search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழை"

    • மாதவராயர் பாலர்பள்ளி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது
    • 51 நலிவுற்ற பெண் முதியோர்களுக்கும் 3 நலிவுற்ற ஆண் முதியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தில் அமைந்து உள்ள மாதவராயர் பாலர் பள்ளி மன்றம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி 54 நலிவுற்ற ஏழை முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மன்ற செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இதில் 51 நலிவுற்ற பெண் முதியோர்களுக்கும் 3 நலிவுற்ற ஆண் முதியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் நலிவுற்ற ஏழை முதியோர்களுக்கு இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாதவராயர் பாலர் பள்ளி குழந்தைகள், மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நிலம் வாங்குவோர் விற்போர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நிலம் வாங்குவோர் விற்போர் நலச்சங்க குமரி மாவட்ட தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பதிவு செய்யும் வகையில் சில தளர்வுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் சொந்த வீடுகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக திருமணம், படிப்பு, தொழில், மருத்துவ தேவைகள் ஆகியவைகளுக்கு கூட நிலங்களை விற்க முடி யாத நிலை உள்ளது. 2016-க்கு பிறகு வாங்கிய நிலங்களை பிரிப்பதற்கோ, விற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 22-ஏ என்கிற பெயரில் ஏழை, எளிய மக்கள் வாங்கிய இடங்களுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் மறு பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதனை தளர்வு படுத்தி ஏழை, எளிய மக்களின் நலனை கருதி பத்திரப்பதிவை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நடந்தது
    • மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்

    நாகர்கோவில் :

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்க கிருஷ்ணன் தலைமையில் அன்னதானமும், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மைக்கேல் ரத்தினம் தலைமையில் அழகப்பபுரம் மெயின் பஸ் நிறுத்தத்தில் வைத்து ஏழை, எளியவர்களுக்கு சேலை மற்றும் வேஷ்டிகளை மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாபு, வின்சென்ட் கிங், ஒன்றிய செயலாளர் பரமராஜா, மாவட்ட அணி நிர்வாகி மகேஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் லாசர், பேரூர் செயலாளர்கள் லிங்கம் மற்றும் பரமாத்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • வசதிகள் செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியில் ரூ.28.10 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், ஊராட்சி நிதி மற்றும் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் நுள்ளிவிளை ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவுக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ., மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சாதி, மதம், இனம், அரசியல் என எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து செல்லும் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    நமது மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பணிகளை செயல்படுத்து வதற்காக அதிகளவில் நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நிதி பெறப்பட்ட பின் நமது மாவட்டத்தில் சாலை தொடர்பான பணிகள் விரைவில் முடிவடையும்.

    4 வழிச்சாலை பணிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1150 கோடி மறுமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை யினை மேற்கொண்டு வருகிறோம்.

    மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று கும்பாபிஷேகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்திலேயே முதல் முறையாக கண்டன் விளை பகுதியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏழை பெண்கள் சுய உதவி தொழில் செய்வதற்கு முன்வர வேண்டும். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாறுவோம் என்ற உறுதிமொழியினை பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் எடுத்து கொண்டார்.

    கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இடையிலான போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப்ப தக்கமும், மும்முறை தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்று பழைய சாதனையை முறியடித்த அபிநயாவுக்கு நுள்ளிவிளை ஊராட்சி சார்பில் ரூ.20 ஆயிரத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

    • கன்னியாகுமரியில் இருந்து நேபாளம் வரை நடக்கிறார்
    • பைக், பணம் இருந்தால் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா?

    கன்னியாகுமரி:

    நாகர்கோயில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி நிஷாந்த்.இவர் கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் லடாக் வரை நடைபயணம் மூலமாக சென்று 3 உலக சாதனை புத்தகம் மற்றும் பல சாதனைகளில் இடம் பிடித்து உள்ளார்.

    இந்த முறை புதியதாக சாதனை படைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடைபயணம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து உள்ளார்.

    அதன்படி அவர் தனது நடைபயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து நேற்று தொடங்கினார். காந்தி வடிவில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தனா திரில்லாபூர் காந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் நாகேந்திரன் ஆகியோர் அவரது நடை பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    பைக், பணம் இருந்தால் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா ஒரு ஏழை நினைத்தால் அவனது தன்னம்பிக்கையால் நடந்தே சாதிக்கலாம் என்று ஏழை மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடந்து பயணம் செய்கிறேன். என்று அவர் கூறினார்.

    இந்த பயனத்தை தொடக்கி வைத்த முத்தனா திரில்லாபூர் காந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் நாகேந்திரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

    • கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம், குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.
    • அரசு மருத்துவமனையிலுள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர்.

    தஞ்சாவூர்:

    புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002ஆம் ஆண்டு முதல் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது.

    மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கொரோனா நோய் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள், மளிகை சாமான்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் இதர நோய்களினால் பாதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தினமும் பசியால் வாடுவதை கண்டு அவர்களுக்கு அன்னை தெரசா அமுதசுரபி அன்னதான திட்டத்தின் மூலம் இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது .

    இத்திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இத்தொடர் திட்டத்தை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடக்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு இடைவிடாமல் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இலவசமாக அன்னதானம் வழங்கிவரும் பவுண்டேசன் பணியினை பெரிதும் பாராட்டினார்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொ) மருதுதுரை முன்னிலை வகித்தார். மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து தலைமை தாங்கினார்.

    பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு நாள் கூட தவறாமல் தினந்தோறும் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டதின் மூலம் தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம். கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம் மற்றும் குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அன்பு இல்லம், தஞ்சை நகர் பகுதிகள், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அன்ன தானம் வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், சாலை ஓரங்களில் வசிப்ப வர்கள், நோயுற்றவர்கள், முதியவர்கள், கூலித்தொ ழிலாளர்கள், அரசு மருத்துவ மனையிலு ள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் ஆகியோர் பயனடைகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேசன் அறங்காவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, ரேணுகா மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மகேஷ்வரன், சூசைராஜா, கிறிஸ்டி, வர்ஷினி, ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×