என் மலர்
நடிகை மானபங்க விவகாரத்தில் மன்னிப்பு கேட்க தயார் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 12-ந் தேதி சென்னையில் பேட்டி அளித்தபோது, கேரளாவில் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டார். பாலியல் வன்முறைக்கு உள்ளானவரின் பெயரை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், தேசிய பெண்கள் ஆணையம், தானாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
நடிகையின் பெயரை தெரிவித்ததற்காக, நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதப்போவதாக தேசிய பெண்கள் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட கமல்ஹாசன் இதுபோன்று செயல்படுவது, தவறான முன்மாதிரி ஆகிவிடும். பாதிக்கப்பட்ட நடிகையோ அல்லது ரசிகர்களோ அவர் மீது வழக்கு தொடர முடியும். எனவே, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:-
நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நான் கேட்பேன். சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை. பெண்களை நேசிப்பவனும், அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான். நான் யாருக்காகவும் வளைந்து கொடுப்பவன் அல்ல. குற்றவாளிகளை விட்டுவிட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது.
இவ்வாறு அவர் எழுதி இருக்கிறார்.

பெண்கள் எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகை ஹன்சிகா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
“சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருவது கவலை அளிக்கிறது. தவறு செய்பவர்கள் திருந்த வேண்டும். ஒரு பெண்ணுக்கு தொல்லை கொடுப்பதால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். தவறு செய்தால் நிம்மதி போய் விடும். தைரியமாகவும் வாழ முடியாது. எனவே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
நடிகைகளுக்கும் சினிமாவில் தொந்தரவுகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனக்கு அந்த மாதிரி எந்த அனுபவமும் ஏற்படவில்லை. நடிகையாக அறிமுகமானபோது எனக்கு ஏதேனும் தொல்லை நேர்ந்து இருந்தால் நான் சினிமாவை விட்டே ஓடி இருப்பேன். அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
பெண்கள் தனியாக போனில் பேசிக்கொண்டு இருந்தால் பெற்றோர்கள் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். ஆனால் மகன் விடிய விடிய தனியறைக்குள் கம்ப்யூட்டரிலேயே மூழ்கி கிடந்தாலும் கண்டு கொள்வது இல்லை. இந்த மனப்போக்கு மாற வேண்டும். ஆண் குழந்தைகளையும் எச்சரிக்கையாக கண்காணிப்போடு வளர்க்க வேண்டும்.

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மூலஸ்தானத்தை சுற்றி வருவேன். அப்போது ரசிகர்கள் என்னை பின்தொடர்ந்து வருவார்கள். இது எனக்கு கஷ்டமாக இருக்கும். ஆனாலும் அவர்களின் அன்பின் வெளிப்பாடாக அதை நினைத்துப் பொறுத்துக் கொள்வேன்.
எனக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தே பண கஷ்டம் இல்லாமல் வளர்ந்தேன். நிறைய குழந்தைகள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தெருவோரம் நிற்பதை பார்த்து இருக்கிறேன்.
அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலால் 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறேன். அவர்களுக்கான சாப்பாடு, படிப்பு செலவுகளை கவனித்துக்கொள்கிறேன். முதியோர்களுக்காகவும் இல்லம் ஒன்றை கட்ட இருக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் `அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். லட்சுமியின் கருவை சுமந்து குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும் "வாடகைத் தாயாக'' ஸ்ரீபிரியா நடித்துள்ளார். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது.

