என் மலர்
கொலை மிரட்டலை தொடர்ந்து சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
தமிழின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தந்தையை போலவே, தமிழ் மீது அதீத ஈடுபாடு உடைய திவ்யா, சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச சிறப்பு மருத்துவ நேர்க்காணல் ஒன்றை நடத்தியிருந்தார்.
கடந்த வாரம் சில வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே.

இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
"அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும், நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் திவ்யா எழுதியிருக்கிறார்".

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான `வனமகன்' ஜி.எஸ்.டி பிரச்சனையால் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டாலும், தற்போது ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

`வனமகன்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்' படத்தில் நடித்து வருகிறார். ‘மிருதன்’ படத்திற்கு பிறகு சக்தி சவுந்தர் ராஜன் - ஜெயம் ரவி - டி.இமான் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக `ஒருநாள் கூத்து' பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ்வும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நடிகர்கள் நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
தெலுங்கு பட உலகில் போதை பொருட்கள் புழக்கம் கணிசமாக இருப்பதாக புகார்கள் வந்தன. நடிகர்-நடிகைகள் பலருக்கு போதை பழக்கம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சிகரெட், ஊசி, சுவாசித்தல் போன்றவற்றின் மூலமாக ‘கொக்கைன்’ உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின் என்ற போதை பொருள் கடத்தல்காரரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர்-நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து பியூஸை கைது செய்து அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் போதைபொருள் சப்ளை செய்யப்பட்ட நடிகர்-நடிகைகள் உள்பட 12 பேரை பற்றிய விவரங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் பெயர்களை போலீசார் வெளியிடவில்லை.
ஆனாலும் அதில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு, கலை இயக்குனர் சின்னா உள்பட திரைப்படத்துறையைச் சேர்ந்த 12 பெயர்கள் இருப்பதாக தெலுங்கு டெலிவிஷன் சேனல்கள் நேற்று படத்துடன் செய்தி வெளியிட்டன.

இந்த 12 பேருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பது தெரியவரும். தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கு பட உலகில் போதை பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தில் இருக்கும் நடிகர்-நடிகைகள் அதில் இருந்து மீள வேண்டும். குற்றம் செய்தவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகர் நவ்தீப் கூறும்போது, “எனக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. நான் நேரில் எனது விளக்கத்தை அளிப்பேன். எனக்கு போதைப் பழக்கம் கிடையாது. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பும் இல்லை. நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிப்பேன்” என்றார்.

தமிழில் நிவின் பாலி நடித்துள்ள `ரிச்சி' ரிலீசாக இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க நிவின் பாலி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
நிவின் பாலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த `சகாவு' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, நிவின் தற்போது `ரிச்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், மலையாள சினிமா உலகின் பிரபல ஒளிப்பதிவாளரான ஜோமோன் டி ஜான் இயக்கத்தில் 'கைரளி' என்ற பிரம்மாண்டமான படத்தில் நிவின் பாலி நடிக்க இருக்கிறார்.
'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்', 'திரா' போன்ற மலையாள படங்களுக்கும், பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய 'கோல்மால் 4' கும் ஒளிப்பதிவு செய்து, இந்திய சினிமாவில் முக்கியமானராக விளங்கியவர் ஜோமோன் T ஜான். இவரது இயக்கத்தில் இவரது முதல் படமான 'கைரளி' 1979'-ல் மர்மமான முறையில் மாயமாகிய 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் 'MV கைரளி' பற்றிய கதையாகும்.

இப்படத்திற்கு தேசிய விருது இயக்குநரும், நிவின் பாலியை வைத்து `சகாவு' என்ற படத்தை இயக்கியவருமான சித்தார்தா சிவா 'கைரளி' படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளார். இப்படத்தை நடிகர் நிவின் பாலியின் "பாலி Jr பிக்ச்சர்ஸ்" மற்றும் "ரியல் லைப் ஒர்க்ஸ்" நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
நிவின் பாலியின் 'தட்டத்தின் மறயத்து', 'ஒரு வடக்கன் செல்பி', ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' உள்ளிட்ட படங்களுக்கு ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கேரளா, கோவா, டெல்லி, குவைத், ஜெர்மனி மற்றும் ஜிபோட்டியிலும் நடக்கவுள்ளது.
மேலும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டிராஜா தயாரிப்பில் `புரொடக்ஷன் நம்பர் 3' என்ற தலைப்பில் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவும் நிவின் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை `ரெமோ' படத்தின் ப்ரோமோ பாடலை இயக்கிய பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.

