என் மலர்
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இசை ஆல்பத்தில் நடித்திருக்கும் நடிகை இனியாவுக்கு சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மவுனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்த இனியா தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘மியா’ என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி இருக்கிறார். அபிரஜிலால் - ஜெயன் இணைந்து இணை அமைத்துள்ளனர். அருண் நந்தகுமார் நடன காட்சிகளை அமைத்து இருக்கிறார்.
இந்த இசை ஆல்பத்தில் இனியா துணை இயக்குநராக பணியாற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நடிகை ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி என்று பண்டிகை படத்தில் அவருடன் நடித்திருக்கும் நடிகர் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.
கிருஷ்ணா- கயல் ஆனந்தி ஜோடி சேர்ந்து நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‘பண்டிகை’. இதுபற்றி கூறிய கிருஷ்ணா...
“ ‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’ போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை ‘பண்டிகை’ படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்த கதை என் திரைஉலக வாழ்வில் முக்கிய படமாக இருக்கும். அன்பு, அறிவு என்ற இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை தரும்.
இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி. ‘பண்டிகை’ மேலும் ஒரு வெற்றியை அவருக்கு தரும். சரவணன் இந்த படத்துக்கு பிறகு தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகர்களுக்கு இருக்கும் பஞ்சத்தை தீர்ப்பார். அவரை போலவே நிதின் சத்யாவும், தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார். இசையமைப்பாளர் ஆர்.எச். விக்ரம் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தனது திறமையை காட்டி இருக்கிறார்.

இதன் தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் கடந்து அவர் இந்தப் படத்துக்காக எடுத்துக் கொண்ட அக்கறை, அவரது வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. எங்கள் அனைவரது உழைப்பும் ‘பண்டிகை’ படத்தின் வெற்றி மூலம் கொண்டாடப்படும் என்பது நிச்சயம்” என்றார்.

பாவனா கடத்தல் வழக்கில் அடுத்ததாக 2 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பாவனா கடத்தல் வழக்கில் தொடர்ந்து போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் தற்போது விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் திருக்காக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தோமஸ் ஆவார். நடிகை பாவனாவை கடத்திய கும்பல் அவரை விடுவித்த பிறகு பாவனா டைரக்டர் லால் என்பவர் வீட்டில்தான் தஞ்சம் அடைந்தார். அப்போது தோமஸ் எம்.எல்.ஏ. லால் வீட்டிற்கு சென்று உள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இன்னொருவர் ஆலுவா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அன்வர்சாதத். நடிகர் திலீப்புக்கு சொந்தமான ‘டி’ சினிமாஸ் என்ற தியேட்டர் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதாக பிரச்சினை ஏற்பட்டபோது அன்வர்சாதத் தலையீட்டின் பேரில் இந்த விசாரணை பாதியில் கைவிடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் இந்த 2 எம்.எல்.ஏ.க்களும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ளனர். எனவே ஆலுவா போலீசார் திருவனந்தபுரம் சென்று அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று உத்தரவிட்டார்.
பாவனா கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ள நடிகர் திலீப் ஆலுவா ஜெயிலில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். மூன்றுக்கும் மேற்பட்ட முறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை திலீப் தரப்பு நாடியிருக்கிறது.
ஆனால், திலீப் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திலீப்பை வருகிற ஜுலை 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் நடிகர் திலீப் சார்பில் இன்று கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடந்து முடிந்துவிட்டதால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மனு குறித்த விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

