என் மலர்
‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ படத்தில் நாயகி, தற்போது நடித்து வரும் `கட்டம்' படத்தின் கதை மூலம் நடிப்பில் நிறைய கற்றுக்கொண்டதாக ஷிவதா நாயர் கூறியிருக்கிறார்.
ஐ கிரியேட் ஒண்டர் பிலிம்ஸ் சார்பில் சத்யா ஜனா தயாரித்துள்ள படம் ‘கட்டம்’.
‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ படங்களில் நடித்த ஷிவதா நாயர் இதில் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் புதுமுகம் நந்தன், நிவாஸ் சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘முரண்’ படத்தை இயக்கிய ராஜன்மாதவ் இதை இயக்கி உள்ளார். இதில் நடித்தது குறித்து ஷிவதா கூறுகிறார்....
“இது ரசிகர்களுக்கு முற்றிலும் புது வகையான சினிமா. சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவன் செய்யும் மாபெரும் தவறுக்காக, முற்றிலும் எதிர்பாராத வகையில் அவன் பழிவாங்கப்படுவதே கதை. எனது பாத்திரம் சவாலாக இருந்தது. இந்த கதாபாத்திரம் மூலம் நடிப்பில் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த படத்தின் கதை, திரைக்கதை பின்னப்பட்டுள்ள விதமும், எதிர்பாராத அதிரடி திருப்பங்களும் ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே வைத்திருக்கும். இந்த சவாலான கதையில் என்னுடன் பிரதான கதாபாத்திரங்களில் புதுமுகம் நந்தன், நிவாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களது உழைப்பும் நடிப்பும் பேசப்படும். நான் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த படம் எனது சினிமா வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும்’’ என்றார்.

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘வேலையில்லா விவசாயி’ படத்தின் முன்னோட்டம்.
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘வேலையில்லா விவசாயி’.
இதில் கதாநாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். இவர்களுடன் வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ராசாமதி, குணசேகரன். கே,கலை - சகு, எடிட்டிங் - என். கணேஷ்குமார், ராமர்.ஆர்., நடனம் - பாபி ஆண்டனி, ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு - பிரசாத் பிக்சர்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம்-பி.ஆர்.பிரசாத்.
படம் பற்றி அவர் கூறும் போது...
“விவசாய நிலங்கள் எல்லாம் பங்களாக்களாக மாறி விட்டன. எல்லாம் இருக்கிறது. சோறு தான் இல்லை என்கிற சோகம் அடுத்த தலைமுறை மக்களின் குரலாக ஒலிக்கப் போகிறது.
ஐய்யோ தவறு செய்துவிட்டோமே என்று நாம் அப்போது காலம் கடந்து யோசிக்கப் போகிறோம். எந்த தொழில் புரட்சியும் பசியை போக்காது.
பூமியை மலடாக்கி விட்டு மாட மாளிகை கட்டி என்ன பயன். ஊருக்கெல்லாம் சோறு போட்ட நாம், அரிசியையும் பருப்பையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
பண்ணையாராகவும் விவசாயியாகவும் பெருமையாக வலம் வந்த பல பேரை பங்களா வாட்ச் மேனாகவும், ஏ.டி.எம் வாட்ச் மேனாகவும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் விவசாயியின் குரலாக இதில் பதிவு செய்கிறோம்” என்றார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மொரோக்கோ நாட்டில் சண்டைக்காட்சிக்காக குதிரை பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டில் வெளியான இந்திப்படமான "டைகர் ஜிந்தா ஹேய்" அவரது ரசிகர்களை மகிழ்வித்ததுடன் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து "டைகர் ஜிந்தா ஹேய்" படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். முதல் பாகத்தின் இயக்குனரான அலி அப்பாஸ் ஜாபர் இந்தப் படத்தையும் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. சல்மான் கானின் ஜோடியாக கத்ரீனா கைப் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் வெளிப்புறக் காட்சிகள் ஆஸ்திரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடந்து முடிதுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மொராக்கோ நாட்டில் சல்மான் கானும் கத்ரீனா கைப்பும் நடிக்கும் காட்சிக்கான படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒரு சண்டை காட்சியில் குதிரையில் சல்மான் கான் வருவதுபோல் படமாக திட்டமிட்டனர்.
இதற்காக, சல்மான் கானுக்கு சிறப்பு பயிற்சியாளர் மூலம் குதிரை ஏற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது. சல்மான் கான் குதிரை பயிற்சி பெறும் காட்சிகளை சுருக்கி தொகுத்து, இப்படத்தின் இயக்குனரான அலி அப்பாஸ் ஜாபர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். டுவிட்டர் மூலம் படிப்படியாக பரவிய இந்த வீடியோ, பேஸ்புக், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலமாக தற்போது வைரலாகி வருகிறது.

சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்து வரும் புதிய படம் குறித்த ரகசியம் வெளியாகியது.
ஜெயம் ரவி - அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான `தனி ஒருவன்' படம் அரவிந்த்சாமிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி தற்போது `சதுரங்கவேட்டை 2', `வணங்காமுடி', `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `நரகாசூரன்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதில், சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மம்மூட்டி - நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் `பாஸ்கர் தி ராஸ்கல்'. இந்தப் படம் தற்போது `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதையும் இயக்குநர் சித்திக்கே இயக்குகிறார்.
இவர் தமிழில் ஏற்கனவே விஜய், சூர்யா இணைந்து நடித்த `ப்ரண்ட்ஸ்', விஜயகாந்த், பிரபுதேவா நடித்த `எங்கள் அண்ணா' மற்றும் விஜய், அசின் நடித்த `காவலன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர். `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இயக்குநர் சித்திக் தமிழில் இயக்கும் நான்காவது படம். இந்தப் படத்தை ஹர்சினி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஹர்சினி தயாரிக்கிறார்.
`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் அர்விந்த் சாமி ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகாவும் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். பா.விஜய், விவேகா பாடல்கள் எழுத, அம்ரேஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட வழக்கில் தெலுங்கு நடிகர் - நடிகைகளிடம் நாளை முதல் விசாரணை நடத்தப்படுகிறது.
ஐதராபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களுடன் தெலுங்கு நடிகர் - நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நந்து, தனிஷ், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரிஜெகனாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, கலை இயக்குனர் ஜின்னா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிறப்பு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் நடிகர் - நடிகைகளிடம் விசாரணை நாளை தொடங்குகிறது.
யார் - யார் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நேற்று வெளியிட்டனர். அதன்படி நாளை இயக்குனர் பூரி ஜெகநாத் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.
20-ந் தேதி நடிகை சார்மி, 21-ந் தேதி முமைத்கான், 22-ந் தேதி சுப்பராஜு, 23-ந் தேதி ஷியாம் கே நாயுடு, 24-ந் தேதி ரவிதேஜா, 25-ந் தேதி ஜின்னா, 26-ந் தேதி நவ்தீப், 27-ந் தேதி தருண், 28-ந் தேதி நந்து, 29-ந் தேதி தனிஷ் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு மேலும் பல திரையுலக பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் உயரமான நடிகை, இயக்குநர்களுக்கு புதுப்புது கண்டிசன்களை போடுகிறாராம்.
உயரமான நடிகை நடித்த பிரம்மாண்ட படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, தனது அடுத்த படங்களை நடிகை கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். மேலும் நடிகை அவரது சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறாராம்.
அதற்கு முன்னதாக நடிகை நடித்த படங்கள் போதிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் பிரமாண்ட படத்தில் நடிகையின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்ததால், தனது சம்பளத்தை ரூ.4 கோடி வரை நடிகை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்றும் நடிகை அடம் பிடிக்கிறாராம். தன்னை ஒப்பந்தம் செய்யும் வரும் இயக்குனர்கள் தனது கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டால் தான் நடிகை படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.
இந்நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவர் அவரது அடுத்த படத்தில் முதலமைச்சராக நடித்து வரும் படத்தில் குத்துப்பாடல் ஒன்றில் ஆட்டம் போட ரூ.2 கோடி வரை நடிகை சம்பளமாக வாங்கியிருக்கிறாராம். இது தெலுங்கு திரையுலகில் மற்ற நாயகிகளுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்குவதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சமீபத்தில் அஜித் நடித்து வரும் படங்களிள் தலைப்பு ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கும் படி பெயர் வைக்கப்படுகிறது. அதற்கான காரணத்தை விவேகம் படத்தின் இயக்குனர் சிவா விளக்கியிருக்கிறார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் வெற்றி பெற்றன. அடுத்து இவரது இயக்கத்தில் அஜீத் நடித்திருக்கும் ‘விவேகம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சிவா இயக்கத்தில் உருவான அஜீத்தின் 3 படங்களின் பெயர்களும் ‘வி’ என்ற எழுத்தில் தான் தொடங்கி உள்ளன. இதற்கு காரணம் ‘சென்டிமெண்ட்’ என்று பெரும்பாலானோர் எண்ணுகிறார்கள். இது பற்றி கூறிய இயக்குனர் சிவா...
“நான் அஜீத் சாரை மனதில் நினைத்துக் கொண்டு கதை தயார் செய்வேன். பின்னர் அதை ஒருவரியில் அவரிடம் சொல்வேன். அது அவருக்கு பிடித்தால், திரைக்கதை அமைத்து விரிவாக கொடுப்பேன். அவர் ‘ஓகே’ சொன்னால் மற்ற வேலைகளை தொடங்குவேன்.
அடுத்து, அந்த கதைக்கு பொருத்தமான ‘டைட்டில்’ களை எழுதி அஜீத் சாரின் கவனத்துக்கு கொண்டு போவேன். சரியான தலைப்பை அவர் தேர்வு செய்வார். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. மற்றபடி திட்டமிட்டோ அல்லது சென்டிமெண்டுக்காகவோ முதலில் ‘வி’ எழுத்து வரும்படி படங்களுக்கு பெயர் வைக்கவில்லை. இது தற்செயலாக நடந்தது”என்றார்.

தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய `மாரி' படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகள் தொடங்கி இருக்கின்றன.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வேலையில்லா பட்டதாரி 2' படம் வருகிற ஜுலை 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' படத்திலும், `ஃபகீர்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் `மாரி-2' படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். `மாரி' படத்தின் முதல் பாகம் ரிலீசாகி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த அறிவிப்பை பாலாஜி மோகன் வெளியிட்டிருக்கிறார்.
`மாரி-2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

படத்தில் நடிக்கக் கூடாது என்று முடிவெடுத்த என்னை மீண்டும் நடிக்க வைத்த படம் `கூட்டத்தில் ஒருத்தன்' என்று நடிகை ப்ரியா ஆனந்த் கூட்டத்தில் ஒருத்தன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அசோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் `கூட்டத்தில் ஒருத்தன்'. தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் தாயரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நாயகன் அசோக் செல்வன், நாயகி ப்ரியா ஆனந்த், இயக்குநர் ஞானவேல், எடிட்டர் லியோ ஜான் பால், ஒளிப்பதிவாளர் பிரமோத், கலை இயக்குநர் கதிர், சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ப்ரியா ஆனந்த் பேசிய பேசியதாவது,
நான் இந்த படத்தின் கதையை கேட்கும் முன், இனி எந்த படத்திலும் நடிக்க கூடாது என்பது போல் என்னுடைய மனநிலை இருந்தது. `கூட்டத்தில் ஒருத்தன்' படத்தின் கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவ்வளவு பாஸிடிவான கதை இது. மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். நிவாஸ்.கே.பிரசன்னா தான் படத்துக்கு இசை என்றதும் எனக்கு நல்ல காதல் பாடல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததை விட மிகசிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது.

புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த, குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் த்ரில்லர் கதையாக ஓவியா படம் உருவாகி வருகிறது.
இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கிவரும் இந்த படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.
காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் 'ஓவியா'வாக நடிக்கிறார்
இன்றைய எந்திர மயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன் - மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறிய பின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான்.

அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று, அதன் பெற்றோர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சண்டையினால் சரியான கவனிப்பின்மை காரணமாக இறந்து பேயாக மாறுகிறது. அதன்பின் தனது இந்த நிலைமைக்கு காரணமான தனது பெற்றோருக்கு அது பாடம் புகட்டுகிறதா, இல்லை பாவம் என விட்டுவிடுகிறதா என்பது தான் படத்தின் கதை.
மலையும் மலைசார்ந்த இடமும் தான் கதைக்களம் என்பதால் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு நடைபெற்று வருகிறது.

ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.

தூயவனுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, இரண்டு பெரிய படக் கம்பெனிகள் அவரை அணுகி, "பால்குடம்'' கதையை படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.
அதே சமயம், "பால்குடம்'' கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே, பெரிய தொகைகளுக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.
பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது, வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.
தூயவன் கதை எழுதுவதில் மட்டும் அல்ல, வசனம் எழுதுவதிலும் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர் - ஜெயபாரதி நடித்த "புதிய வாழ்க்கை'', சிவாஜிகணேசன் நடித்த "மனிதருள் மாணிக்கம்'', "ஜெயலலிதா- முத்துராமன் நடித்த "திக்குத் தெரியாத காட்டில்'' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.
அந்தக் காலக்கட்டத்தில், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். "முடிசூடா மன்னன்'', "கல்யாணமாம் கல்யாணம்'', "எங்களுக்கும் காலம் வரும்'', "கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன'' ஆகியவை, அவற்றில் சில.
தன் படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து "கோமாதா என் குலமாதா'', "மாணவன்'', "ஆட்டுக்கார அலமேலு'', "அன்புக்கு நான் அடிமை'', கமலஹாசன் நடித்த "தாயில்லாமல் நான் இல்லை'', ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்'', "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'' முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.
முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் ஆகியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் டைரக்ஷனில் சிவாஜிகணேசன் நடித்த "தவப்புதல்வன்'' படம் 100 நாட்கள் ஓடி வசன கர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த "பொல்லாதவன்'' படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.
ஜாவர் சீதாராமன் எழுதிய "பணம், பெண், பாசம்'' என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார்.
நடிகர் முத்துராமன், தூயவனின் நெருங்கிய நண்பர். அவர், படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணம் அடைந்தார்.
இதேபோல், தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீர் என்று காலமானார். இந்த இரு மரணங்களும், தூயவனை வெகுவாக பாதித்தன.
இதன் பிறகு, வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
நண்பர் சக்திவேலுடன் இணைந்து "எஸ்.டி.கம்பைன்ஸ்'' என்ற பட நிறுவனத்தை தொடங்கி, "விடியும் வரை காத்திரு'' என்ற படத்தை தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும்
நடித்தார்.நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்யராஜ் முத்திரை பதித்து வந்த காலக்கட்டத்தில், "ஆன்டி ஹீரோ''வாக - அதாவது வில்லன் மாதிரியான கதாபாத்திரத்தில் "விடியும் வரை காத்திரு'' படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால், படம் சுமாராகவே
ஓடியது.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க "கேள்வியும் நானே பதிலும் நானே'' படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.
எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார், தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.
அந்தக் கதையை, ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்கு பிடித்துப்போயிற்று. "படம் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன்'' என்றார்.
அந்தப்படம்தான் "அன்புள்ள ரஜினிகாந்த்.'' எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும், துர்க்கா தமிழ்மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நட்ராஜ் டைரக்ட் செய்தார்.
1984 ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இதுகுறித்து, தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:-
"ரஜினி சார் நடித்த "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'', "அன்புக்கு நான் அடிமை'', "ரங்கா'' முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக்கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் "அன்புள்ள ரஜினிகாந்த்.''
கதை ரஜினிக்கு பிடித்து விட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார்.
படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.சி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.
உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் கொடுத்தார். "கணபதி வேல் முருகன் கம்பைன்ஸ்'' என்ற பேனரில், "அன்புள்ள ரஜினிகாந்த்'' தயாராகியது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன், குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் நூறு நாட்கள் ஓடியது.
சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.''
இவ்வாறு ஜெய்புன்னிசா கூறினார்.
ஆர்.சுந்தரராஜன் டைரக்ஷனில் தூயவன் தயாரித்த "வைதேகி காத்திருந்தாள்'' அற்புதமான படம். இதில், அடிதடி இல்லாத குணச்சித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார்.
விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, "அழகு மலராட...'' நடனக் காட்சியில் மெய்சிலிர்க்கச் செய்தார்.
1984 அக்டோபர் 23-ந்தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
விஜயகாந்த் - ராதிகா நடித்த "நானே ராஜா நானே மந்திரி'', கவுண்டமணி கதாநாயகனாக நடித்த "தலையாட்டி பொம்மைகள்'' ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.
தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் "உள்ளம் கவர்ந்த கள்வன்.'' இந்தியில் வெளியான "சிட்சோர்'' படத்தின் உரிமையைப் பெற்று, அக்கதையை தமிழில் தயாரித்தார்.
படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தபோது, 1987 ஜுலை 11-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு, திடீரெனக் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 41 தான்.
தூயவன்-ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு தூயவன் "பி.காம்'' படித்தபின் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.
டெலிவிஷன் சீரியல்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவர். "அபர்ணா'' அவர் உருவாக்கிய டெலிவிஷன் சீரியல்களில் ஒன்று.
ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்.

அறிமுக இயக்குநர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் நடிகர் சரத்குமார் தனது 2-வது ஆட்டத்தை துவக்கியிருக்கிறார்.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘2-வது ஆட்டம்’. இதில் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, மைம் கோபி, நந்தினி ராய், சுரேஷ் மேனன், சேதன், நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை - கே எஸ் சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பு - பிரவீன் ஆன்டனி, கலை - வைர பாலன். படம் பற்றி கூறிய இயக்குனர்...

“எங்களுடைய இளம் படகுழுவினரின் உற்சாகத்துக்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். சரத் சார் போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். இன்றைய சினிமாவை பற்றிய அவரது புரிதல் போற்றக் கூடியது. அவரது திறமைக்கு சவால் விடும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என நாங்கள் உழைக்கிறோம். பூஜையுடன் எங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறோம்” என்றார்.