என் மலர்

  நீங்கள் தேடியது "Sathuranga Vettai 2"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2.
  • இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

  கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சதுரங்க வேட்டை'. அரவிந்த் சாமி நடிக்க 'சதுரங்கவேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

  இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி உள்ளார். முந்தைய பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.


  சதுரங்கவேட்டை 2

  தயாரிப்பாளர் மனோபாலாவின் பிக்டர்ஸ் ஹவுஸ் அண்டு சினிமா சிட்டி நிறுவனம் தயாரித்துள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படம் ஆன் ஸ்கை டெக்னாலஜி பிரைவெட் லிமிடேட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வெளியிட இருக்கிறார்.

  இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி இருப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரச்சனையை பேசி தீர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #SathurangaVettai2 #ArvindSwami
  நடிகர் மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்க `சதுரங்க வேட்டை 2' என்ற படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அரவிந்த் சாமி தனது சம்பளபாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று மனோ பாலா மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கை விசாரித்து மனோ பாலா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மனோபாலா பதில் மனுவில் அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

  ஐகோர்ட்டுக்கு தகவல் சொல்லாமல் தான் `சதுரங்க வேட்டை 2' படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்றும் முதல் தவணையாக 25 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் உறுதியாக கூறி இருந்தார்.  இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு மனோபாலா, அரவிந்த்சாமி இரு தரப்பினரும் அக்டோபர் 12-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwami

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `சதுரங்க வேட்டை-2' படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கி ரூ. 1.79 கோடியை பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்து வழக்கு விசாரணையில் மனோபாலாவுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwamy
  நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `சதுரங்க வேட்டை'.

  இதன் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலா தயாரிக்க அரவிந்த்சாமி, திரிஷா நடித்தனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

  இதற்கிடையே அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.  இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

  அரவிந்த்சாமி தரப்பு வாதத்தை கேட்ட ஐகோர்ட்டு வழக்கை செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று மனோபாலா தரப்பு அளிக்கும் பதிலை வைத்து அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா? என்று தெரிய வரும். #SathurangaVettai2 #ArvindSwamy

  ×