இந்தப் படத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு வந்தபோது, படத்தில் லட்சுமியும் இருக்கிறார் என்பது தெரிந்து ரொம்பவும் மகிழ்ந்திருக்கிறார். அந்த நேரம் ஏற்பட்ட பரவசத்தை ஸ்ரீபிரியாவே பகிர்ந்து கொள்கிறார்:-
"எனக்கு லட்சுமியை ரொம்ப பிடிக்கும். அவங்களோட "சட்டைக்காரி'' படத்தையெல்லாம் ரொம்ப ரசித்துப் பார்த்திருக்கிறேன். நடிப்பில் தனித்துவம் வாய்ந்தவர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு வேண்டியவர்களே கொஞ்சம் பயமுறுத்தினார்கள். "லட்சுமி பிரமாதமான நடிகை. அவர் கூட நடிக்கும்போது நீ காணாமல் போயிடப்போறே'' என்று பயமுறுத்தினார்கள். ஆனால் படத்தில் நடிக்கும்போது நட்பில் நாங்கள் ரொம்பவே ஒன்றிப் போனோம். படத்தில் `ஆச்சி'யும் இருந்தார். மூன்று பேரும் செட்டில் இருந்து விட்டால் அரட்டை! அரட்டை! ஒரே அரட்டைதான்!
ஒரு கட்டத்தில் எங்கள் லூட்டியை தாங்கிக்கொள்ள முடியாத டைரக்டர் முக்தா சீனிவாசன், "உங்களை கட்டி மேய்க்க என்னால் முடியவில்லை. கடவுள் சத்தியமா உங்க மூணு பேரையும் ஒண்ணா வெச்சு இனிமே படம எடுக்கவே மாட்டேன். எனக்கு வேலையே நடக்க மாட்டேங்குது'' என்றார்.
எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாரோ அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க முடியாமலே போய்விட்டது. ஒன்று நானும் ஆச்சியும் இருப்போம். இல்லேன்னா லட்சுமியும், நானும் இருப்போம். எப்படியோ டைரக்டர் முக்தா சீனிவாசன் சொன்னது நடந்துவிட்டது.''
இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் "ஆண்பிள்ளை சிங்கம்.''
திட்டமிட்டு படமாக்கும் ஆற்றல் இவரிடம் இருப்பதை ஸ்ரீபிரியா தெரிந்து கொண்டார். தேவையில்லாமல் நடிகர் - நடிகைகளை காக்க வைக்கிற பழக்கமும் இவருக்கு இருந்ததில்லை. தொழிலில் இவர் காட்டிய ஈடுபாடு ஸ்ரீபிரியாவை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து இவரது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இப்படி அவர் "ஒரு கொடியில் இரு மலர்கள்'', "சொந்தமடி நீ எனக்கு'', "எனக்குள் ஒருவன்'', "மோகம் முப்பது வருஷம்'' என படங்களை தொடர்ந்தார்.
இதில், "மோகம் முப்பது வருஷம்'' படத்தில் மட்டும், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் ஸ்ரீபிரியாவுக்கு திருப்தி இல்லை. தைரியமாக, "இந்த கேரக்டரில் நான் நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடமே கேட்டும்விட்டார்.
இந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. அதற்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, இப்படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதிய மகேந்திரன் அவரை சந்தித்தார். "படத்தில் 3 பெண் கேரக்டர்கள் இருந்தாலும் நீங்கள் நடிக்கிற பாமா கேரக்டரோடுதான் ரசிகர்கள் ஒன்றிப் போவார்கள். படம் வெளிவரும்போது ரசிகர்கள், பாமா பற்றிதான் பேசிக்கொண்டு வருவார்கள். அந்த அளவுக்கு வித்தியாசமும் அழுத்தமும் கொண்ட கேரக்டர்'' என்று விளக்கம் தந்தார்.
அதன் பிறகு பாமா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ரீபிரியா. அவர் குணமானதும் படப்பிடிப்பு தொடங்கியது. படம் ரிலீசானபோது மகேந்திரன் சொன்னது போலவே நடந்தது. படம் பார்த்த ரசிகர்கள் பாமா கேரக்டர் பற்றியே பேசினார்கள்.
ஸ்ரீபிரியாவை கவர்ந்த இன்னொரு இயக்குனர் டி.என்.பாலு. டைரக்டர் ராமண்ணாவிடம் உதவியாளராக இருந்தபோதே "நான்'', "மூன்று முகம்'' போன்ற வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர். இவர் டைரக்டரானதும் இயக்கிய "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசன் கதாநாயகன். அவருக்கு ஜோடி ஸ்ரீபிரியா.
டி.என்.பாலு பற்றி ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னார்:-
"பாடல் காட்சியின்போது எனக்கு சரியாக வாயசைக்க வராது என்பதை கண்டுபிடித்து திருத்தியவர் இவர்தான். பாட்டு சீனில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருப்பேன். `இப்படிச் செய்தால் நீ பாடுகிற மாதிரி திரையில் எப்படித் தெரியும்? முதலில் அதை சரி பண்ணு' என்றார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டிடம் இருக்கும் திறமையை பட்டியலிட்டு பாராட்டும் குணம் இருந்த அளவுக்கு, குறைகளை பக்குவமாக சொல்லி சரி செய்யும் பண்பும் இவரிடம் இருந்தது. இவரது "ஓடி விளையாடு தாத்தா'' காமெடிப்படம் எனக்கு காமெடியில் ரொம்ப நல்ல பெயர் தேடித் தந்தது. "நல்லதுக்கு காலமில்லை'' படத்திலும், எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தார்.
கமல் நடித்த "சங்கர்லால்'' படத்தை, இவர் இயக்கியபோதுதான் எனக்கும் அவருக்கும் சின்ன பிரச்சினை. படத்தில் கமல் ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்தவர், நான் இரண்டொரு தடவை தேதிகளை மாற்றினேன் என்பதற்காக, உணர்ச்சிவசப்பட்டு கவுன்சிலில் என் மீது புகார் கொடுத்துவிட்டார். பிறகு பிரச்சினை சுமூகமாக தீர்ந்து போயிருந்தாலும், நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.
திடீரென அவர் இறந்தபோது, மனது தாங்காமல் அஞ்சலி செலுத்தப் போனேன். அப்போது என்னை கட்டிக்கொண்டு அழுத அவர் மனைவி, "அய்யோ அது (ஸ்ரீபிரியா) எவ்வளவு நல்ல பொண்ணு. நான் அவசரப்பட்டு புகார் கொடுத்து அது மனதை புண்படுத்தி விட்டேனேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரே!'' என்று அழுதார். ஏற்கனவே சோகத்தில் இருந்த நான், அவங்க அப்படிச் சொன்னதும் உடைந்து கதறிவிட்டேன்.''
இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.
இந்தியில் சஞ்சீவ்குமார்- ஷர்மிளா தாகூர் இணைந்து நடித்த படம் "மாசூன்.'' இந்தப் படத்தில் நடித்த இருவருக்குமே சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை தமிழில் "வசந்தத்தில் ஓர் நாள்'' என்ற தலைப்பில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீபிரியா நடித்து முடித்தபோது கைதட்டி பாராட்டினார்.
"நிஜமாகவே உயரத்தில் மட்டுமல்ல... பண்பிலும் உயர்ந்தவர் அவர்'' என்று திருலோகசந்தரைப் பாராட்டிய ஸ்ரீபிரியா, மேலும்
சொன்னார்:-"ஏவி.எம். ஸ்டூடியோவில் சின்னத்திரை தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தேன். நான் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த இடத்தைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. திடீரென அந்தக் கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து உயரமான மனிதர் ஒருவர் என்னை நோக்கி வந்தார். பார்த்தால் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர்! என்னைப் பார்த்ததும், "என்னம்மா எப்படி இருக்கீங்க?'' என்று பாசத்துடன் விசாரித்தார். என்னைப் பார்த்ததும், வந்த வேலையை கூட தள்ளிவைத்துவிட்டு தேடிவந்து நலம் விசாரிக்கும் அந்த மாதிரியான அன்பை யாரிடம் எதிர்பார்க்க முடியும்?
ஒருமுறை அவர் இயக்கிய, சிவாஜி - கே.ஆர்.விஜயா நடித்த "பாரத விலாஸ்'' படத்தை, டிவி.யில் பார்த்தேன். தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளை அவர் அமைத்திருந்தார். மனம் நெகிழ்ந்துபோய், உடனே அவர் போன் நம்பரை தேடிப்பிடித்து பாராட்டினேன். "படம் இயக்கி இத்தனை வருஷம் கழித்தும் பாராட்டுகிற பண்பு உன்போன்ற சிலருக்கு இருப்பதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "தெய்வமகன்'' போன்ற படங்கள் எப்போதும் சினிமாவில் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்'' என்றார், ஸ்ரீபிரியா.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் தனது தாயின் மடியை தேடி செல்வதால், நாயகன் ஒருவர் வருத்தத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஆனந்த நடிகை. தனது முதல் படத்தில் கிடைத்த வெற்றியால் தொடர்ந்து, பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. பிரகாச நடிகருடன் தொடர்ந்து பல படங்களில் நடித்ததால், இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், நாயகியின் கைவசம் பல படங்களில் இருந்தாலும், அவரது நடிப்பில் சமீபத்தில் இரு படங்கள் ரிலீசாகியது. இதில் நாயகி குறித்து அவருடன் நடித்த லீலை நாயகன் பேட்டி ஒன்றில் கூறும்போது, பொதுவாக நாயகிகள் என்றால், அவர்களது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு நாயகர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த நடிகை, அவரது காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு நேராக அவரது அம்மா இருக்கும் இடத்திற்கு சென்று விடுவாராம்.
அம்மாவின்றி அந்த நடிகை வருவதுமில்லை, போவதுமில்லை. மேலும் படப்பிடிப்பில் நாயகி தன்னிடம் அவ்வளவாக பேசவேயில்லை என்றும் நாயகன் விளையாட்டாக கூறியிருக்கிறாராம்.

சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. இதன் முன்னோட்டம் ஐக்கிய நாடு சபையில் வெளியிடப்படுகிறது.
ஜனவரி 5-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய போராட்டமாக எழுச்சி பெற்றது. எந்த கட்சி சார்பும், அரசியல் கலப்பும் இல்லாமல் நடந்த இந்த போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது.
சந்தோஷ் இயக்கும் இந்த படத்தை அஸ்மிதா புரொடக்ஷன் சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த நிருபாமா, குருசரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வாஷிங்டனை சேர்ந்த ஜெயபால் இணைந்து தயாரித்திருக்கிறார். சு.கா.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் பலர் தொழில் நுட்பபணியில் ஈடுபடுகிறார்கள். ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் முதல் போஸ்டர் வாஷிங்டனில் வெளியிடப்பட்டது.
‘ஜல்லிக்கட்டு’ படத்தின் முன்னோட்டம் நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் இளைஞர் அணி மாநாட்டில் வெளியிடப்படுகிறது. இதில் இயக்குனர் சந்தோஷ், தயாரிப்பாளர் அனுபமா பங்கேற்கிறார்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள விருது பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு விருது கிடைக்கவில்லை, மாறாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு விருது கிடைக்கவில்லை.
தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த படம் மற்றும் நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது.
6 ஆண்டுக்கான மானியம் பெறும் மற்றும் விருது பெறும் படங்களை ஒட்டு மொத்தமாக நேற்று தமிழக அரசு வெளியிட்டது. வழக்கமாக ஒன்றிரண்டு ஆண்டுக்கான விருது மட்டும் நிலுவையில் இருக்கும். ஆனால் 6 ஆண்டுகளுக்கும் சேர்ந்து மொத்ததாக அறிவித்துள்ளது.

