search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுயஉதவி தொழில் செய்வதற்கு ஏழை பெண்கள் முன்வர வேண்டும்
    X

    அமைச்சர் மனோதங்கராஜ் "குப்பையில்லா குமரி, மக்கள் இயக்கமாக மாறுவோம்" என்ற உறுதிமொழியினை பொது மக்களுடன் எடுத்து கொண்டபோது எடுத்த படம்.

    சுயஉதவி தொழில் செய்வதற்கு ஏழை பெண்கள் முன்வர வேண்டும்

    • வசதிகள் செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியில் ரூ.28.10 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், ஊராட்சி நிதி மற்றும் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் நுள்ளிவிளை ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவுக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ., மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சாதி, மதம், இனம், அரசியல் என எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து செல்லும் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    நமது மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பணிகளை செயல்படுத்து வதற்காக அதிகளவில் நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நிதி பெறப்பட்ட பின் நமது மாவட்டத்தில் சாலை தொடர்பான பணிகள் விரைவில் முடிவடையும்.

    4 வழிச்சாலை பணிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1150 கோடி மறுமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை யினை மேற்கொண்டு வருகிறோம்.

    மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று கும்பாபிஷேகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்திலேயே முதல் முறையாக கண்டன் விளை பகுதியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏழை பெண்கள் சுய உதவி தொழில் செய்வதற்கு முன்வர வேண்டும். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாறுவோம் என்ற உறுதிமொழியினை பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் எடுத்து கொண்டார்.

    கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இடையிலான போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப்ப தக்கமும், மும்முறை தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்று பழைய சாதனையை முறியடித்த அபிநயாவுக்கு நுள்ளிவிளை ஊராட்சி சார்பில் ரூ.20 ஆயிரத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

    Next Story
    ×