ற சிறிய சிறிய சண்டைகளில் கிருஷ்ணா வெற்றி பெற்றதை அடுத்து, பெரிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் கிருஷ்ணா தோல்வியடைவார் என்று பெட் கட்டுகின்றனர். ஆனால் அந்த போட்டியிலும் கிருஷ்ணா வெற்றி பெற்றதால், அருள்தாஸிடம் கடன் வாங்கும், சரவணன் தான் கட்டிய பணத்தை இழந்து விட, தனக்கு தரவேண்டிய பணம் வரவில்லையென்றால் சரவணணை கொன்றுவிடுவதாக அருள்தாஸ் மிரட்டுகிறார்.
இந்நிலையில், மதுசூதனனிடம் வேலை பார்க்கும் நிதின் சத்யா, சூதாட்டம் என்ற பெயரில், மதுசூதனன் அனைவரையும் ஏமாற்றி வருவதாகக் கூறுகிறார். சரவணனன் சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழக்கவில்லை என்றும், ஏமாற்றப்பட்டார் என்பதையும் சொன்னவுடன், சரவணன் தான் இழந்த பணத்தை அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று நினைக்கிறார். இதையடுத்து நிதின் சத்யா பணம் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்று கூற, அந்த பணத்தை எடுப்பதற்கு தான் திட்டம் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.

முதலில் இந்த திட்டத்திற்கு சரவணன் ஒப்புதல் தெரிவித்தாலும், கிருஷ்ணா மறுப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து அவர்களது நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு துணைபோகிறார். பின்பு திட்டமிட்டபடி மதுசூதனனிடம் இருந்து பணத்தை திருடினார்களா? மதுசூதனன் இவர்களை என்ன செய்தார்? மதுசூதனனடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? கிருஷ்ணா, ஆனந்தியின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கிருஷ்ணா, இப்படத்தின் மூலமும் அதனை நிரூபித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை வராத தெரு சண்டையை மையமாக வைத்து இப்படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கிருஷ்ணா அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு இளைஞனாக சண்டையில் தனது கோபத்தை காட்டுவதிலும், கயல் ஆனந்தியிடம் தனது காதலை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கயல் ஆனந்தி மற்ற படங்களைப் போல இந்த படத்திலும் தனது நடிப்பின் மூலம் வரவேற்பை பெற்றிருக்கிறார். திரையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சரவணன் படம் முழுக்க வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கே அச்சாணியாக விளங்குகிறது. சூதாட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் போதும், அதில் தனது சொத்துக்களை இழந்து பின்னர், அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் சரவணின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறார். ஒரு சூதாட்டக்காரராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது.
வஞ்சகம், வேஷம் என சூதாட்டத் தளபதியாக மதுசூதனின் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது கதாபாத்திரம் குறித்து பேசவைக்கும் அருள்தாஸ், இந்த படத்திலும் அனைவரையும் கவரும்படி நடித்திருக்கிறார். காமெடியில் பிளாக் பாண்டி படம் முழுக்க வந்தாலும், அவரது காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. குறைவான காட்சியில் வந்தாலும், கருணாஸ் அனைவரையும் எதிர்பாராத சிரிப்புக்கு ஆளாக்குகிறார். நிதின் சத்யா, அர்ஜய், சண்முகராஜன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத ஸ்ட்ரீட் சண்டையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஃபெரோஸ். குறிப்பாக இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும்படியாக படத்தை இயக்கி இருப்பது படத்திற்கு பலம். சூதாட்டம், சண்டை, காதல் என அனைத்தையும் ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். அதற்கேற்றாற் போல், திரைக்கதையை அமைத்திருப்பது படத்தை ரசித்து பார்க்கும் படி இருக்கிறது.
ஆர்.எச்.விக்ரமின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. அர்வியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சியில் விளையாடியிருக்கிறார்.
மொத்தத்தில் `பண்டிகை' கொண்டாட்டம்.

பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார்.