இதில் சிறந்தவையாக அறிவிக்கப்பட்ட படங்கள் அந்த கால கட்டத்தில் சிறப்பாக ஓடினாலும் தற்போது அந்த படங்களை ரசிகர் கள் நினைவில் கொள்வது கடினமே. உதாரணத் துக்கு பசங்க படம் 2009-ல் வெளியானது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அதற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மைனா, வாகை சூடவா, வழக்க எண் 18/9, ராமானுஜன், குற்றம் கடிதல், ஆகிய படங்களுக்கும் காலம் கடந்து விருது கிடைத்துள்ளது.
2009-ல் சிறந்த நடிகராக கரண், 2010-ல் விக்ரம், 2011-ல் விமல், 2012-ல் ஜீவா, 2013-ல் ஆர்யா, 2014-ல் சித்தார்த் ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிறந்த முறையில் நடித்து விருது பெற்றாலும் இந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஒருவர் கூட இடம் பெறாதது அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வழக்கமாக இவர்களில் யாராவது ஒரு முன்னணி நடிகருக்கு விருதுகள் கிடைக்கும். ஆனால் 6 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட விருது இல்லை. அதே போல் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகை, குணசித்திர நடிகை உள்ளிட்ட மற்ற விருதுக்கு கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய நடிகர்கள் நடிப்பில் வெளியான பல படங்கள் நடிப்புக்காகவும், கதை அம்சங்களுக்காகவும் பேசப்பட்டன. ஆனால் அந்த படங்களுக்கோ அவர்களுக்கோ விருதுகள் இல்லை.
இதில் அரசியல் காரணங் கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசன் தொடர்ந்து அரசை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். ரஜினி காந்த் அனைவரிடமும் நல்ல நட்பு கொண்டு இருந்தாலும் சமீபத்தில் சிஸ்டம் சரியில்லை என்று பேசியதால் கண்டனத்துக்கு ஆளானார்.

