என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் வெளியாகியுள்ள `பண்டிகை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ஆரா சினிமாஸ் `பண்டிகை' படத்தை நிஜ பண்டிகையாகவே கொண்டாடி வருகிறது.
    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை என்றாலே பல புதிய படங்கள் திரையில் ரிலீசாகி வருகின்றன. ஆனால் ஒருசில படங்களே மக்களிடையே வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் வெளியான படங்களில் ஆரா சினிமாஸ் வழங்கி `பண்டிகை' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    குறிப்பாக இளைஞர்கள் விரும்பி பார்க்கும் படமாக பண்டிகை உருவெடுத்துள்ளது. ஃபெரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் கிருஷ்ணா - ஆனந்தி - சரவணன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டீ டைம் டாக்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஃபெரோஸின் மனைவியும், நடிகையுமான விஜயலட்சுமி தயாரித்துள்ளார்.



    `இருமுகன்', `தேவி', `சைத்தான்', ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் `பண்டிகை' படத்தை நிஜ பண்டிகையாகவே ஆரா சினிமாஸ் கொண்டாடி வருகிறது.  மேலும் தங்களது வெற்றி பயணத்தில் இன்னொரு மகுடமாக `பண்டிகை' படத்தையும் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது,

    " திரையுலகம் தற்போது மிகவும் சவாலான சோதனைகளை சந்தித்துக் வருகிறது. இந்த நேரத்தில் `பண்டிகை' படத்தின் வெற்றி ஒரு ஒளிக்கீற்றாக வந்து இருக்கிறது. இதுவரை கண்டிராத ஒரு கதைகளத்தில் மிக அருமையாக கதையை சொன்ன இயக்குனர் ஃபெரோஸ் தமிழ் திரை உலகின் மிக சிறந்த எதிர்கால இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை. அவருடைய கடின உழைப்பும், திறமையும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளம்.



    தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் படம் 225 திரையரங்குகளில் ரிலீசாகியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக காட்சிகளின் எண்ணிக்கை மேலும் கூட இருக்கிறது. இந்த வெற்றியை ரசிகர்களின் நாடி துடிப்பை உள்ளங்கை நெல்லி கனியாய் அறிந்து வைத்து இருக்கும் இன்றைய இளம் இயக்குனர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எங்களது நிறுவனமான ஆரா சினிமாஸ் தமிழ் திரையுலகம் பெருமை கொள்ளும் தரமான படங்களை தொடர்ந்து வழங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்"
     இவ்வாறு கூறினார்.
    பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். "வைதேகி காத்திருந்தாள்'', "அன்புள்ள ரஜினிகாந்த்'' உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.
    பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். "வைதேகி காத்திருந்தாள்'', "அன்புள்ள ரஜினிகாந்த்'' உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.

    திரை உலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர்

    "தூயவன்.''இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாகு ஒலியுல்லா, அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் "பி.ஏ'' பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றியவர்.

    தாயார் பெயர் ஜொகரான். ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில், தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.

    தூயவன், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார், தூயவன். நாகப்பட்டினம், இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால், தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

    "தினத்தந்தி'', "ராணி'', "ஆனந்தவிகடன்'', "தினமணி கதிர்'' உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.

    1967-ம் ஆண்டில், "ஆனந்த விகடன்'' அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியது.

    "தூயவன்'' எழுதிய "உயர்ந்த பீடம்'' என்ற கதை, 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக் கதையாகும். இதனால், தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.

    அது, டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.

    தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கேட்டார்.

    உடனே மேஜர், "நீங்கள் எல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்! ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும்! என்ன நடை... என்ன எழுத்து!'' என்றார்.

    அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், "நீங்கள் பாராட்டுகிற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்!'' என்று நிதானமாகக் கூறினார்.

    மலைத்துப்போய் விட்டார், மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகம் எழுதும் வாய்ப்பை அளித்தார்.