சென்னை:

தமிழ் மொழிப்பற்றாளரான வீரசந்தானம் சிறந்த ஓவியராக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, வழக்கமான பணிகளை மேற்கொண்டார். ஆனால் நேற்று மாலை திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகம் இவரது ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஓவியங்கள் மட்டுமல்லாது பீட்சா, கத்தி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பையும் வீரசந்தானம் வெளிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 முதல் 2013 ஆண்டு வரை தமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியாகிய நெடுந்தொடர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
2009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:-
2009-ம் ஆண்டு:
1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - திருமதி செல்வம்
2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - வசந்தம்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - டெல்லி கணேஷ்
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - பீலிசிவம்
5. சிறந்த கதாநாயகன் - ஜி.ஸ்ரீகுமார் (உறவுகள் & சிவசக்தி)
6. சிறந்த கதாநாயகி - சங்கீதா (திருப்பாவை)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - சிவன் சீனிவாசன் (திருப்பாவை)
8. சிறந்த குணச்சித்திர (நடிகை) - வடிவுக்கரசி (திருமதி செல்வம்)
9. சிறந்த வில்லன் நடிகர் - ஷிரவன் (தங்கமான புருஷன்)
10. சிறந்த வில்லி நடிகை - கௌதமி (திருமதி செல்வம்)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஹரிணி (திருமதி செல்வம்)
12. சிறந்த இயக்குநர் - இ.விக்ரமாதித்தன் (மேகலா)
13. சிறந்த கதையாசிரியர் - பி.ஆர்.பாலசுப்பிரமணியன் (கோலங்கள்)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - வேதம் புதிது கண்ணன் (வசயதம்)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - செல்வராஜ் (வசயதம்)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - பொன்சந்திரா (தங்கமான புருஷன்)
17. சிறந்த படத்தொகுப்பாளர் - கே.உதயகுமார் (திருப்பாவை)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - இளங்கோ (மேகலா)
19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) வினோத் (சிவசக்தி)
20. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) ஜெயகீதா (கோலங்கள்)
2010-ம் ஆண்டு:
1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - உறவுக்கு கைகொடுப்போம்
2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - தென்றல்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - சுபலேகா சுதாகர்
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - பூவிலங்கு மோகன்
5. சிறந்த கதாநாயகன் - தீபக் (தென்றல்)
6. சிறந்த கதாநாயகி - ஸ்ருதி (தென்றல்)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - ஜெயமணி (திருமதி செல்வம்)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - சீமா (தங்கம்)
9. சிறந்த வில்லன் நடிகர் - நிழல்கள் ரவி (தென்றல்)
10. சிறந்த வில்லி நடிகை - எம்.தேவிபிரியா (செல்லமே)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி யுவினா பார்கவி (உறவுக்கு கை கொடுப்போம்)
12. சிறந்த இயக்குநர் - எஸ். குமரன் (திருமதி செல்வம்)
13. சிறந்த கதையாசிரியர் - சேக்கிழார் (உறவுக்கு கைகொடுப்போம்)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - அசோக் குமார் (தங்கம்)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - நடராஜன் (முயதானை முடிச்சு)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - மாட்ஸ் (திருமதி செல்வம்)
17. சிறந்த படத்தொகுப்பாளர் - சந்துரு (தென்றல்)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - தீனா (செல்லமே)
19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - டி.என்.பாலு கதிரவன் (தங்கம்)
20. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - ரேணுகா (அபிராமி)
2011-ம் ஆண்டு:
1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - சாந்தி நிலையம்
2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - நாதஸ்வரம்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - நித்யா ரவீயதர்
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - சண்முக சுயதரம்
5. சிறந்த கதாநாயகன் - எஸ்.வீ.சீனு (மாதவி)
6. சிறந்த கதாநாயகி - சந்தோஷி (இளவரசி)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - சந்தானம் (திருமதி செல்வம்)
8. சிறந்த குணச்சித்திர (நடிகை) - ரேவதி சங்கர் (உறவுகள்)
9. சிறந்த வில்லன் நடிகர் - ஆர். ராமச்சயதிரன் (சாயதி நிலையம்,திருமதி செல்வம்)
10. சிறந்த வில்லி நடிகை - ஸ்ரீவித்யா (தென்றல்)
11. சிறந்த இயக்குநர் - கே.பாலசந்தர் (சாந்தி நிலையம்)
12. சிறந்த கதையாசிரியர் - கே.பாலசயதர் (சாந்தி நிலையம்)
13. சிறந்த திரைக்கதையாசிரியர் - எஸ்.வெங்கட்ராமன் (சாந்தி நிலையம்)
14. சிறந்த உரையாடல் ஆசிரியர் - எழில்வரதன் (தென்றல்)
15. சிறந்த ஒளிப்பதிவாளர் - ரகுநாத ரெட்டி (சாந்தி நிலையம்)
16. சிறந்த படத்தொகுப்பாளர் - காரல் மார்க்ஸ் (கொடி முல்லை)