இதுபோல் நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக ஆக்ரோஷமாக வீடியோ வெளியிட்டார். தனது மெர்சல் பட தலைப்பையும் ஜல்லிக்கட்டு வடிவில் வெளியிட்டார். நடிகர் சூர்யா, மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பது நாம்தானே மக்களே என்று கிண்டல் அடித்தார். எனவே தான் இவர்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது 2009 முதல் 2014 வரை 6 ஆண்டுகள் வெளியான படங்களின் அடிப்படையில் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவடைந்துள்ள 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் வந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படவில்லை.
2017-ம் ஆண்டு திரைக்கு வரும் படங்கள் டிசம்பர் வரை கணக்கிடப்படும். எனவே, ஜனவரியில் இந்த 3 ஆண்டுகளில் வெளியான படங்களில் இடம் பெற்ற சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விருது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் அஸ்வின் - சுவாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `திரி' படத்தின் விமர்சனம்.
நாயகன் அஸ்வின் கல்லூரி ஒன்றில் இறுதிஆண்டு படித்து வருகிறார். அஸ்வினின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒழுக்கம் வாழ்க்கைக்கு முக்கியம். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பின்பற்ற வேண்டும் என்பது ஜெயப்பிரகாஷின் கொள்கை. அதன்படியே மகன் அஸ்வின் மற்றும் மகளை வளர்த்திருக்கிறார்.
அஸ்வின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் நாயகியான சுவாதி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். வெகு நாட்களாக இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தாலும், உள்மனதிற்குள் காதலும் இருக்கிறது. ஆனால் அந்த காதலை ஒருவொருக்கொருவர் வெளிப்படுத்தாமல் பழகி வருகின்றனர்.

இந்நிலையில், அஸ்வின் பைக்கில் செல்லும் போது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விடுகிறது. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அர்ஜய் தகாத வார்த்தைகளால் அஸ்வினை திட்ட, அஸ்வின் அவரை அடித்து விடுகிறார். இதையடுத்து அர்ஜயிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து இருவரும் சென்றுவிடுகின்றனர்.
இதையடுத்து தனது இறுதிஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அஸ்வினின் சான்றிதழில் அவரது ஒழுக்கத்திற்கு குறை இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. கல்லூரியில் எந்த பிரச்சனையிலும் சிக்காத அஸ்வின், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் முறையிடுகிறார். அப்போது தான் கல்லூரியின் தலைவரான ஏ.எல்.அழகப்பனின் மகன் தான் அர்ஜய் என்பது தெரிய வருகிறது. அஸ்வினை பழிவாங்குவதற்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த அர்ஜய், அஸ்வினின் அப்பாவுக்கு முக்கியமாக கருதப்படும் ஒழுக்கத்தின் மூலமாக பழிவாங்கி விடுகிறார்.

தனது தந்தைக்கு தெரியாமல் எப்படியாவது இந்த சான்றிதழை மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அதற்காக ஏ.எல்.அழகப்பனை சந்திக்கிறார். அரசியல், கட்டப்பஞ்சாயத்து என பல தொழில்களில் ஈடுபட்டு வரும் அழகப்பன் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில், அவரை சந்திக்க வரும் அஸ்வினை தனது ஆட்களை வைத்து சரமாரியாக அடித்து விடுகிறார்.
இதனால் கோபமடையும் அஸ்வின், இதற்கு காரணமான அர்ஜயை பழிவாங்க முடிவு செய்கிறார். மேலும் தனது சான்றிதழில் தனது ஒழுக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட கரையை துடைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். அழகப்பனின் அரசியல் கனவையும் தகர்க்க முடிவு செய்யும் அஸ்வின் முன்னெடுக்கும் போராட்டமே படத்தின் மீதிக்கதை.

அஸ்வின் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் இளைஞனாகவும், தந்தைக்கு பாத்திரமான மகனாகவும் அவரது நடிப்பு சிறப்பு. நட்பு, காதல், சண்டை என அனைத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. சுவாதி ஒரு செய்தியாளராக, எதற்கும் பயப்படாத ஒரு இளம் பெண்ணாக துடிப்புடன் நடித்திருக்கிறார். அவருக்கே உண்டான குறும்புடனும், ரசிக்க வைக்கும் சிரிப்புடனும் ரசிகர்களை கவர்கிறார்.
அர்ஜய் குறைவான காட்சிகளிலே வந்தாலும், தன்னை தாக்கிய ஒருவனை பழிவாங்கும் வில்லன் கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு ஆசிரியருக்குண்டான மரியாதையுடனும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்திலும் அவரது நடிப்பு சிறப்பு. ஒரு ரவுடி, அரசியல்வாதிக்கு உண்டான கெத்துடன் ஏ.எல்.அழகப்பன் கதைக்கு ஏற்ப முக்கிய காட்சியில் வந்து செல்கிறார். மற்றபடி கருணாகரன், டேனியல், செண்ட்ராயன், அனுபமா குமார் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

அப்பா - மகன் இருவருக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை சிறப்பாக சொல்லியிருக்கும் எஸ்.அசோக் அமிர்தராஜுக்கு பாராட்டுக்கள். ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து வரும் ஒரு இளைஞன் அவனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை சிறப்பாக கூறியிருக்கிறார். கல்வி முக்கியம், கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவற்றை நல்ல உதாரணத்துடன் எடுத்துரைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் விலைபோகும் பொருளாக கல்வி மாறிவருவதாகவும், கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு யாரிடம் இருக்கக் கூடாதோ, அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். எனினும் படத்தின் திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அதேநேரத்தில் படத்தில் ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு இருக்கும் தொடர்பு, ரசிகர்கள் மத்தியில் ஏற்கும்படியாக இல்லை.
அஜிஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `திரி' கல்வியின் குறி.