சங்கவி,பவர்ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு, கஞ்சாகருப்பு ஆகியோர் நடிக்கும் கலந்த பேய் படத்திற்கு நான் யார் தெரியுமா என்று பெயரிட்டுள்ளனர்
பவர்ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு, கஞ்சாகருப்பு மூவருடன் முக்கியவேடத்தில் சங்கவி நடிக்கும் படத்திற்கு `நான் யார் தெரியுமா' என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இதில் ரோஷன், சேஷு, அர்ஷிதா, மெர்க்குரிசத்யா, கே.பி.சங்கர், ஜீவிதா, சினேகாராஜன், கே.பி.செந்தில்குமார், போண்டாமணி, திருலோக், வி.ராஜா, ஆர்.ஸ்டாலின், கிங்காங், ரமணாதேவி, எம்.ஆர்.ஜி.ராஜேஷ்வரி, மயிலைதேவி, வீரமணி, காதர்உசைன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சொற்கோ பாடல் எழுத ரஷாந்த் இசைமீட்ட சந்திரன்சாமி ஒளியூட்ட கிளாமர் சினிகைடு நிறுவனம் தயாரிக்கிறது.
காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வரும் மூவர் வாழ்விலும் ஒரு பெண் பேய் குறுக்கிடுகிறது அந்த பேய் இவர்களை போலீஸ் அதிகாரிகளாக்க மூன்று நிபந்தனைகளை போடுகிறது. நிபந்தனைகளை சவாலாக ஏற்றுக்கொண்டு போராடும் அவர்களின் அவஸ்தைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் `நான் யார் தெரியுமா' என்கிறார் இதில் இயக்குனராக அறிமுகமாகும் நவீன்ராஜ்.

நடிகர்-நடிகைகளுக்கு அரசு விருதுகள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை உள்ள தமிழ் திரைப்படங்களுக்கான மானிய தொகை வழங்குதல் மற்றும் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசால் வழங்கும் மாநில அரசு விருதுகள் வழங்கும் அறிவிப்பானது தமிழ் திரையுலகினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் எல்.சுரேஷ், தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்க உறுப்பினர் ஐசரி கணேசன் உள்பட சங்க நிர்வாகிகள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் மற்றும் விருதுகள் வழங்க வேண்டும் என்பது திரைத்துறையினரின் மிகப்பெரிய கோரிக்கையாக இருந்தது. அதனை பரிசீலித்து தற்போது 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள திரைப்படங்களுக்கு மானிய தொகை வழங்கப்படும் என்றும் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
திரையுலகினரை பெருமையடைய செய்யும் மாநில அரசு விருதுகள் வழங்கும் அறிவிப்பானது தமிழ் திரையுலகினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல் - அமைச்சருக்கும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்”.

ஏ.எம்.பாஸ்கர் இயக்கத்தில் கீர்த்திதரன் - சுரேகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நான் யாரென்று நீ சொல்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.மணிமேகலை தயாரிக்கும் படம் ‘நான் யாரென்று நீ சொல்’.
இந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். நாகேஷின் பேரனும் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சோனா, ஆனந்த்பாபு, பாண்டு, கராத்தேராஜா, மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
எடிட்டிங் - பிரேம், பாடல்கள் - இளையகம்பன், ஸ்டண்ட் - பம்மல் ரவி, இசை - ஜான் பீட்டர், ஒளிப்பதிவு - பாஸ்கர், நடனம் - ரவிதேவ், தயாரிப்பு - ஆர்.மணிமேகலை, எழுத்து, இயக்கம் - ஏ.எம்.பாஸ்கர். இவர் லட்சுமிராயை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.