17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யா (சாந்தி நிலையம்)
18. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) கார்த்திக் (திருமதி செல்வம்)
19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) ஹரிணி – குழந்தை குரல் (உறவுக்கு கை கொடுப்போம்)
2012-ம் ஆண்டு:
1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - இரு மலர்கள்
2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - உதிரி பூக்கள்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - கோவை அனுராதா
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - எஸ்.என்.பார்வதி
5. சிறந்த கதாநாயகன் - ஸ்ரீகர் பிரசாத் (இளவரசி)
6. சிறந்த கதாநாயகி - ஸ்ரீ துர்க்கா (உறவுகள்)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - சேத்தன் கடம்பி (உதிரி பூக்கள்)
8. சிறந்த குணச்சித்திர (நடிகை) - விஜி சயதிரசேகர் (அழகி)
9. சிறந்த வில்லன் நடிகர் - பாபூஸ் (சிவசங்கரி)
10. சிறந்த வில்லி நடிகை - சாதனா (தென்றல்)
11. சிறந்த இயக்குநர் - எஸ்.ஜே.எட்வர்டு ராஜ் (இருமலர்கள்)
12. சிறந்த கதையாசிரியர் - இந்திரா சவுயதரராஜன் (ருத்ரம்)
13. சிறந்த திரைக்கதையாசிரியர் - கென்னடி (இருமலர்கள்)
14. சிறந்த உரையாடல் ஆசிரியர் - மருது சங்கர் (அழகி)
15. சிறந்த ஒளிப்பதிவாளர் - ராஜசேகரன் (ருத்ரம்)
16. சிறந்த படத்தொகுப்பாளர் - எஸ்.ஆர்.ஜி.விஜய் கண்ணன் (வைராக்கியம்)
17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - பால பாரதி (ருத்ரம்)
18. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - தங்கராஜ் (உறவுகள்)
19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - பிரமிளா (பல தொடர்கள்)
20. சிறந்த தந்திரக் காட்சியாளர் - மதி செந்தில் (ருத்ரம்)
2013-ம் ஆண்டு:
1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - வாணி ராணி
2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - தெய்வ மகள்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - குட்டி பத்மினி
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - ‘வியட்நாம் வீடு’ சுயதரம்
5. சிறந்த கதாநாயகன் - வேணு அரவியத் (வாணி ராணி)
6. சிறந்த கதாநாயகி - ரேணுகா (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - மௌலி (நாதஸ்வரம்)
8. சிறந்த குணச்சித்திர (நடிகை) - அனுராதா கிருஷ்ணமூர்த்தி (இளவரசி)
9. சிறந்த வில்லன் நடிகர் - மனோகர் (புகுந்த வீடு)
10. சிறந்த வில்லி நடிகை - ரேகா (தெய்வ மகள்)
11. சிறந்த இயக்குநர் - எம்.கே.அருயதவ ராஜ் (இளவரசி)
12. சிறந்த கதையாசிரியர் - எழிச்சூர் அரவிந்தன் (பொம்மலாட்டம்)
13. சிறந்த திரைக்கதையாசிரியர் - குரு சம்பத் குமார் (இளவரசி)
14. சிறந்த உரையாடல் ஆசிரியர் - ஷோக்தாவூத் (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
15. சிறந்த ஒளிப்பதிவாளர் - தமிழ் மாறன் (அமுதா ஓர் ஆச்சர்யக் குறி)
16. சிறந்த படத்தொகுப்பாளர் - வி.கார்த்திக் (உதிரிப்பூக்கள்)
17. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - இலக்கியன் (உதிரிப்பூக்கள்)
18. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - சபரிநாதன் (தெய்வ மகள்)
19. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - சுதா (சிந்து சியாம்) (புகுந்த வீடு)
20. சிறந்த தந்திரக் காட்சியாளர் எம்.சுப்பிரமணி, எம்.கணேஷ், ஆர்.எம்.நாகராஜ் (சிவசங்கரி)
2009 - 2014 ஆண்டுகளில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
2009 - 2014 வரை வெளிவந்த படங்களில் சிறந்த படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் குறித்த முழு விபரங்கள் பின்வருமாறு:-
2004-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு - பசங்க
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார்
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு
4 சிறந்த நடிகர் - கரண் (மலையன்)
5 சிறந்த நடிகை - பத்மப்ரியா (பொக்கிஷம்)
6 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)
7 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அஞ்சலி (அங்காடித் தெரு)
8 சிறந்த வில்லன் நடிகர் - பிரகாஷ்ராஜ் (வில்லு)
9 சிறந்த நகைச்சுவை நடிகர் - கஞ்சா கருப்பு (மலையன்)
10 சிறந்த குணச்சித்திர நடிகர் - சரத்பாபு (மலையன்)
11 சிறந்த குணச்சித்திர - நடிகை ரேணுகா (அயன்)
12 சிறந்த இயக்குநர் - வசந்த பாலன் (அங்காடித்தெரு)
13 சிறந்த கதையாசிரியர் - சேரன் (பொக்கிஷம்)
14 சிறந்த உரையாடல் ஆசிரியர் - சி.பாண்டிராஜ் (பசங்க)
15 சிறந்த இசையமைப்பாளர் - சுந்தர் சி.பாபு (நாடோடிகள்)
16 சிறந்த பாடாலாசிரியர் - யுகபாரதி (பசங்க)
17 சிறந்த பின்னணிப் பாடகர் - டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா (பசங்க)
18 சிறந்த பின்னணிப் பாடகி - மஹதி (அயன்)
19 சிறந்த ஒளிப்பதிவாளர் - மனோஜ் பரமஹம்சா (ஈரம்)
20 சிறந்த ஒலிப்பதிவாளர் - டி. உதயகுமார் (பேராண்மை)
21 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - டி.இ.கிஷோர் (ஈரம்)
22 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - வி.செல்வக்குமார் (பேராண்மை)
