search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினி காந்த்"

    • மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது
    • 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டுஅந்த படம் வெளியானது

    நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.

    கமலுக்கு 'விக்ரம்' என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்து உள்ளார். அதேபோல இந்த படத்தையும் எடுக்க லோகேஷ் முடிவு செய்து உள்ளார்.ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.


     


    மேலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் ரஜினியின் கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு சூழப்பட்டிருந்தது.

    அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.இந்நிலையில் தற்போது தலைவர் -171 படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ரஜினியின் புதிய படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    இந்த பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டுஅந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் ரஜினி காந்த் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினி காந்த் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை போயர்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த், "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த நன்நாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்" எனக் கூறினார்.

    • தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
    • தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படம் திரைக்கு வந்ததும் இமயமலைக்கு சென்று கோவில்களில் தரிசித்துவிட்டு திரும்பி இருக்கிறார். அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இது ரஜினிக்கு 170-வது படம். சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் இயக்கியுள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது. தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.

    இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தலைவர் 170 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், தலைவர் 170 பெயரில் உருவாகி வந்த படத்துக்கு 'வேட்டையன்' என்று படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் பட தலைப்புடன் படக்குழு டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • ரஜினிகாந்த்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வருண் சக்கரவர்த்தி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.

    சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,

    வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசினார்.
    • ரஜினி காந்த்தை அமைச்சர் ரோஜா, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், மறைந்த நடிகருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வாரம் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசினார். இதனால் ரஜினி காந்த்தை அமைச்சர் ரோஜா, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

    இதற்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். ரஜினியை விமர்சிப்பதை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் நிறுத்தவில்லை.

    இந்த நிலையில் ரஜினியை சந்திரபாபு நாயுடு போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இந்த விமர்சனங்கள் குறித்து பேச்சு எழுந்தது. விமர்சனங்கள் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம் என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த ரஜினி, "அப்படி எதுவும் நான் நினைக்கவில்லை. விமர்சனங்கள் பற்றி சிந்திக்கவே இல்லை.

    யார் என்ன கூறினாலும் உங்கள் மீதுள்ள மரியாதை என்றும் மாறாது" என்று கூறியுள்ளார்.

    • திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 73-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். வழக்கம் போல நாடு முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.

    திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும்போல் கூடுவார்கள். காலையில் போயஸ்கார்டன் பகுதியே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை 9 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து ரஜினி வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பார். இது வழக்கமான காட்சி.

    இந்தாண்டு அவரது பிறந்த நாள் ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம் பாபா திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி இருப்பதுதான், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் பாபா திரைப்படம் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டதாகப் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

    இன்றைய சூழலில் ரசிகர்களிடம் வெளிப்பட்டிருக்கும் ஆன்மீக சிந்தனையால் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது.

    இதற்கு இளம் தலைமுறையினரிடம் எழுந்திருக்கும் ஆன்மீகத் தேடல்தான் காரணம் என்று ரஜினியின் மனதில் தோன்றி இருக்கிறது. இந்த சிந்தனையால் பாபா படத்தை நவீனப்படுத்தி வெளியிட்டால் அது கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நினைத்தார்.

    அதனால் படத்தை நவீனப்படுத்த சுரேஷ் கிருஷ்ணா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசித்து அதற்கான வேலைகளில் இறங்கி இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பாபா திரைப்படம் வெளியானது. படத்தில் பல காட்சிகள் வெட்டப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டு வெளியாயின.

    ரஜினி நினைத்தது போலவே 1000 திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய வெளியீட்டுக்கு நடப்பது போலவே அதிகாலை 4 மணிக்காட்சிக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

    ரஜினியே எதிர்பார்க்காத வகையில் மறு வெளியீட்டிற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொந்த படமான பாபா படத்தின் மீது இருந்த தோல்விப்படம் என்ற கறையை நீக்கியதில் தனது ரசிகர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது என்று நினைக்கும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு தன்னுடைய 73-வது பிறந்த நாளில் வீட்டில் ரசிகர்களை சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதற்காக போயஸ் தோட்ட வீட்டின் உள்ளேயே சிறிய அளவிலான மேடை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதிகாலையில் வீட்டின் முன்பாக வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட உள்ளன. பாபா வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு ரஜினியை நாளை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள்.

    ×