    மேஜருக்காக "தீர்ப்பு'' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தூயவன்.

    இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் "பால்குடம்.'' இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.

    "தீர்ப்பு'' நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு, எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

    "நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல், மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது, ஆச்சரியமான விஷயம்'' என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

    "பால்குடம்'' நாடகமும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.

    இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக - எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.

    "தினமணி கதிர்'' வார இதழின் ஆசிரியராக "சாவி'' இருந்த நேரம் அது. "தூயவன்'' எழுதிய "சிவப்பு ரோஜா'' என்ற கதை, பரிசுக் கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில், "செல்வி'' என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.

    "செல்வி'' என்ற புனைப்பெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிந்தது.

    உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று, பெண்ணைப் பார்த்தார்கள்.

    இரு தரப்பினருக்கும் பிடித்துப்போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும், ஜெய்புன்னிசாவுக்கும் 27-9-1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன் - புஷ்பலதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.

    திருமணம் நடந்தவேளை, பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன.

    தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது என்று கமல் கூறிய கருத்திற்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார். அதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தனியார் தொலைகாட்சி நடத்தும் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலும் நிகழ்ச்சி தொடர்ந்து பிரபலமாக திரையிடப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி குறித்த விமரசனங்கள் காவல் துறையில் புகார் அளிப்பது வரை சென்றதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மற்றும் நிகழ்ச்சி சார்ந்து எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனிடையே செய்தியாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழக அரிசியலின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது எனக் குற்றஞ்சாட்டினர். கமல்ஹாசன் குற்றச்சாட்டிற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ‘‘மக்கள் மனதில் உள்ளதையே நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்’’ என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.



    கமல்ஹாசன் கருத்தை வரவேற்கும் விதமாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு,
    நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே.

    ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..’’ என்று  பதிவிட்டுள்ளார்.
    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் ஆதாரத்தை திரட்டுவதற்காக திலீப்பை விட்டு பிடித்தோம் என்று டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா பேட்டியில் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள போலீஸ் டி.ஜி.பி. யாக லோக்நாத் பெக்ரா பதவி ஏற்றபிறகு தான் பாவனா கடத்தல் வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. நடிகர் திலீப்பும் போலீஸ் வலையில் சிக்கினார்.

    இந்த வழக்கில் போலீசார் நடத்தி வரும் விசாரணை தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறியதாவது:-

    நடிகை கடத்தல் வழக்கில் முதல்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகள் யார் என்பதும், அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியும் என்பதை கண்டறிந்தோம். ஆனால் போலீஸ் எப்போதும் குற்றவாளிகளை விட்டுதான் பிடிக்கும். எந்த வழக்கிலும் ஆதாரம் என்பது மிகவும் முக்கியம். இந்த வழக்கிலும் வலுவான ஆதாரங்களை திரட்டுவதற்காக நாங்கள் தீவிர விசாரணை நடத்தினோம். ஆதாரங்கள் சிக்கிய பிறகு குற்றவாளியை கைது செய்தோம்.


    இந்த வழக்கில் போலீசார் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். ஓரிருநாளில் மற்ற குற்றவாளிகளும் போலீஸ் பிடியில் சிக்குவார்கள். இந்த வழக்கு தொடர்பான எல்லா தகவல்களையும் இப்போதே தெரிவிக்கமுடியாது. தேவை இல்லாத தகவல்களை வெளியிட முடியாது. அதே சமயம் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்த வழக்கில் முக்கிய கட்டத்தை நெருங்கிவிட்டதால் எங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் கோர்ட்டில் ஒப்படைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநில கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் போலீசாரின் விசாரணையை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது கேரள போலீசார் நடிகை கடத்தல் வழக்கில் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். போலீஸ் பிடியில் இருந்து எந்த குற்றவாளியும் தப்ப முடியாது. போலீசாரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்றார்.