23 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - மிராக்கிள் மைக்கேல் (பேராண்மை)
24 சிறந்த நடன ஆசிரியர் - தினேஷ் (யோகி)
25 சிறந்த ஒப்பனைக் கலைஞர் - வி.சண்முகம் (கந்தசாமி)
26 சிறந்த தையற் கலைஞர் - நளினி ஸ்ரீராம் (அயன்)
27 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - வினோத் (அந்தோணி யார்?)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - மகாலட்சுமி (ஈரம், பசங்க)
29 சிறந்த குழந்தை நட்சத்திரம் - 1. டி.எஸ்.கிஷோர் 2. ஸ்ரீராம் (பசங்க)
2010-ம் ஆண்டு:

1 சிறந்த படம் முதல் பரிசு - மைனா
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - களவாணி
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - புத்ரன்
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு - நம்ம கிராமம்
5 சிறந்த நடிகர் - விக்ரம் (ராவணன்)
6 சிறந்த நடிகை - அமலாபால் (மைனா)
7 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - ஒய்.ஜி.மகேந்திரா (புத்ரன்)
8 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - சங்கீதா (புத்ரன்)
9 சிறந்த வில்லன் நடிகர் - எஸ்.திருமுருகன் (களவாணி)
10 சிறந்த நகைச்சுவை நடிகர் - ஜெ.தம்பி ராமையா (மைனா)
11 சிறந்த குணச்சித்திர நடிகர் - பி.சமுத்திர கனி (ஈசன்)
12 சிறந்த குணச்சித்திர நடிகை - சரண்யா பொன்வண்ணன் (களவாணி)
13 சிறந்த இயக்குநர் - பிரபு சாலமன் (மைனா)
14 சிறந்த கதையாசிரியர் - ஆர். சற்குணம் (களவாணி)
15 சிறந்த உரையாடல் ஆசிரியர் - ஆர்.சற்குணம் (களவாணி)
16 சிறந்த இசையமைப்பாளர் - யுவன் சங்கர் ராஜா (பையா)
17 சிறந்த பாடாலாசிரியர் - பிறைசூடன் (நீயும் நானும்)
18 சிறந்த பின்னணிப் பாடகர் - கார்த்திக் (ராவணன்)
19 சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (எந்திரன்)
20 சிறந்த ஒளிப்பதிவாளர் - சந்தோஷ் சிவன் & வி.மணிகண்டன் (ராவணன்)
21 சிறந்த ஒலிப்பதிவாளர் - ஜி.தரணிபதி (யாதுமாகி)
22 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - பி.லெனின் (நம்ம கிராமம்)
23 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - டி.சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்)
24 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (வந்தே மாதரம்)
25 சிறந்த நடன ஆசிரியர் - ராஜூ சுந்தரம் (பையா)
26 சிறந்த ஒப்பனைக் கலைஞர் - மனோகர் (பாஸ் (எ) பாஸ்கரன்)
27 சிறந்த தையற் கலைஞர் - நட்ராஜ் (களவாணி)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - கே. மனோகர் (நர்த்தகி)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - சவீதா (பாஸ் (எ) பாஸ்கரன்)
30 சிறந்த குழந்தை நட்சத்திரம் - அஸ்வத் ராம் (நந்தலாலா)
2011-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு - வாகை சூடவா
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - தெய்வத்திருமகள்
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - உச்சிதனை முகர்ந்தால்
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு - மெரினா
5 சிறந்த நடிகர் - விமல் (வாகைசூடவா)
6 சிறந்த நடிகை - இனியா (வாகைசூடவா)
7 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - சிவகார்த்திகேந்ன் (மெரினா)
8 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அனுஷ்கா (தெய்வத் திருமகள்)
9 சிறந்த வில்லன் நடிகர் - பொன்வண்ணன் (வாகைசூடவா)
10 சிறந்த நகைச்சுவை நடிகர் - மனோ பாலா (பல படங்கள்)
11 சிறந்த நகைச்சுவை நடிகை - தேவதர்ஷினி (காஞ்சனா)
12 சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (தெய்வத் திருமகள்)
13 சிறந்த குணச்சித்திர நடிகை - லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்)
14 சிறந்த இயக்குநர் - ஏ.எல்.விஜய் (தெய்வத் திருமகள்)
15 சிறந்த கதையாசிரியர் - ராதா மோகன் (பந்ணம்)
16 சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாண்டி ராஜ் (மெரினா)
17 சிறந்த இசைந்மைப்பாளர் - ஹாரிஷ் ஜெயராஜ் (கோ)
18 சிறந்த பாடாலாசிரியர் - முத்துலிங்கம் (மேதை)
19 சிறந்த பின்னணிப் பாடகர் - ஹரிச்சரன் (தெய்வத் திருமகள்)
20 சிறந்த பின்னணிப் பாடகி - ஸ்வேதா மோகன் (பல படங்கள்)
21 சிறந்த ஒளிப்பதிவாளர் - பாலசுப்ரமணிந்ம் (நூற்றெண்பது)
22 சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே.ஐ.ஐந்ப்பன் (பல படங்கள்)
23 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - ராஜா முகமது (வாகை சூடவா)
24 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - கிரண் (கோ)
25 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - பீட்டர் ஹெயின்ஸ் (கோ)
26 சிறந்த நடன ஆசிரியர் - லாரன்ஸ் (காஞ்சனா)
27 சிறந்த ஒப்பனைக் கலைஞர் - தசரதன் (அவன்-இவன்)
28 சிறந்த தைந்ற் கலைஞர் - ஸ்வேதா ஸ்ரீனிவாஸ் (கோ)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - சாய் ரவி (சிறுத்தை)
30 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - பிரியங்கா (யுத்தம் செய்)
31 சிறந்த குழந்தை நட்சத்திரம் சாரா - (தெய்வத் திருமகள்)
2012-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு - வழக்கு எண்.18/9