அன்பழகன் இயக்கத்தில் சந்திரன் - ஆனந்தி - சினிஜெயந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் `ரூபாய்' படத்தின் விமர்சனம்.
நாயகன் சந்திரன் மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன் தேனியில் இருந்து சென்னைக்கு லாரியில் பூ லோடு ஏற்றி வருகின்றனர். லாரிக்கு தவணை கட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதால், தேனி திரும்பும் வேளையில் ஏதாவது லோடு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வரும் சினிஜெயந்த், வீடு மாற்றிப் போவதற்காக அங்குள்ள லாரி ஓட்டுநர்களிடம் சவாரிக்காக பேசி வருகிறார். அவர்கள் அனைவரும் அதிக தொகை கேட்க, குறைவான தொகைக்கு வருவதாக சந்திரன் கூற அவரை கூட்டிச் செல்கிறார்.
அந்த பகுதிக்கு சென்ற பிறகு தான் சினிஜெயந்த் குறித்து தெரிய வருகிறது. சினிஜெயந்த், அவரது பகுதியில் இருக்கும் அனைவரிடமும் பணம் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்து வருகிறார். சினிஜெயந்த்தை பார்த்தாலே பணம் கேட்பார் என்று அனைவரும் பறந்து விடுகிறார்கள். இந்நிலையில், சினிஜெயந்துக்கு பணம் கொடுப்பதும், உண்டியலில் பணம் போடுவதும் ஒன்று தான் என்னும் அளவுக்கு அவரைப் பற்றி அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ஆனந்தியை பார்க்கும் சந்திரனுக்கு முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் வந்துவிடுகிறது.

இதைகேட்ட கிஷோர், சந்திரனிடம் இந்த சவாரி வேண்டாம், திரும்பிப் போகலாம் என்று கூறுகிறார். ஆனால், ஆனந்தி மீதுள்ள காதலால் கிஷோரை சமாளித்து கூட்டிச் செல்கிறார். மறுபுறத்தில் ஹரிஷ் உத்தமன், வங்கி ஒன்றுக்கு, கீழே வாடகைக்கு வீடு எடுத்து, அந்த வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார். அவரை போலீசார் துரத்திச் செல்வதால், அந்த பணத்தை சந்திரனின் லாரியில் வீசிவிட்டு தப்பித்துச் செல்கிறார்.
இதனிடையே வெகுநேரமாகியும், சினிஜெயந்துக்கு வீடு கிடைக்காததால், கோபமடையும் கிஷோர், சினிஜெயந்திடம் சண்டை பிடிக்கிறார். அவர்களது சண்டையில், லாரியில் இருக்கும் பொருட்களை இருவரும் தூக்கி வீசுகின்றனர். அப்போது பணம் இருக்கும் அந்த பையையும் தூக்கி வீச, பணம் வெளியே வருகிறது. அவ்வுளவு பணத்தை பார்த்த சினிஜெயந்த்துக்கு அதிர்ச்சியில் இதயமே நின்று விடுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அனைவரும் ஒன்றாகி விடுகின்றனர். மேலும் அந்த பணத்தை ஜாலியாக செலவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பணத்தை தேடி செல்லும் ஹரிஷ் உத்தமன் அதற்காக, பல பேரை கொலையும் செய்கிறார். இந்நிலையில், ஹரிஷ் உத்தமனிடமிருந்து, சந்திரன், கிஷோர் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பித்தார்களா? சந்திரன், ஆனந்தியிடம் தனது காதலை வெளிப்படுத்தினாரா? சந்திரனின் காதலுக்கு சினிஜெயந்த் பச்சை கொடி காட்டினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
லாரி ஓட்டுநராக சந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், காதல் என்ற பெயரில் எல்லா நேரத்திலும் சிரித்துக் கொண்டு சமாளிப்பது ரசிகர்களுக்கு ஒருவித முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமான நேரத்திலும் காதல் என்ற பெயரில் அவர் செய்யும் காதல் கடுப்பை கிளப்பும்படி இருக்கிறது.

