search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vivek Oberoi"

  விவேக் ஓபராய் பதிவிட்ட ட்விட், சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் அவர் அளித்துள்ளார்.
  வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் வெளியிட்டன. தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

  இந்த கருத்துக்கணிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர். கடந்த காலங்களில் கருத்துக் கணிப்புகளின்படி ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

  இந்த கருத்துக் கணிப்பு களை விமர்சிக்கும் வகையில் பாலிவுட் நடிகரும் பா.ஜனதாவின் ஆதரவாளருமான விவேக் ஓபராய், அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  அதில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று கூறி சல்மான்கானுடன் ஐஸ்வர்யா ராய் இருக்கும் படத்தையும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்று கூறி தன்னுடன் ஐஸ்வர்யாராய் இருக்கும் படத்தையும் தேர்தல் முடிவு என்று கூறி அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.  ஐஸ்வர்யா ராய் முதலில் சல்மான்கானையும் பின்னர் விவேக் ஓபராயையும் காதலித்தார். பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

  விவேக் ஓபராயின் இந்த ட்விட்டுக்கு கண்டனங்கள் எழுந்தன. அந்த படத்துக்கு மேல், ‘இது கற்பனைத்திறன். இங்கு அரசியல் இல்லை. வாழ்க்கை மட்டுமே’ என்று எழுதியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் விவேக் ஓபராயின் இந்த ட்விட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய பெண்கள் ஆணையம் அவருக்குக் கண்டனம் தெரிவித்தது.

  இந்த சர்ச்சை பெரிதானதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ஓபராய், மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் நன் பகிர்ந்ததில் என்ன தவறு? நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்பேன். நான்  செய்ததில் என்ன தவறு என கூறினார்.

  இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய மீம்-ஐ நீக்கிவிட்ட விவேக் ஓபராய், ‘ஒருசிலரால் நகைச்சுவையாக பார்க்கக்கூடிய விஷயம் பிறரால் அப்படி பார்க்கப்படுவதில்லை. நான் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2000 பெண்களின் முன்னேற்றத்திற்காக உதவியிருக்கிறேன். எனினும், எனது பதிவு சிலரது மனதை புண்படுத்தியதாக அறிந்ததால் அந்த பதிவை நீக்கிவிட்டேன். மேலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
  மோடி படத்துக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதாக கூறி சினிமா தணிக்கை குழு தலைவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. #PMNarendraModi #ModiBiopic
  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பி.எம் நரேந்திர மோடி திரைப்படம் ஏப்ரல் 11-ந்தேதி வெளியாக உள்ளது. ஓமங் குமார் இயக்கி விவேக் ஓபராய் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. இந்த திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளியாவது பா.ஜனதாவுக்குச் சாதகமாக அமையும் என கருத்து தெரிவித்துள்ளன.

  படம் வெளியாகும் அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 20 மாநிலங்களின் வாக்குப்பதிவு அன்று நடைபெற உள்ளது.  இதுபற்றி மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் அமேய் கோப்கர் தன்னுடைய அறிக்கையில், “ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன் அதன் தயாரிப்பாளர் தணிக்கை குழுவுக்கு 58 நாட்களுக்கு முன் சமர்ப்பித்திருக்க வேண்டுமென்பது தணிக்கை விதி.

  ஆனால், ஏன் மோடியின் திரைப்படத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன? அரசாங்கத்தைச் சமாதானப்படுத்த இந்தப் படத்துக்காக தங்கள் விதிகளைத் தளர்த்திய தணிக்கைக் குழுவுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி உடனடியாக தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்”

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  மோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை என்று படக்குழுவினர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர். #Modi #PMNarendraModi
  பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் படத்தில் உள்ளன.

  இந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை படம் உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.  இதைத்தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்கள். அதில் மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
  தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் வினயை விதேயா ராமா என்ற படம் தமிழில் வெளியாக இருக்கிறது. #RamCharan
  தெலுங்கு ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும் படம் "வினயை விதேயா ராமா" இப்படம் தமிழில் வெளியாகிறது. பிரிபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கியுள்ளார். 'பரத் என்னும் நான்' என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். 

  மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், சென்டிமென்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா"  உருவாகியுள்ளது.  தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. டி.வி.வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் ‘வினயை விதேயா ராமா’ பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது.
  தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை கதையில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #Modi #Ajith #ThalaAjith
  அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமா படமாகி வருகிறது. நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் படங்களாகி ஏற்கனவே வந்தன.

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் பால்தாக்கரே, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது.  இந்த வரிசையில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் மோடி வேடத்துக்கு நடிகர் தேர்வு நடந்தது. முன்னணி நடிகர்கள் பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராயை மோடி வேடத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர். இதனை படத்தின் இயக்குனர் ஓமுங்குமார், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் உறுதிப்படுத்தினர். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. விவேக் ஓபராயின் முதல் தோற்றத்தை ஓரிரு நாளில் வெளியிடுகின்றனர்.

  விவேக் ஓபராய் தமிழில் அஜித்துக்கு வில்லனாக ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  அஜித் சினிமாவில் நுழைந்து இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகும் நிலையில், விவேகம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த நடிகர் விவேக் ஓபராய் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #26YrsOfUnparalleledAJITH #ThalaAjith
  செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அஜித். அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார்.

  இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அக்ரிமென்ட்டில் அஜித் கையெழுத்திட்ட நாள் 1992-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி. அஜித் கையெழுத்திட்டு இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன.

  அதைக் கொண்டாடும் வகையில், அஜித் ரசிகர்கள் பல்வேறு ட்வீட்டுகளைப் பதிந்து வருகின்றனர். இந்தி நடிகர் விவேக் ஓபராய் “26 ஆண்டுகள் என்னுடைய நண்பா, லெஜண்டாக மிகச்சிறந்த வளர்ச்சி. லவ் யூ பிரதர்.

  பல்வேறு மறக்க முடியாத செயல்கள் மூலம் எங்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறாய் என்று நிச்சயமாகக் கூறமுடியும். எனக்கு ‘விஸ்வாசம்’ இருக்கா” என்று ட்விட்டரில் கூறியுள்ளார். விவேக் ஓபராய் அஜித்துக்கு வில்லனாக விவேகம் படத்தில் நடித்திருந்தார். மேலும் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #26YrsOfUnparalleledAJITH #Thala #Ajith  #Viswasam

  ×