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - சாட்டை
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - தோனி
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு - கும்கி
5 சிறந்த நடிகர் ஜீவா - (நீ தானே என் பொன்வசந்தம்)
6 சிறந்த நடிகை லட்சுமி மேனன் - (1. கும்கி 2.சுந்தரபாண்டியன்)
7 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - விக்ரம் பிரபு (கும்கி)
8 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - சமந்தா (நீ தானே என் பொன்வசந்தம்)
9 சிறந்த வில்லன் நடிகர் - விஜய சேதுபதி (சுந்தரபாண்டியன்)
10 சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (மனம்கொத்தி பறவை மற்றும் பல படங்கள்)
11 சிறந்த நகைச்சுவை நடிகை - ஆர்த்தி (பாரசீக மன்னன்)
12 சிறந்த குணச்சித்திர நடிகர் - நரேன் (மனம்கொத்தி பறவை)
13 சிறந்த குணச்சித்திர நடிகை - ரேவதி (அம்மாவின் கைபேசி)
14 சிறந்த இயக்குநர் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண்.18/9)
15 சிறந்த கதையாசிரியர் - எஸ்.ஆர்.பிரபாகரன் (சுந்தரபாண்டியன்)
16 சிறந்த உரையாடல் ஆசிரியர் - அன்பழகன் (சாட்டை)
17 சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (கும்கி)
18 சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார் (பல படங்கள்)
19 சிறந்த பின்னணிப் பாடகர் - கே.ஜி.ரஞ்சித் (கும்கி)
20 சிறந்த பின்னணிப் பாடகி - ஸ்ரேயா கோஷல் (கும்கி)
21 சிறந்த ஒளிப்பதிவாளர் - சுகுமார் (கும்கி)
22 சிறந்த ஒலிப்பதிவாளர் - எம்.ரவி (நீ தானே என் பொன்வசந்தம்)
23 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - எல்.வி.கே.தாஸ் (பரதேசி)
23 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - சி.எஸ்.பாலசந்தர் (பரதேசி)
24 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - சில்வா (வேட்டை)
25 சிறந்த நடன ஆசிரியர் - பண்டிட் பிர்ஜு மகராஜ் (விஸ்வரூபம்)
26 சிறந்த ஒப்பனைக் கலைஞர் - டி.தினகரன் (சுந்தரபாண்டிந்ன்)
27 சிறந்த தையற் கலைஞர் - கௌதமி (விஸ்வரூபம்)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - ராஜேந்திரன் (சகுனி)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - திவ்யா (பரதேசி)
2013-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு - இராமானுஜன்
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - தங்கமீன்கள்
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - பண்ணையாரும் பத்மினிந்ும்
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு - ஆள்
5 சிறந்த நடிகர் - ஆர்யா (ராஜா ராணி)
6 சிறந்த நடிகை - நயன்தாரா (ராஜா ராணி)
7 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - விஜய் சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும்) (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
8 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - நஸிரியா நசீம் (நேரம்)
9 சிறந்த வில்லன் நடிகர் - விடியல் ராஜ் (ஆள்)
10 சிறந்த நகைச்சுவை - நடிகர் சத்யன் (ராஜா ராணி)
11 சிறந்த குணச்சித்திர நடிகர் - ஜெயப்பிரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்)
12 சிறந்த குணச்சித்திர நடிகை - துளசி (பண்ணையாரும் பத்மினியும்)
13 சிறந்த இயக்குநர் - ராம் (தங்கமீன்கள்)
14 சிறந்த கதையாசிரியர் - பாலுமகேந்திரா (தலைமுறைகள்)
15 சிறந்த உரையாடல் ஆசிரியர் - அட்லி (ராஜா ராணி)
16 சிறந்த இசையமைப்பாளர் - ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
17 சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துகுமார் (தங்க மீன்கள்)
18 சிறந்த பின்னணிப் பாடகர் - எஸ்.பி.பி.சரண் (பண்ணையாரும் பத்மினிந்ும்)
19 சிறந்த பின்னணிப் பாடகி - சந்தியா (பண்ணையாரும் பத்மினியும்)
20 சிறந்த ஒளிப்பதிவாளர் - சித்தார்த் (ஜெ.கே.எனும் நண்பனின் வாழ்க்கை)
21 சிறந்த ஒலிப்பதிவாளர் - தபஸ் நாந்க் (ராஜா ராணி)
22 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - லியோ ஜான் பால் (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
23 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - மகி (மூன்று பேர் மூன்று காதல்)
24 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - சூப்பர் சுப்ராயன் (6 மெழுகுவர்த்திகள், நெடுஞ்சாலைகள்)
25 சிறந்த நடன ஆசிரியர் - ஷோபி (பாண்டிய நாடு)
26 சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன் (இராமானுஜன்)
27 சிறந்த தையற் கலைஞர் - சகுந்தலா ராஜசேகர் (இராமானுஜன்)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - கதிர் (பாண்டிய நாடு)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - மீனா லோச்சனி (பாண்டிய நாடு)
30 சிறந்த குழந்தை நட்சத்திரம் - சாதனா (தங்கமீன்கள்)
2014-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு - குற்றம் கடிதல்
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - கோலி சோடா
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - நிமிர்ந்துநில்
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு - காக்கா முட்டை