சாரதி இயக்கத்தில் நடிகர் ஷாம் நடித்து வரும் `கா-வியன்' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், படக்குழுவை பாராட்டியிருக்கிறார்.
சாரதி இயக்கத்தில் நடிகர் ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் `கா-வியன்'. 2 எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரித்து வரும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் `கா-வியன்' என்றும் தெலுங்கில் `வாடு ஒஸ்தாடு' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கிறார். ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். என்.எஸ்.ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷ்யாம் மோகன் இசையமைக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் மோஷன் போஸ்டர்களை இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். மோஷன் போஸ்டர், டிரைலரை பார்த்த லாரன்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ தான் முக்கியம் என்று தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா மனம் திறந்து கூறியிருக்கிறார்.
சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறுகிறது.
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி உள்ளார். பத்திரிகையாளர்கள். சமந்தாவிடம் ‘திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா? என்று கேட்டு விட்டால் ஆவேசப்படுகிறார்.
“இந்த கோள்வியை ஒரு டாக்டரிடம், ஆசிரியரிடம், என்ஜீனியரிடம் கேட்க முடியுமா? நடிகைகள் என்றால் வீட்டிலேயே முடங்கி விட வேண்டுமா” என்று எதிர்கேள்வி கேட்கிறார். இந்த நிலையில், பிரபல பத்திரிகைக்காக புகைப்படங்களுக்கு சமந்தா போஸ் கொடுக்க வந்தார். அப்போது அவரிடம் உணவு பற்றியும், செக்ஸ் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சமந்தா, “ எப்போது வேண்டுமானாலும் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கலாம். ஆனால் செக்ஸ் முக்கியம். அது இல்லாமல் முடியாது” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த மனம் திறந்த பதில் திரை உலகினரை வியப்படைய வைத்துள்ளது. ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிப்-ஹாப் ஆதி இயக்கத்தில் அவரே நடித்து, இசையமைத்துள்ள படமான ‘மீசைய முறுக்கு’ டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் அளவுக்கு இருக்கிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மீசைய முறுக்கு’. இப்படத்திற்கு ஆதியே இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குகிறார். இவருடன் விவேக், நாயகிகள் ஆத்மீகா, மனிஷா மற்றும் விக்னேஷ் காந்த், மா.கா.பா.ஆனந்த், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்கள்.
அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி வழங்கும் இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப் டிரெண்டிங்கில் முதலில் இருக்கும் இப்படத்தின் டிரெய்லர், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப இந்த படம் உருவாகியிருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. இதுவரை படத்தின் டிரெய்லரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

தமிழ் மொழியின் மீது இசையமைப்பாளர் ஆதிக்கு அதீத ஈடுபாடு உண்டு என்பது நாம் அறிந்ததே. அதன் ஒரு பகுதியாகவே "டக்கரு டக்கரு" என்ற ஜல்லிக்கட்டு பாடலை இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அவர் இயக்கியிருக்கும் படத்திற்கும் ‘மீசைய முறுக்கு’ என்று பெயர் வைத்திருக்கிறார். முறுக்கு மீசை இருந்தாலே ஒரு கம்பீரம் தான். அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘மீசைய முறுக்கு’ படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறும் போது,
“தற்போது ஹீரோ மற்றும் இயக்குனராக ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்சிக்கு நன்றி. ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்”
என்று கூறினார்.

படித்த சுப்பிரமணியசாமியை விட ரஜினிகாந்துக்கு 2 மடங்கு அறிவு உள்ளது என ரஜினி காந்தின் நண்பர் ராஜாபகதூர் கூறியுள்ளார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவரை பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி. கடுமையாக விமர்சித்தார்.
ரஜினி படிப்பறிவு இல்லாதவர். அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று சுப்பிரமணியசாமி கூறினார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்தின் நீண்டகால நண்பரான ராஜாபகதூரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த்தை பற்றி விமர்சிப்பதற்கு சுப்பிரமணிய சாமிக்கு எந்த தகுதியும் இல்லை. சுப்பிரமணியசாமி எத்தனை தடவை ரஜினிகாந்த்தை சந்தித்து பேசி இருப்பார்.

படித்த சுப்பிரமணியசாமியை விட ரஜினிகாந்துக்கு 2 மடங்கு அறிவு உள்ளது. ரஜினிகாந்துடன் நான் 47 ஆண்டுகளாக நெருங்கி பழகி வருகிறேன். ரஜினியை பற்றி சுப்பிரமணியசாமிக்கு என்ன தெரியும்.
இவ்வாறு ராஜாபகதூர் கூறினார்.

லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை குறித்து சினிமா உலகில் உள்ள பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷும் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் சமீபத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அதிகமான தமிழ் பாடல்களை பாடியதாக இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார்கள்.
டிக்கெட் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் கருத்து பதிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் 16 இந்தி பாடல்களையும், 12 தமிழ் பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியதாக கூறப்படுகிறது.
இந்த சர்சைக்கு நடிகர், நடிகைகள், பாடகர், பாடகிகள் என பலரும் ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனுஷ் கூறியிருப்பதாவது,

"ஏ.ஆர்.ரகுமானுக்கு மொழி என்பதே கிடையாது. அவரது மொழி இசை மட்டுமே, வேறு எதுவுமில்லை. ரகுமான் எப்போதும் ரகுமானே, ஜெய்ஹோ" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நடிகை குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
லண்டன் இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும் போது, “ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் இசைக்குழு சிறப்பான பாடல்களை தர முயன்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நேர்மையாகவே நடந்து கொண்டோம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது நடித்து வரும் `சத்யா'' படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
யோகி பாபு, சதீஷ் நடிப்பில் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

`சத்யா' படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
`சத்யா' ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலரும் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் வருகிற அகஸ்டு மாதம் திரைக்கு வர இருக்கிறது.