கயல் ஆனந்தி இதற்கு முன்பு நடித்த படங்களைப் போல இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மேக்கப் ஏதுமின்றி நடித்திருப்பது சிறப்புக்குரியது. பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமால் விலகியிருந்த சினிஜெயந்த், இந்த படத்தின் மூலம் ரிஎன்ட்ரி ஆகியிருக்கிறார். அவரது பாணியில் கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருப்பது சிறப்பு.
குறைவான காட்சிகளில் வந்திருந்தாலும் ஹரீஷ் உத்தமன் மிரட்டியிருக்கிறார். அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சந்திரனின் நண்பனாக வரும் கிஷோர் ரவிச்சந்திரனின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

சாட்டை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வெற்றி பெற்ற இயக்குநர் அன்பழகன், இந்த படத்தில் அந்த வெற்றி என்னும் கனியை பறிக்க தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். பணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாதது. அதற்கான போராட்டத்தில், ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகள், அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதை ஒரு காதலுடன் கூறியிருக்கிறார். இதில் காதலுக்கான திரைக்தையை அமைப்பதில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். வி.இளையராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது.
மொத்தத்தில் `ரூபாய்' கொஞ்சமாவது கொடுத்திருக்கலாம்.

லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ்பாடல்கள் பாடப்பட்டதால் வட இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
லண்டன்:
லண்டனில் உள்ள வெம்ப்லே பகுதியில் கடந்த 8-ஆம் தேதி, தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க தமிழ்பாடல்கள் பாடப்படும் இந்நிகழ்ச்சிக்கு "நேற்று இன்று நாளை" என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்பாடல்கள் மட்டுமே பாடப்படும் என்பதை அறியாத பல வட இந்தியர்களும் ஆர்வத்தோடு நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

நிகழ்ச்சி முழுவதும், ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியதால், வட இந்தியர்கள் கடுப்பாகி பாதியிலேயே வெளியேறினர். இதுதொடர்பாக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுக வலைதளங்களில் வடஇந்திய ரசிகர்கள் தங்களது அதிருப்தியை பதிவுசெய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி டிக்கெட் கட்டணத்தையும் திருப்பியளிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஹ்மானுக்கு ஆதரவாகவும், அவரது ரசிகர்கள் தங்களது கருத்துகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி கமல் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விஜய் டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
அதில், கமலை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த கமல் தனக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டு முன்பு எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர். கமல் வீட்டை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டம் காரண மாக கமல் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கு தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் உள்ளனர்.

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை அங்கமாலி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மேலும் ஒரு நாள் போலீஸ் காவலை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கடந்த 10-ந்தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
திலீப்பை போலீ சார் உடனடியாக அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். திலீப்புக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் அளிக்க வேண்டுமென போலீசார் அங்கமாலி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் 2 நாள் மட்டும் திலீப்பை விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். திலீப்புக்கு ஜாமீன் கேட்டு போடப்பட்ட மனுவையும் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.

போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டதும் திலீப்பை போலீசார் நேற்று முன்தினம் திருச்சூரில் உள்ள ஜாய்ஸ் பேலஸ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இங்குதான் கடத்தலுக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்பட்டது. அங்கு திலீப் சென்றது, அவரை சந்தித்தவர்கள் குறித்து சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டன.
அருகில் உள்ள இன்னொரு ஓட்டல் மற்றும் டென்னிஸ் அகாடமிக்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்குள்ள ஊழியர்களிடம் திலீப் குறித்த சாட்சியங்களை சேகரித்தனர். டென்னிஸ் அகாடமியில் எடுக்கப்பட்ட செல்பிமூலம்தான் பல்சர் சுனில் - திலீப் தொடர்பை போலீசார் அம்பலப்படுத்தினர். 2 நாட்களும் பகலில் பல்வேறு இடங்களுக்கு திலீப்பை அழைத்துச் சென்று சாட்சியங்களை சேகரித்த போலீசார் இரவில் விசாரணை நடத்தினர்.
இன்று காலை 11 மணியுடன் திலீப்பின் 2 நாள் போலீஸ் காவல் முடிவடைந்தது. எனவே ஆலுவா போலீசார் இன்று காலை அங்கமாலி கோர்ட்டில் திலீப்பை ஆஜர்படுத்தினர்.