    பாவனா கடத்தல் வழக்கில் கேரள ஐகோர்ட்டில் நாளை ஜாமீன் மனு தாக்கல் செய்ய திலீப் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவரது வக்கீல் ஏற்பாடு செய்கிறார்.
    நடிகை பாவனா கடத்தல்  வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். முதலில் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தவும் பிறகு மேலும் ஒரு நாள் போலீஸ் விசாரணைக்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து திலீப்பை போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று ஆதாரங்களை திரட்டினார்கள். போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து திலீப்பை மீண்டும் நேற்று அங்கமாலி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

    அப்போது திலீப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். வருகிற 25-ந்தேதி வரை அவரை கோர்ட்டு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து ஆலுவா கிளை ஜெயிலிலுக்கு திலீப்பை போலீசார் அழைத்துச் சென்று அடைத்தனர்.

    திலீப்பை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்த போது ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் திலீப்புக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் கோஷங்களை எழுப்பினார்கள். ஆனால் திலீப் எதையும் கண்டு கொள்ளாமல் சிரித்த படியே சென்றார். முன்னதாக நடிகர் திலீப் பயன்படுத்திய 2 செல்போன்களை அவரது வக்கீல் ராம்குமார் அங்கமாலி கோர்ட்டு நீதிபதியிடம் ஒப்படைத்தார். இந்த செல்போன்களை போலீசார் தவறாக பயன் படுத்த வாய்ப்பு இருப்பதால் கோர்ட்டில் ஒப்படைப்பதாக அவர் கூறினார்.

    அந்த செல்போன்கள் நடிகர் திலீப்பின் கை ரேகைகள் மூலம் மற்றவர்கள் பயன்படுத்த முடியாதபடி `லாக்' செய்யப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட திலீப்பை பாதி வழியிலேயே மீண்டும் போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு அவர் தனது கைரேகை மூலம் அந்த போனில் இருந்த `லாக்`கை திறந்தார். அங்கமாலி கோர்ட்டில் திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அடுத்தகட்டமாக  கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய திலீப் முடிவு செய்துள்ளார். நாளை (17-ந்தேதி) இதுதொடர்பாக  ஜாமீன் மனு தாக்கல் செய்ய அவரது வக்கீல் ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான நடிகர் திலீப்பின் மேலாளர் அப்புண்ணி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அப்புண்ணி போலீசில் சிக்கினால் பாவனா கடத்தல் வழக்கில் மேலும் வலுவான ஆவணங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே அப்புண்ணி போலீஸ் கையில் சிக்கினால் நடிகர் திலீப்பிற்கு ஜாமீன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் இதனால் அப்புண்ணி போலீசில் சிக்குவதற்கு முன்பு திலீப்பிற்கு ஜாமீன் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கொச்சியில் உள்ள நடிகர் திலீப்பின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை ரகசியமாக நடத்தப்பட்டதால் அங்கு சிக்கிய ஆவணங்கள் பற்றி போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
    சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை அபிராமி ராமநாதன் ரத்து செய்துள்ளார்

    ரூ.100-க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் இதற்கு முன்பு டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக ரூ.120 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் ரூ.153 ஆக உயர்ந்தது. மேலும் சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது 30 சதவீதம் கூடுதலாகிறது. இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.200-ஐ நெருங்கி விடுகிறது. இதன் காரணமாக தியேட்டரில் சினிமா பார்க்க வருபவர்களின் கூட்டம் குறைந்துவிட்டது.

    வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா தியேட்டர்கள் நிரம்பி வழியும். ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை.

    4 பேர் கொண்ட குடும்பத்தினர் படம் பார்க்க செல்லும் போது டிக்கெட் கட்டணம் மட்டும் ரூ.800-ஐ தொட்டுவிடுகிறது. பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன், குளிர்பானம் செலவு என ரூ.1800 வரை ஆகிறது. இந்த செலவு இதோடு நின்று விடுவதில்லை.

    தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் ஓட்டல்களில் சாப்பிடவே விரும்புவார்கள். அதற்கும் ஜி.எஸ்.டி. என கிட்டத்தட்ட வார இறுதி நாட்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியில் சாப்பிட சென்றால் கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது.
    இதனால் குடும்பத் தலைவர்கள் மிரண்டு போய் உள்ளனர். எனவே வார இறுதி நாட்களிலும் சினிமா பார்க்க செல்வதை பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். இதனால் தான் சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறையக் காரணம்.

    எனவே சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை அபிராமி ராமநாதன் ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப் பால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்ந்து விட்டது. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 30 சதவீதம் செலவாகிறது. எனவே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துவிட்டது. ரசிகர்கள் பாதிக்காமல் இருக்க அபிராமி மாலில் ஆன்லைன் முன் பதிவு கட்டணத்தை ரத்து செய்கிறேன். இது மற்ற தியேட்டர்களுக்கு முன் மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

    இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து அபிராமி ராமநாதனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    தற்போது சினிமாத்துறை சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றான சினிமா டிக்கெட் ஆன்லைன் பதிவு முறையை தங்களது திரையரங்கில் ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு முன்னோடியாக செயல்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.


    கருப்பன் பட காளை பிரச்சினை நடிகர் விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்
    கருப்பன் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளையை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு காளையின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி பகுதியை சேர்ந்தவர் காத்தான். இவர் தமிழ்நாடு வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் மாவட்ட செயலாளாராக உள்ளார்.

    கடந்த 30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டிலும், அது தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் புலிவலத்து காளை, கண்ணாபுரம், பூரணி, வத்திராபூர், மதுரை நிப்பந்தி உள்ளிட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த 14 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இதில் கொம்பன் என்ற 6 வயது காளை மிகவும் பிரபலமானதாகும்.

    கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 5 தங்க காசு, 8 வெள்ளிகாசுகள், 32 சைக்கிள்கள், 6 பீரோ, 3 பிரிட்ஜ் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளது. மேலும் இதுநாள் வரை எந்த ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பிடிபடாத காளையாக விளங்கி வருகிறது.

    இந்நிலையில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் `கருப்பன்' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் ஒரு காட்சியில் கொம்பன் மாட்டினை விஜய் சேதுபதி திமிலை பிடித்து அடக்குவது போல் படத்தின் முன்னோட்ட காட்சியில் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர்பு கொண்டு மாட்டின் உரிமையாளர் காத்தானிடம் கேட்டதை தொடர்ந்து, நடிகர் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம், இயக்குநர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதில் ஒரு வார காலத்திற்குள் முறையான அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு காளை கொம்பனை படத்தில் காட்சிப்படுத்தியதற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இது குறித்து மாட்டின் உரிமையாளர் காத்தான் நிருபர்களிடம் கூறும் போது, இந்த ஜல்லிக்கட்டு காளையை எனது தாயார் நினைவாக வளர்த்து வருகிறேன். காளை கொம்பனுக்கு ஏராளமான ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும் உள்ளது. இதுவரை பிடிபடாத எனது மாட்டை பிடிமாடாக படத்தில் கிராபிக்ஸ் தொழில் நுட்ப உதவியுடன் காட்டியுள்ளது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் காளை கொம்பனின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இருந்ததால்தான் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். கொம்பன் காளையுடன் அதன் உரிமையாளர் காத்தான் இருப்பதை படத்தில் காணலாம்.
    வேட்டி அணிந்து வந்த பிரபல திரைப்பட இயக்குனரான அசிஷ் அவிகுந்தக் வணிக வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொல்கத்தா:

    பிரபல திரைப்பட இயக்குனரான அசிஷ் அவிகுந்தக் கொல்கத்தாவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு நேற்று நடிகை தேவலீனா சென்னுடன் சென்றார். அப்போது அவிகுந்தக் வேட்டி அணிந்து இருந்தார். இதைப்பார்த்த வணிக வளாகத்தின் காவலாளிகள் அவரை மட்டும் நுழையவிடாமல் தடுத்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்டி கட்டியவர்கள் இங்கே நுழைய அனுமதி கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இயக்குனர் அசிஷ் அவிகுந்தக் இந்த சம்பவம் பற்றி முகநூலில் கண்டனம் தெரிவித்து எழுதினார்.