5 சிறந்த நடிகர் - சித்தார்த் (காவிந்த் தலைவன்)
6 சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
7 சிறந்த நடிகர் - (சிறப்பு பரிசு) பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)
8 சிறந்த நடிகை - (சிறப்பு பரிசு) ஆனந்தி (கயல்)
9 சிறந்த வில்லன் நடிகர் - பிரிதிவிராஜ் (காவியத் தலைவன்)
10 சிறந்த நகைச்சுவை நடிகர் - கே.ஆர்.சிங்கமுத்து (பல்வேறு படங்கள்)
11 சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (காவியத் தலைவன்)
12 சிறந்த குணச்சித்திர நடிகை - குயிலி (காவியத் தலைவன்)
13 சிறந்த இயக்குநர் - ராகவன் (மஞ்சப்பை)
14 சிறந்த கதையாசிரியர் - எச்.வினோத் (சதுரங்க வேட்டை)
15 சிறந்த உரையாடல் ஆசிரியர் - வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)
16 சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (காவியத் தலைவன்)
17 சிறந்த பாடாலாசிரியர் - நா.முத்துக்குமார் (சைவம்)
18 சிறந்த பின்னணிப் பாடகர் - ஹரிசரன் (காவியத் தலைவன்)
19 சிறந்த பின்னணிப் பாடகி - உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம்)
20 சிறந்த ஒளிப்பதிவாளர் - நிரவ்ஷா (காவியத் தலைவன்)
21 சிறந்த ஒலிப்பதிவாளர் - ராஜ் கிருஷ்ணன் (குக்கூ)
22 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - ரமேஷ் (நிமிர்ந்து நில்)
23 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட்டைரக்டர்) - சந்தானம் (காவிந்த் தலைவன்)
24 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - திலிப் சுப்பராயன் (மஞ்சப்பை, ரா)
25 சிறந்த நடன ஆசிரியர் - காயத்திரி ரகுராம் (நிமிர்ந்து நில்)
26 சிறந்த ஒப்பனைக் கலைஞர் - பட்டணம் முகம்மது ரஷீத் (காவியத் தலைவன்)
27 சிறந்த தையற் கலைஞர் - செல்வம் (காவியத் தலைவன்)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) சாந்தகுமார் (நிமிர்ந்து நில்)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) மீனலோசினி (மஞ்சப்பை)
30 சிறந்த குழந்தை நட்சத்திரம் 1. விக்னேஷ் 2. ரமேஷ் (காக்கா முட்டை)
கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தெலுங்கில், `பிரேமபாசம்' என்ற பெயரில் காதலுக்கு புது இலக்கணம் சொன்ன படம் பெரும் வெற்றி பெற்றது. ஒரு அழகான இளம் பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் இளைஞன் ஒருவன், அவள் காதல் கிடைக்கப் பெற்ற பிறகு அவளை உதாசீனம் செய்கிறான். காதலியை பல்வேறு கட்டங்களில் வெறுப்பேற்றி, அவளை வேறொரு திருமணமும் செய்ய வைத்து விடுகிறான். அதன் பிறகுதான் அவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்த விஷயமே காதலிக்கு தெரியவருகிறது.
இந்த உணர்ச்சிபூர்வ காதல் கதையை தமிழில் எடுக்க விரும்பினார், பாலாஜி. அதுவே கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடிக்க "வாழ்வே மாயம்'' என்ற பெயரில் படமானது.
இந்தப் படத்தில் கதாநாயகி என்ற இடத்தில் ஸ்ரீதேவிதான் இருந்தார். நோயுற்ற பிறகு தன்னைத் தேடிவரும் நாயகனுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுக்கும் `விலை மாது' கேரக்டரில் நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.
இந்தக் கேரக்டரிலும் நடிப்பது தொடர்பாக முதலில் தன் அதிருப்தியை வெளியிட்டார், ஸ்ரீபிரியா. ஆனால், படத்தில் ஸ்ரீதேவி கேரக்டருக்கு இணையாக அவரும் பேசப்பட்டார்.
இந்தப் படத்தில் கமலின் காதலியாக வரும் ஸ்ரீதேவியும், விலைமாது கேரக்டரில் வரும் ஸ்ரீபிரியாவும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீபிரியா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைக்கும்படி செய்திருந்தார், வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன். ஏற்கனவே "பில்லா'' படத்தில் ஸ்ரீபிரியாவின் கேரக்டரை ஏ.எல்.நாராயணன் மெருகேற்றியிருந்தார். இந்தப் படத்தில் அது இன்னும் அதிகமாகப் பளிச்சிட்டது.
இந்தப் படத்தில் நடித்த வகையில் ஸ்ரீபிரியாவுக்குள் இன்னொரு சந்தோஷமும் இருக்கிறது. பாலாஜி தயாரிக்கும் எல்லாப் படங்களிலுமே கதாநாயகன் பெயர் `ராஜா' என்றும் கதாநாயகி பெயர் `ராதா' என்றும் இருக்கும். "வாழ்வே மாயம்'' படத்தில், கதாநாயகன் ராஜாவாக கமல் நடித்தார். `ராதா' கேரக்டரில் ஸ்ரீபிரியாதான் நடித்தார். ஸ்ரீதேவி, `தேவி' என்ற கேரக்டரில் நடித்தார். இப்படி பாலாஜி பட `நாயகி' பெயரில் நடிக்க நேர்ந்ததே பெரிய திருப்திதான் ஸ்ரீபிரியாவுக்கு.
அடுத்தடுத்து 2 படங்களில் பெரிய கேரக்டர் அமையாததால், தயாரிப்பாளர் பாலாஜி தனது புதிய தயாரிப்பில் ஸ்ரீபிரியாவாலேயே மறக்க முடியாத கதாநாயகி கேரக்டரை கொடுக்க நினைத்தார். அப்போது இந்தியில் ரண்தீன்கபூர், ஹேமமாலினி நடித்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த "ஹாத் கீ சபாய்'' என்ற படத்தின் தமிழ் உரிமை வாங்கி அதில் கமலஹாசனையும், ஸ்ரீபிரியாவையும் ஜோடியாக நடிக்க வைத்தார். அந்தப் படமே "சவால்.'' படம் தமிழிலும் வெற்றி பெற்றது. ஸ்ரீபிரியாவின் நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியது.
எத்தனையோ நடிகைகளுடன் நடிக்க நேர்ந்த போதிலும், ஸ்ரீபிரியாவின் "மரியாதைக்குரிய நடிகை'' பட்டியலில் இருந்தவர் மனோரமாதான்.
