என் மலர்
சினிமா

நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை கதையில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #Modi #Ajith #ThalaAjith
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமா படமாகி வருகிறது. நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் படங்களாகி ஏற்கனவே வந்தன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் பால்தாக்கரே, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது.

இந்த வரிசையில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் மோடி வேடத்துக்கு நடிகர் தேர்வு நடந்தது. முன்னணி நடிகர்கள் பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராயை மோடி வேடத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர். இதனை படத்தின் இயக்குனர் ஓமுங்குமார், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் உறுதிப்படுத்தினர். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. விவேக் ஓபராயின் முதல் தோற்றத்தை ஓரிரு நாளில் வெளியிடுகின்றனர்.
விவேக் ஓபராய் தமிழில் அஜித்துக்கு வில்லனாக ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