    அதில், “பேண்ட், சட்டை அணிபவர்கள் மட்டுமே தனியார் பொழுதுபோக்கு விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படும் ஆங்கிலேயர் கால கலாசாரம் இன்றும் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்டி அணிந்து சென்றால் வணிக வளாகத்துக்குள் அனுமதி கிடையாது என்பதை முதல்முறையாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நல்லவேளையாக நான் ஆங்கிலத்தில் விவாதித்து என்னை யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டதால் வணிக வளாக நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதித்தனர். கொல்கத்தா இவ்வளவு மோசமாகிவிடும் என்று நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    அவருடைய இந்த குற்றச்சாட்டு கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    ராஜ்குமாரும் நடிகர் ஆவார். "காஷ்மீர் காதலி'' உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

    ஸ்ரீபிரியா -ராஜ்குமார் காதல் திருமணத்துக்கு, இரு குடும்பத்தினரின் சம்மதத்தை பெறச் செய்வதில் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டவர் நடிகை ராதிகாவின் தாயாரான கீதா.

    இலங்கையைச் சேர்ந்த கீதா, தமிழ்நாட்டுக்கு வந்து நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியானார். ராதிகா பிறந்த நேரத்தில் மைலாப்பூர் வாரன் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஸ்ரீபிரியாவின் தாயார் அந்த குடியிருப்புக்கு சொந்தக்காரர்.

    அடிக்கடி தன் சொந்த பூமியான இலங்கைக்கு சென்றுவந்த கீதா, தன் பிள்ளைகளுக்கு புது டிரெஸ் எடுத்து வருவார். அப்போது ஸ்ரீபிரியாவுக்கும் அவர் அக்காவுக்கும்கூட புதிய துணிகள் எடுத்து கொடுத்தார். இப்படி ஒரு குடும்பமாய் பழக நேர்ந்த அந்த நாட்களை நினைவு கூர்ந்தார், ஸ்ரீபிரியா.

    "ராதிகா பிறந்திருந்த நேரத்தில் எனக்கு 3 வயது. இந்த வகையில் எனக்கும் ராதிகாவுக்கும் 3 வயது வித்தியாசம். இந்த வகையில் நான் வளர்ந்த அதே இடத்தில்தான் ராதிகாவும் வளர்ந்தார். சிறுவயதிலேயே நாங்கள் நல்ல தோழிகளாக இருந்தோம். எங்கள் நட்பு பிரிக்க முடியாமல் இறுகிய நேரத்தில் கீதாம்மா மறுபடியும் குடும்பத்துடன் இலங்கைக்கு போய்விட்டார்கள். ராதிகா என்னைப் பிரிந்த இழப்பு, என் சின்ன வயதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

    நானும் வளர்ந்து நடிக்க வந்தேன். படங்களும் `ஹிட்'டாகி வளர்ந்த நிலையில், "ஆட்டுக்கார அலமேலு'' படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜா என்னிடம், "ராதிகான்னு ஒரு புதுப்பொண்ணு இலங்கையில் இருந்து வந்திருக்கு. இப்ப பாரதிராஜாவின் "கிழக்கே போகும் ரெயில்'' படத்துல நடிச்சிக்கிட்டிருக்கு. அந்தப்படத்தில் அவர் பாடற "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாட்டுக்கு நான்தான் மாஸ்டர்'' என்றார். அப்போதே என் சிறு வயதுத்தோழி மறுபடியும் கிடைத்து விட்ட சந்தோஷத்தை எனக்குள் உணர்ந்தேன்.