அதற்கான காரணத்தை ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-
"மற்ற நடிகர் - நடிகைகள் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துபவர் `ஆச்சி' மனோரமா. புதுமுகம் ஆயிற்றே என்றெல்லாம் ஒதுங்கிப் போகமாட்டார்.
என் நான்காவது படமான "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் ஆச்சியும் இருந்தார். படத்தில் ஜெய்சங்கர் - ஜெயசித்ரா ஜோடியாக நடித்தனர். நான் தேங்காய் சீனிவாசனின் ஜோடியாக நடித்தேன்.
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு சேலத்தில் நடந்தது. `ஆச்சி'யும் வந்திருந்தார். நான் நடிக்க வருவதற்கு முன்பே, எங்கள் குடும்பத்துடன் ஆச்சிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் நான் சினிமாவுக்கு வந்தபிறகு, என்னை ரொம்பவும் அக்கறையுடன் பார்த்துக்
கொள்வார்.எப்போதும் படப்பிடிப்புக்கு என்னுடன் பாட்டி வருவதுண்டு. `ஆச்சி'யுடன் எனக்கு படப்பிடிப்பு என்றால், பாட்டி வரமாட்டார். இந்த வகையில் ஆச்சி என் இன்னொரு அம்மா ஸ்தானத்தில் இருந்தார்.
"தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படப்பிடிப்பில் அன்று எனக்கும் ஆச்சிக்கும் சீன் இருந்தது. முதலில் எனக்கு மேக்கப் போட்டார்கள். எனக்கு மேக்கப் போட்டவர் ஏதோ பெயருக்கு அவசரமாக போட்டு விட்டு போய்விட்டார். நான் நடிக்க வேண்டிய அன்றைய காட்சிக்கு எனக்கு கொடுக்கப்பட்டிருந்த உடையும் `ஏனோதானோ' என்றிருந்தது.
நான் மேக்கப் ரூமை விட்டு வெளியே வரவும் `ஆச்சி' என்னைப் பார்த்து விட்டார். `மேக்கப்' என்ற பெயரில் என் முகம் இருந்த விதம் ஆச்சிக்குள் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது. என் கையைப்பிடித்து மறுபடியும் மேக்கப் ரூமுக்கு அழைத்துப் போனார்.
மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம், "ஒரு தமிழ்ப்பொண்ணு நடிக்க வந்தா அவளுக்கு இந்த மாதிரிதான் மரியாதை கொடுப்பீங் களா?'' என்று உரத்த குரலில் கண்டித்ததுடன், எனக்கு மறுபடியும் மேக்கப் போட ஏற்பாடு செய்தார். சரியான உடைகளையும் தரச்செய்தார்.
அன்றைக்கு என்னுடன் என் அம்மாவோ, பாட்டியோ இருந்திருந்தாலும், `ஆச்சி' அளவுக்கு நிச்சயம் செய்திருக்க முடியாது. இந்த வகையில் ஆச்சி, எனக்கு இன்னொரு அம்மா.
இப்படிப்பட்ட ஆச்சியிடமே ஒரு தடவை ஏதோ ஒரு காரணத்துக்காக கோபித்துக்கொண்டு விட்டேன். அம்மா - பெண்ணுக்கிடையே வந்து போகும் சாதாரண மோதலாக அதை ஆச்சி எடுத்துக் கொண்டார். எனக்கு அப்போது ஆச்சி அளவுக்கு பக்குவம் ஏது?
ஒருநாள் ஷெட்டில் என் கண்ணில்பட்ட ஆச்சியின் ஹேர் டிரஸ்ஸரிடம், "மேடம் நல்லா இருக்காங்களா?'' என்று கேட்டுவிட்டேன். அடுத்த கணம் எங்கிருந்துதான் ஆச்சி வந்தாரோ, என்னை பிலுபிலுவென பிய்த்துவிட்டார்.
"என்னை மேடம்னு கூப்பிடற அளவுக்கு நீங்க பெரிய மனுஷி ஆகிட்டீங்களா?'' என்று கோபத்துடன் கூறினார். அவர் அப்படி உரிமையுடன் என் மீது கோபப்பட்டு, மீண்டும் என்னுடன் சமரசமாகிவிடவேண்டும் என்பதுதான் என் திட்டம்! அது நன்றாகவே நடந்தேறியது.
இப்போது நான் நடிக்கும் "இம்சை அரசிகள்'' சீரியலில்கூட எனக்கும் ஆச்சிக்கும் சமமான கேரக்டர்கள். ஆச்சி அவருக்கே உரிய ஆற்றலில் சின்னத்திரை ரசிகர்களையும் குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
எப்போதும் என்னை வாய் நிறைய `ஆலு' (ஒரிஜினல் பெயரான அலமேலுவின் சுருக்கம்) என்று வாய் நிறைய அவர் அழைப்பதே தனி அழகு.''

ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கத்தில் சந்த்ரு சீனு - நித்யா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `காதல் காலம்' படத்தின் விமர்சனம்.
நாயகன் சந்த்ரு சீனு வேலையில்லாமல் ஊர் சுற்றி வரும் கிராமத்து இளைஞனாக வலம் வருகிறார். அந்த கிராமத்தில் பேசப்படும் நபராக இருக்கும் சந்த்ருவின் அப்பா. அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை சந்த்ரு ஊர்சுற்றியே செலவு செய்து வருகிறார். எதன் மீதும் அதிக ஈடுபாடு கிடையாத சந்த்ரு கார், பைக்கே கதியென இருக்கிறார்.