நாட்டு நலனை பற்றி பேசினால் வெளியே தெரிவதில்லை, ஆனால் ரஜினி, கமல் பற்றி பேசினால் சர்ச்சையாகிறது என சரத்குமார் வேதனையுடன் தெரிவித்தார்.
மராட்டிய மாநில சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர், சரத்குமார் பிறந்த நாள் விழா ஆகியவை நேற்று காலை தாராவியில் உள்ள காமராஜர் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். மராட்டிய மாநில செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி துணை செயலாளர் மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் செந்தூர்நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து நிர்வாகிகள் சமத்துவ மக்கள் கட்சியின் உறுதிமொழியை ஏற்றனர்.
இதையடுத்து துணை பொதுச்செயலாளர் சுந்தர் கட்சியினர் எப்படி செயல்பட வேண்டும், கட்சியை வளர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விளக்கமாக கூறினார். பின்னர் பேசிய கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் சேலத்தில் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டிற்கு பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என மராட்டிய மாநில தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து சரத்குமார் பேசியதாவது:-
கடந்த 2½ ஆண்டுகளாக பல சோதனைகளை சந்தித்து வருகிறோம். சறுக்கல்கள் இல்லாமல் வாழ்வில் வெற்றி பெற முடியாது. இன்று பல இளைஞர்கள் சின்ன தோல்விகளை கூட தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி பார்த்தால் நானெல்லாம் 1000 முறை தற்கொலை செய்து இருக்க வேண்டும். நாம் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
தோல்வியடையாமல் யாரும் வெற்றி பெற்றிருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி இந்தியாவிலேயே பொற்கால ஆட்சி. இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. எனவே அவர் வழியை பின்பற்றி நாமும் நடக்க வேண்டும். தொண்டர்கள் சிவப்பு, மஞ்சள் துண்டுடன், கட்சி அடையாள அட்டையுடன் வெளியில் செல்வதை பெருமையாக கருத வேண்டும். அப்போது கட்சி வளரும். இன்று தமிழகத்தில் பலர் நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் அந்த தகுதி இருக்கிறதா?.
நமக்கு (சமத்துவ மக்கள் கட்சிக்கு) ஆட்சி புரிகிற தகுதி வரும். அதற்காக நீங்கள் உழைக்கவேண்டும். ஜல்லிகட்டிற்காக முதலில் போராடியது சமத்துவ மக்கள் கட்சி. கூடங்குளம் அணு ஆலைக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியது நாம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதெல்லாம் வெளியே தெரிவதில்லை. ரஜினி, கமலை பற்றி பேசினால் சர்ச்சையா கிறது. ஆனால் நாட்டு, நலன், தமிழர் நலனை பற்றி பேசினால் வெளியே தெரிவதில்லை.

தொண்டர்கள் நேர்மையுடன் மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும். யாரும் கெட்ட பழக்கவழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம். உடல்நலனை பாதுகாத்து கொள்ளுங்கள். உலகம் பேசும் அளவில் விருதுநகரில் காமராஜர் மணி மண்டபம் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை மற்றும் மலர்கிரீடம் அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் சரத்குமார் கட்சி நிர்வாகிகளுடன் காமராஜர் பள்ளியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகளுக்கு நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கல்வி உதவி வழங்கினார்கள்.
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 22 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கினார்கள்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-
“பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 38 வருடங்களாக உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அகரம் பவுண்டேஷனும் இதில் இணைந்து இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மட்டுமன்றி படிக்க வசதி இல்லாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டுமுதல் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் விளையாட்டுகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்குகிறோம். அகரம் பவுண்டேஷன் உதவியோடு கல்வி பயின்ற 750 பேர் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:-
“நான் பல்வேறு கஷ்டங்களை கடந்து நடிகனாகி 192 படங்களில் நடித்து இருக்கிறேன். அதன்பிறகு நடிப்பதை நிறுத்தி மகாபாரதம் கம்பராமாயணத்தை ஆராய்ச்சி செய்து சொற்பொழிவாற்றினேன். உடம்பை பேணி பாதுகாத்ததால்தான் இதையெல்லாம் செய்ய முடிந்தது. முகம், கை, கால்கள்தான் நமது அடையாளம். அதை தவிர்த்து பார்த்தால் ஒன்றும் இல்லை.
மாதத்தில் 20 நாட்களாவது நடைபயிற்சி செய்கிறேன். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிவரை யோகா செய்கிறேன். அதன்பிறகு ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்கிறேன். கடைசி மூச்சு வரை நீங்கள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றால் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
லட்சியம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும். கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனை கடைபிடித்தால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.”
இவ்வாறு சிவகுமார் பேசினார்.