    மறுபடி எங்கள் குடும்பங்கள் கைகோர்த்தபோது முன்பிருந்த அதே அன்பு மீண்டும் நிரந்தரமாகியது.

    "ராதிகா என் தங்கச்சி'' என்று நான் சொல்லிக் கொள்கிற அளவுக்கு நாங்கள் ஒரே குடும்பம் மாதிரி ஆனோம்.

    ராஜ்குமாரை (கணவர்) நான் விரும்பிய நேரத்தில் எங்கள் வீட்டில் ராஜ்குமார் பற்றி நல்லவிதமாய் சொல்லி எங்கள் காதலை திருமணம் வரை கொண்டு வந்தவர் கீதாம்மாதான்.

    எனக்கு திருமணமாகி 6-வது மாதத்தில் அபார்ஷன் ஆனது. முதல் குழந்தை இப்படி ஆகிவிட்ட ஒரு தாய்மையின் வேதனையை அப்போது அனுபவித்தேன். இந்த சமயத்தில் ராதிகாவின் தம்பி மோகனின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. பிறந்த அந்தக் குழந்தையை குளிக்க வைத்து கையில் வாங்கிய கீதாம்மா அதைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார். "இதே மாதிரி ஒரு குழந்தை அடுத்த வருஷம் இதே நேரம் உன் கையிலும் இருக்கும்'' என்று `அருள் வாக்கு' மாதிரி சொன்னார்.

    அருள்வாக்கு என்று ஏன் சொன்னேன் என்றால், அவர் சொன்னதுபோலவே நடந்தது. ஒரே வருடத்திற்குள் என் மகள் சிநேகா பிறந்து என் தாய்மையை அர்த்தமுள்ளதாக்கினாள்.

    குழந்தையை இழந்த தாயிடம் அந்த மாதிரி சமயங்களில் சென்டிமென்டாக யாருமே தங்கள் வீட்டு குழந்தையை கொடுக்கமாட்டார்கள். ஆனால் அந்த மாதிரியான தடைகளையெல்லாம் எண்ணிக் கொள்ளாமல் தன் பேரக்குழந்தையை மகனிடம் கொடுப்பதற்கு முன்பு என்னிடம் கொடுத்து வாழ்த்தினாரே, அந்த அன்பு யாருக்கு வரும்? இப்போதும் எங்கள் இரு குடும்பத்தினரிடையே அன்பு அப்படியே நீடிக்கிறது.''

    நெகிழ்ச்சியுடன் சொன்னார், ஸ்ரீபிரியா.

    சினிமாவில் நடித்து புகழ் பெற்ற நிலையில், திருமணத்துக்குப் பின் 10 வருடங்கள் நடிக்காமல் இருந்தார் ஸ்ரீபிரியா. அதற்குப் பிறகு, அவர் தொட்டது சின்னத்திரை சீரியல்கள். "விடுதலை'', "மறக்க முடியுமா?'', "சாரதா'', "விக்ரமாதித்தன்'', "சிந்துபாத்'' என சீரியல்களை தொடர்ந்தவர், இப்போதும் "இம்சை அரசிகள் தொடரை தயாரித்து நடித்தும் வருகிறார்.

    இந்த பிசியிலும் தோழி ராதிகா தயாரித்த "சின்ன பாப்பா பெரிய பாப்பா'' காமெடித் தொடரில் "சின்ன பாப்பா''வாக வந்து காமெடி செய்து சின்னத்திரை வட்டாரத்திலும் நடிப்புக்காக பெயர் பெற்றார் ஸ்ரீபிரியா.

