வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு... இன்றே விசாரிக்கிறது மதுரை ஐகோர்ட்

படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு... இன்றே விசாரிக்கிறது மதுரை ஐகோர்ட்
Published on

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள, இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த நிலையில், 'வேட்டையன்' படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றே விசாரணைக்கு வர உள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com