அப்போது திலீப்புக்கு ஜாமீன் வழங்கக்கேட்டு அவரது வக்கீல் ராம்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திலீப்புக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணை முடிவடையாததால் போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செயயப்பட்டது. இதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.
நடிகர் திலீப்பை மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரித்து கொள்ளலாம். நாளை மாலை 5 மணிக்கு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டார்.
திலீப்புக்கு போலீஸ் காவல் அளிக்கப்பட்டதால் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. நாளை மீண்டும் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் போது மீண்டும் அவருக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய திலீப்பின் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.

போலீஸ் காவல் நீட்டிக் கப்பட்டதால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்பை போலீசார் உடனடியாக ஆலுவா போலீஸ் கிளப்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் மீண்டும் திருச்சூர் மற்றும் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிகிறது.
திலீப்பின் மானேஜர் அப்புண்ணிக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அவரை போலீசில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் கூறி இருந்தனர்.
ஆனால் அவர், தலைமறைவாகிவிட்டார். அவரைகண்டுபிடித்து கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பென்னி தாமஸ் இயக்கத்தில் பிரஜின் - கலா கல்யாணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `எங்கேயும் நான் இருப்பேன்' படத்தின் விமர்சனம்.
தாய், தந்தையை இழந்த பிரஜின் மற்றும் அவரது நண்பர் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். பிரஜின் வளையல் உள்ளிட்ட பெண்கள் விரும்பும் அழகு சாதனப் பொருட்களை விற்று வருகிறார். அவரது நண்பர் பன்றி பண்ணை ஒன்றில் வேலை செய்து வருகிறார். தாய் மீது அதீத அன்பு வைத்திருந்த பிரஜினின் நண்பனுக்கு, தனது தாய் தன்னுடன் வந்து பேசுவது போன்ற ஒரு மாயை தோன்றும்.
பிரஜினின் அன்பால் பின்னாளில் தனது தாயின் நினைவின்றி, மாயையை மறந்து வாழ்ந்து வருகிறான். இதில் பிரஜின், நாயகியான கலா கல்யாணியை காதலித்து வருகிறார். கல்யாணியும், பிரஜினை காதலிக்கிறாள். கல்யாணிக்கு நான்கு அண்ணன்கள் உள்ளனர். கல்யாணியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரஜினை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

இதனிடையே, பிரஜின் - கல்யாணி இருவரும் ஊர் சுற்றிவருவதை பார்த்த, கல்யாணியின் அண்ணன்களுக்கு கோபம் வர, கல்யாணி முன்பாகவே பிரஜினை அடித்து தூக்கில் தொங்க விட்டுவிடுகின்றனர். மேலும் கொலை பழியை பிரஜினின் நண்பன் மீது சுமத்திவிடுகின்றனர். உண்மையை கல்யாணி வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கூறிவிடுகின்றனர்.
இவ்வாறாக பிரஜினை இழந்த அவரது நண்பன், தினசரி வாழ்க்கையை கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறான். இந்நிலையில், அவனது அம்மா பேசியது போல, பிரஜினும் மாயை தோற்றத்தில் அவனிடம் பேசுவது போல அவனுக்கு தோன்றுகிறது. அவனும் பிரஜினுடன் பேச, கல்யாணி தன்னிடம் பேசாமல் இருப்பதாக பிரஜின் கூறுகிறார்.

இதையடுத்து, பிரஜின், கல்யாணியை அழைப்பதாக பிரஜினின் நண்பன் கல்யாணியிடம் வந்து கூற, செய்வதறியாது விழிக்கும் கல்யாணி என்ன செய்தாள்? பிரஜினை கொன்றது அவளது அண்ணன் தான் என்ற உண்மையை ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தினாளா? பிரஜினின் நண்பன் மீதான பழிக்கு விடை கிடைத்ததா? கல்யாணியின் அண்ணன்கனை பிரஜினின் நண்பன் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல் செய்யும் கிராமத்து இளைஞனாக பிரஜின் சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய படங்களை போல இப்படத்திலும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. கலா கல்யாணி கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரஜினின் நண்பன், கல்யாணியின் அண்ணன்கள் என அனைவரும் கதைக்கு ஏற்ப நடித்திருப்பது சிறப்பு.

புதுமையான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் பென்னி தாமஸின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு வித்தியாசமான கதையை, கிராமத்து கதைக்களத்தில் சிறப்பாக இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். குறிப்பாக கல்யாணியின் அண்ணன்களின் கதாபாத்திரங்கள், திடீர் திடீரென மாறுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
அப்சல் யூசுப், இ.எஸ்.ராமின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. சாலியின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `எங்கேயும் நான் இருப்பேன்' வேகம் குறைவுதான்.