    முதலில் இந்தத் தொடரை தயாரிக்க இருந்தவர் ஸ்ரீபிரியா. இந்தியில் வெளியான "தூது மேமே'' நகைச்சுவைத் தொடர், ரொம்பவும் பிரபலமானது. இந்த தொடரை பார்க்கும் ரசிகர்கள் அதை இப்பவும் முதலிடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மவுசு குறையாமல் இப்போதும் அந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த தொடர் பற்றி கேள்விப்பட்ட ஸ்ரீபிரியா அதை பார்த்தார். பார்த்ததுமே வெற்றி பெறக்கூடிய தொடர் என்பது தெரிந்து தமிழில்  அதை தயாரிக்கும் உரிமைக்கு முயற்சித்தார். அப்போது தான் கொஞ்சம் முன்னதாக அந்த உரிமையை ராதிகா பெற்றுக்கொண்டதை அறிந்தார்.

    இதன் பிறகு தோழிகள் சந்தித்தார்கள். "நான் தயாரிக்கிறேன். நீங்கள் நடியுங்கள்'' என்று ராதிகா சொல்ல, தொடரில் "சின்னபாப்பா''வாக வந்து காமெடி துவம்சம் செய்தார், ஸ்ரீபிரியா.

    இந்த "சின்ன பாப்பா'' கேரக்டரில் தொடர்ந்து 2 வருடம் நடித்தார். பிறகு சொந்த தொடர் தயாரிப்பில் ஈடுபட்டதால், நடிப்புக்கு நேரமின்றி விலகிக்கொண்டார். அதன் பிறகு "சின்ன பாப்பா'' கேரக்டரில் ஊர்வசியின் சகோதரி கல்பனாவும், அவரைத் தொடர்ந்து சீமாவும் நடித்தார்கள்.

    ஸ்ரீபிரியா "இம்சை அரசிகள்'' தொடரை விரைவில் முடிக்கிறார். அடுத்து புராணப் பின்னணியில் ஒரு தொடரை உருவாக்கும் வேலையில் பிசியாக இருக்கிறார். இதற்காக பெரியபுராணத்தை படித்து வருகிறார்.

    சொந்த தொடர் தவிர, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் "ஆனந்தம்'' தொடரிலும் நடித்து வருகிறார். இதுபோக தோழி ராதிகா தயாரிக்கும் "கண்ணாமூச்சி ஏனடா'' படத்தில் தோழி கேட்டுக் கொண்டதற்காக நடிக்கிறார். "எனக்கு கணவர், குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு இருப்பதால் மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தாக வேண்டும். இந்த கண்டிஷனுக்கு தோழி ஒத்து வந்ததால் அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். "ஆனந்தம்'' தொடரிலும் மாலை 5ஷி மணிக்குள் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடுவார்கள். இப்படி குடும்பத்தின் பொறுப்புக்கு பங்கம் ஏற்படாதபடி நடிக்கிறேன்'' என்கிறார்.

    ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா இப்போது சர்ச் பார்க்கில் 9-வது படிக்கிறார். அம்மா படித்த அதே பள்ளியில் மகளும் படிக்கிறார் என்பதில் இந்த அம்மாவுக்குள் நிறையப் பெருமை. மகன் அர்ஜ×ன் `ஷேர்வுட் ஹார்ட்' பள்ளியில் 5-வது படிக்கிறான்.

    "பிள்ளைகள் உங்கள் மாதிரி கலைத்துறைக்கு வருவார்களா?'' ஸ்ரீபிரியாவைக் கேட்டால், "பிள்ளைகள் விஷயத்தில், பெற்றோர் எந்த விருப்பத்தையும் திணிக்கக் கூடாது. கணவர் ராஜ்குமாரும் நானும் கலைத்துறையில் இருந்தாலும், பிள்ளைகள் விஷயத்தில் அவர்களின் விருப்பம் எதுவோ அதுதான் எங்கள் விருப்பமாகவும் இருக்கும். என் அக்காவின் மகன் சிவாஜி, திடீரென நடிக்க ஆசைப்பட்டான். அக்கா மீனா ராம்குமார், அம்மா கிரிஜா பக்கிரிசாமி, தம்பி சந்திரகாந்த் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் "சிங்கக்குட்டி'' படத்தில் அவன்தான் ஹீரோ, டைரக்டர் வெங்கடேஷ் இயக்கத்தில் படம் வளர்ந்து வருகிறது. எந்த ஆர்வமும் தானாக வந்தால் அதில் அதிக கருத்தூன்றி வெற்றி பெற முடியும்.''