“சோனாவின் மகள் சுதா ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் பேக்கரி தொழில் செய்யும் கீர்த்திதரன் இருவரும் அவளை காதலிக்க முயற்சிக்கிறார்கள். சோனா கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார் என்கிற கதை முடிச்சு தான் ‘நான் யாரென்று நீ சொல்’ படத்தின் திரைக்கதை. கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்றார்.

அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசும் 'ஒரு குப்பை கதை'என்ற படத்தினை பார்த்த உதயநிதி ஸ்டாலின் ,படம் தனக்கு பிடித்ததாகவும் தானே வெளியிடுவதாகவும் சொல்ல தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும் படம் `ஒரு குப்பை கதை’, ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
முதல் முறையாக ஒரு குப்பை கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் நடன இயக்குநர் தினேஷ் . நல்ல கதைக்கு `ஒரு குப்பை கதை’ எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் . ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன் இந்த தலைப்பே சரி என சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர்.

படம் குறித்து தயாரிப்பாளர் அஸ்லமிடம் கேட்டபோது, படத்தை உதயநிதி ஸ்டாலினிடம் காண்பித்தோம், படம் அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசுகிறது. இக்காலகட்டத்தில் இது போன்ற படம் அவசியம் எனக் குறிப்பிட்டவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷ் -க்குள் ஒரு மிகச் சிறந்த நடிகன் ஒளிந்திருப்பதை, தான் படம் பார்த்தபோது உணர்ந்ததாக மனம் திறந்து பாராட்டினார். அவரே தன்னுடைய நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் 'ஒரு குப்பை கதை' படத்தை வெளியிட சம்மதமும் தெரிவித்துள்ளார்.
மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவிலும், நா.முத்துக்குமார் பாடல் வரிகளிலும், ஜோஸ்வா ஸ்ரீதர் இசையிலும், கோபிகிருஷ்ணா எடிட்டிங்கிலும் உருவான
'ஒரு குப்பை கதை' விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடித்துள்ளார். சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் என்ற இரு புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள். யோகி பாபு, ஜார்ஜ் படத்தின் மிக முக்கியமான திருப்பமாக வருகிறார்கள். ஆதிரா அம்மாவாக நடித்துள்ளார்.

ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா - ரெஜினா - ஐஸ்வர்யா ராஜேஷ் - பிரணிதா - அதிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் விமர்சனம்.
அதர்வாவின் அப்பா தீவிர ஜெமினிகணேஷன் ரசிகர் என்பதால், தனது மகனுக்கு ஜெமினிகணேஷன் என்றே பெயர் வைக்கிறார். அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மதுரையில் இருக்கும் ரெஜினாவிடம் தனது திருமணவிழா அழைப்பிதழை கொடுப்பதற்காக அதர்வா மதுரைக்கு செல்கிறார். ரெஜினினாவின் வீட்டிற்கு சென்ற அதர்வாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரெஜினா அங்கு இல்லை. ரெஜினாவின் வீடு யாரும் பயன்படுத்தாததால் குப்பையாக கிடக்கிறது.
இதையடுத்து அந்த வீட்டின் மாடியில் இருக்கும் சூரியிடம், ரெஜினா குறித்து அதர்வா கேட்கிறார். சூரி ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாக அங்கு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் அதர்வாவை வைத்து அன்றைய நாளை ஓட்டி விடலாம் என்று திட்டம் போடும் சூரி, அதர்வாவை ரெஜினா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

போகும் வழியில், ரெஜினாவை எப்படி தெரியும் என்று சூரி கேட்க, ரெஜினா தனது முன்னாள் காதலி என்று அதர்வா கூறுகிறார். மேலும் ரெஜினாவுடனான காதல் குறித்த முழு விவரத்தையும் சொல்கிறார். இந்நிலையில், தனது மற்ற காதல் பற்றியும், காதலிகள் பற்றியும் கூற, தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பாகும் சூரி என்ன செய்கிறார்? அதர்வா தனது முன்னாள் காதலிகளான ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டாரை சந்தித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
அதர்வா வழக்கமான, தனது ஈர்ப்பான நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். அனைத்து நடிகைகளுமே அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறார்கள். யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறது. காதல் காட்சிகளிலும், சூரியுடனான காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அதர்வா முதன்முறையாக காமெடி கலந்த கதையை முயற்சி செய்திருக்கிறார்.