சந்த்ரு எந்த தவறு செய்தாலும், அதற்கு அவரது தந்தை அவருக்கு ஆதரவாகவே பேசுவது, நாயகனுக்கு வாழைப்பழத்தை உறித்து வாயில் ஊட்டுவது போல இருக்கிறது. இந்நிலையில், சந்த்ரு நாயகி நித்யா ஷெட்டியை சந்திக்கிறார். நித்யாவை சந்தித்த முதல் தருணத்திலேயே சந்த்ருவுக்கு அவர் மீது காதல் வந்து விடுகிறது. கண்டிப்பான குடும்பத்தைச் சேர்ந்த நித்யா, அவரை காதலிக்க மறுக்கிறார்.

கல்லூரி செல்லும் நித்யாவிடம், அவரது தந்தை காதல் உள்ளிட்ட எந்த வலையிலும் சிக்கிவிடக் கூடாது என்று கண்டிப்பாக வளர்த்திருக்கிறார். இதனால் சந்த்ருவின் காதலை ஏற்க மறுக்கும் நித்யாவை, தினமும் சந்த்ரு பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். ஒருகட்டத்தில், அவர் செய்த தவறுகள் அனைத்தையும் கூறி, அவளுக்காக இனிமேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளிக்கிறார்.
சந்த்ருவின் பேச்சைக் கேட்டு, நித்யாவும் அவரை காதலிக்க சம்மதம் தெரிவிக்கிறார். இவ்வாறாக சந்தோஷமாக இருவரும் காதலித்து வரும் நிலையில், இவர்களது காதல் நித்யாவின் தந்தைக்கு தெரிய வர, இவர்களது காதலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.

இதையடுத்து நித்யாவே உயிரென இருக்கும் சந்த்ரு, அவரை கரம் பிடித்தாரா? இவர்களது காதலுக்கு நித்யாவின் தந்தை பச்சைக் கொடி காட்டினாரா? அதற்காக சந்த்ரு என்ன செய்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
தந்தையின் காசை செலவு செய்வதில் பொறுப்பின்றியும், காதல் காட்சிகளிலும் சந்த்ரு சிறப்பாக நடித்திருக்கிறார். நித்யா ஷெட்டி அழகாகவும், பொறுமையாகவும் காட்சிக்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

படத்தின் இயக்குநரான ஜி.ஏ.சோமசுந்தரா, காதல் காட்சிகளை மட்டுமே பெரும் பகுதியாக எடுத்திருக்கிறார். இது ரசிகர்களிடையே ஒருவிதமான முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை என்ற ஒன்றை இயக்குநர் மறந்துவிட்டார் என்பது போல காட்சிகள் கோர்க்கப்பட்டுள்ளன. இதுவே படத்திற்கு பெரிய மைனஸ்.
எஸ்.ஜெயநாதனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது. விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `காதல் காலம்' காதல் மட்டுமே.

போதை பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்களும் நடிகைகளும் தொடர்பு கொண்டுள்ள காரணத்தினால் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ஐதராபாத் நகரில் போதை பொருள் விற்பனையை தடுக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இதில் கோவாவில் இருந்து ஐதராபாத்துக்கு போதை பொருள் கடத்தி வந்து விற்ற தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கெலினை கைது செய்தனர். அவனது கூட்டாளிகளும் சிக்கினர்.
இவர்கள் போதை பொருளை கல்லூரி மாணவர்கள், திரையுலக பிரமுகர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் போதை பொருள் விற்பனை தொடர்பாக குண்டுஅனிஷ், ரித்துவல் அகர்வால் ஆகிய 2 பேர் சிக்கினர். இவர்கள் இணையதளம் மூலம் போதை பொருளை விற்று உள்ளனர். இதையடுத்து இவர்களை யார்- யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்ற தகவல்களை சேகரித்தனர்.
இதில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 3 இளம் கதாநாயகர்கள்,
2 தயாரிப்பாளர்களின் மகன்கள், ஒரு வளர்ந்து வரும் நடிகர்,
4 இயக்குனர்கள், 2 நடிகைகள் என 11 பேர் தொடர்பு கொண்டது தெரியவந்தது.
மேலும் சர்வதேச போதை கும்பல் தலைவர் கெலினுடன் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த 50 பேர் தொடர்பில் இருந்ததும் அம்பலமாகி இருக்கிறது.
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு பற்றி சிறப்பு விசாரணை குழு முன்பு ஒரு வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் உள்பட 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆனால் அவர்களது பெயர் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களிடம் போதை பொருள் கும்பலுடன் எந்த மாதிரியான தொடர்பு என்று விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் 35 பேருக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரத்தை மீறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றும், தமிழ்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் ஆவேசமாக பேட்டி அளித்தார். கைது நடவடிக்கை மேற்கொண்டால், சட்டமும், நீதியும் என்னை காப்பாற்றும் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இன்று ஒரு புகார் அளித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை திட்டும் காயத்ரி ரகுராம் ‘சேரி பிகேவியர்’ என்று கூறி சேரி மக்களை இழிவுபடுத்தியுள்ளார்.
இது வன்கொடுமை தடுப்பு சட்டம், தீண்டாமை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைகுரிய குற்றமாகும்.
சேரி மக்கள் பற்றி தவறான கண்ணேட்டத்தை இந்த நிகழ்ச்சி பரப்புகிறது. எனவே காயத்ரி ரகுராம் மீதும், தொலைக்காட்சி மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.