    ஒரு அம்மாவுக்கு உரிய நெகிழ்ச்சியுடனே சொல்லி முடித்தார், ஸ்ரீபிரியா. (ஸ்ரீபிரியா பற்றிய தொடர் இத்துடன் முடிவடைந்தது)
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் மை நடிகை, திருமணத்திற்கு முன்பாக தான் இதை செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம்.
    மை அர்த்தமுள்ள நடிகை தமிழில் அறிமுகமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். தமிழின் உச்ச நடிகர்கள் இருவரது படங்களிலும் நடிகை தற்போது நடித்து வருகிறார். அந்த இரு படங்களுமே விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    மேலும் தெலுங்கில் பிரம்மாண்ட படத்தில் நடித்த வில்லன் நாயகனுடன் நாயகி நடித்திருக்கும் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், திருமணம் குறித்து நடிகையிடம் கேட்ட போது, தற்போது நடிகை சினிமாவில் பிசியாக நடித்து வருவதால், திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறாராம்.



    காதலுக்கு அப்பறம் தான் திருமணம் என்றும் கூறியிருக்கும் நடிகை, காதலிக்கும் நபர் சினிமாவிற்கு அப்பாற்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை. உயரமாக, நல்லவராக இருந்தால் போதும், உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கூறியிருக்கிறாராம். நடிகையின் கண்டிஷனுக்கு ஏற்ற நபர் கிடைக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    ஜெயம் ரவியுடன் `வனமகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய சாயிஷா, சமந்தாவின் வீட்டை கைப்பற்றியிருக்கிறாராம்.
    நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் அறிமுகமான படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. 2015-ல் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை.

    இப்போது தமிழில் ‘வனமகன்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக சாயிஷா அறிமுகமாகி இருக்கிறார். அவரது நடிப்பும், நடனமும் பாராட்டு பெற்றுள்ளன. அடுத்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கிறார்.

    இந்த நிலையில் மீண்டும் தெலுங்கிலும் மார்க்கெட் பிடிக்கும் ஆர்வத்தில் சாயிஷா ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார். இது சமந்தா ஏற்கனவே குடியிருந்த வீடு. இந்த வீட்டில் தங்கி இருந்த போதுதான் சமந்தா தெலுங்கில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார். தமிழிலும் முன்னணி இடம் வகித்தார். எனவே, இந்த வீடு தனக்கும் அந்த அதிர்ஷ்டத்தை தரும். தமிழ், தெலுங்கில் முன்னணி இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாயிஷா இருக்கிறார்.

    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை ரத்து செய்து, அடுத்த வாரம் வரை திலீப்பை நீதிமன்றக் காவலில் வைக்க அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கடந்த 10-ந்தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    திலீப்பை போலீசார் உடனடியாக அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டது.

    இதையடுத்து அவர் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். திலீப்புக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் அளிக்க வேண்டுமென போலீசார் அங்கமாலி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் 2 நாள் மட்டும் திலீப்பை விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். திலீப்புக்கு ஜாமீன் கேட்டு போடப்பட்ட மனுவையும் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.



    போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டதும் திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் முக்கிய ஹோட்டல்களில் இருந்த தடயங்களையும் சேகரித்தனர். இதையடுத்து 2 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று மீண்டும் அங்கமாலி கோர்ட்டில் திலீப் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது திலீப்புக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணை முடிவடையாததால் போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செயயப்பட்டது. இதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். நடிகர் திலீப்பை மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து இன்று மாலை 5 மணியுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததால், போலீசார் திலீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



    இன்றும் திலீப் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை நிராகரித்த நீதிபதிகள், திலீப்பை வருகிற ஜுலை 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×