ரெஜினா தமிழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பேச்சும், செய்கைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. பிரணிதாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதீதி - அதர்வாவுடனான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. சூரி காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்றபடி மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, டி.சிவா உள்ளிட்டோரும் கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
அதர்வாவின் தந்தை ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால் தான் அதர்வாவுக்கு ஜெமினிகணேசன் என்று பெயர் வைத்தார். ஆனால் அந்த பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் படி நாயகனின் காதல் இருக்கிறதோ என்று ரசிகர்கள் யோசித்தாலும், திரைக்கதையின் போக்கு ஏற்ப ஓடம் இளவரசு அவ்வாறு இயக்கியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதி முழுவதும் சிரிப்பு மழை பொழிகிறது.
டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இமான் ஆட்டம்போட வைத்திருக்கிறார். ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.
மொத்தத்தில் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' காதல் கலகலப்பு

மன அழுத்தத்தை குறைக்க சிரித்து பேசவேண்டும் என்று புத்தாக்க பயிற்சி முகாமில் நடிகர் தாமு பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆற்றல் ஊட்டும் முகாம் என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி முகாம் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, சாம்பசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மன அழுத்தமின்றி பணிபுரியவேண்டும். அதற்கு அவர்கள் மாணவர்களுடன் இன்முகத்துடன் பழகவேண்டும். மன அழுத்தத்தை போக்க சிரித்து பேசவேண்டும். அடிக்கடி கைத்தட்டவேண்டும். ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும்விதம் முக்கியமானது.

புத்தாக்க பயிற்சி முகாமில் நடிகர் தாமு பேசியபோது எடுத்த படம்.
மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து ஆர்வத்துடன் பாடத்தை கவனிக்கும் வகையில் கற்பிக்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் தாங்கள் கடந்துவந்த பாதையை நினைத்து பார்க்கவேண்டும். அப்போதுதான் மற்ற ஆசிரியர்களின் நிலையை புரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, சாம்பசிவம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ஜீவா இந்த விருது உற்சாகமும் பெருமையும் அளிக்கிறது என்றார்
ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம். கிடைக்கிற விருது அங்கீகாரம். கலைஞர்களை உற்சாக மனநிலைக்கு இட்டுச்செல்லும். அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும். அவ்வகையில் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம். இப்படி பேசப்படும் வகையில் அந்தப் படத்தை கவுதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார். அந்தப் படத்துக்காக என்னைச் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உற்சாகமும் பெருமையும் அளிக்கும் வகையிலான இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்து பரிந்துரை செய்த விருதுக்குழுவினருக்கும் என் நன்றி. இந்த நேரத்தில் என்னுடன் அந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அது மட்டுமல்ல 2009 முதல் 2014 வரையிலான படங்களுக்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
2011ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது பெற்றுள்ள நடிகர் விமல் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார், மேலும் தான் இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தார்
2009 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுபெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது,

“2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக `பசங்க' படமும்,2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக`களவாணி' படமும்,2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன. மேலும் 2014ஆம் வருடத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருது `மஞ்சப்பை' பட இயக்குனர் ராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது, எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த நான்கு படங்களிலும் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமையும் அடைகிறேன்.
மேலும் `வாகை சூடவா' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியையும் எனது பொறுப்பையும் இன்னும் அதிகரித்துள்ளது. இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஊக்கத்தை இந்த விருது எனக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முழு காரணமான எனது இயக்குனர்களான பாண்டிராஜ்,சற்குணம் மற்றும் ராகவன் ஆகியோருக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் விருதுபெற்ற சக கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
எனக்கு ஆரம்பகாலம் தொட்டு ஆதரவு அளித்துவரும் பத்திரிக்கை, ஊடகங்களுக்கும் எனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.